Monday, February 23, 2009

நாட்டு சரக்கு - ஆனாலும் ஷங்கர் மாதிரி வராது

சந்திராயன் 1 யை தொடர்ந்து 2012 இல், சந்திராயன் 2 என்ற பெயரில் ஒரு இயந்திர மனிதனை சந்திரனுக்கு அனுப்ப போகிறதாம் இஸ்ரோ. இவர்கள் எந்தளவு கச்சிதமாக தங்கள் வேலையை செய்கிறார்கள் என்று எனக்கு சந்தேகம் இருக்கிறது.

இரண்டரை மணி நேரம் ஓடும் படத்தில் ஒரு ரீல் எந்திரனை காட்டவே நம்ம ஊர் டைரக்டர் ஷங்கர், 2-3 வருடங்கள் எடுத்துக்கிறாரு. கேட்டா, பெர்ஃபெக்டா வரணும்ன்னா அவ்ளோ நாள் ஆகும்’ங்கறாரு. இவுங்க என்னனா, மூணு வருசத்துல நிலவுக்கே ரியல் எந்திரனை அனுப்பறாங்க.

----

மகள் வயசு நடிகை கூட ஒரு நடிகர் ஜோடியா நடிக்கலாமான்னு நாமெல்லாம் கேள்வி கேட்டுட்டு இருக்கோம். ஆனா, ஒரு கன்னட படத்துல (Mussanje Gelathi) ஒருத்தர் அவர் நிஜ மகளோடயே ஜோடியா நடிக்குறாரு. இது ஒரு லவ் ஸ்டோரியாம். ஹீரோ ஸ்ரீநிவாஸ் படத்துல ஒரு ப்ரொஃபஸர். அவரோட மகள் ஷாலினி, அவர் பணிபுரியும் கல்லூரியில் படிக்கும் மாணவி. அவுங்க ரெண்டு பேருக்கும் லவ். கருமம் கருமம்.

கேட்டா, இது ஒரு கலை. இதை சினிமாவா பாருங்கன்னு சொல்லுவாங்க.அப்புறம் எதுக்கு ஹீரோ - ஹீரோயினுக்குள்ள கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்ன்னுலாம் சொல்றீங்க.

------

ஏற்கனவே இன்போஸிஸ் சொல்லி இருந்தாங்க. இந்த வருஷம் சம்பள உயர்வெல்லாம் கிடையாது. சம்பள குறைப்பு தான் உண்டுன்னு. இப்ப கவர்மெண்ட்டும் சொல்லியிருச்சு. ஊழியர்களை வேலையை விட்டு தூக்காதீங்க. சம்பளத்தை வேணா குறைச்சுக்கோங்கன்னு. ஸோ, சம்பள குறைப்பு நியாயமான விஷயமாயிடுச்சு.

அப்ரைசல் டைம் வர போகுது. மத்த வருசஷங்கள போல இந்த வருசமும் பேசிக்குவாங்க. உனக்கு எத்தனை பர்சண்ட், எனக்கு எத்தனை பர்சண்ட்ன்னு. ஆனா, இந்த டைம் மைனஸ்ல பேசிக்குவாங்க.

------

ஜெர்மன்ல ஒரு நாய், ‘மா மா’ன்னு பேசுதாம். நாய் பேரு அர்மானி. ஜெர்மனி முழுக்க பயங்கர பாப்புலர். அதோட வீடியோவை தான் அந்நாட்டு மக்கள் இப்ப விரும்பி பார்க்கிறார்களாம்.

இப்படி தான் ரட்சகன் படத்துல வடிவேலு ஒரு ஆட்டுக்கு நாய் வேஷம் போட்டு, அது இங்கிலிஷுல May சொல்லுதுன்னு கப்சா அடிச்சு விடுவாரு. அந்த மாதிரி இருந்திட போகுது. பார்க்க கொஞ்சம் ஆடு மாதிரிதான் இருக்கு.

-----

பெங்களூர்ல ஒரு பைக் திருடன். இதுவரைக்கும் 52 பைக்குகள திருடியிருக்கான். அத்தனை பைக்குகள திருடி என்ன பண்ணியிருக்கான் தெரியுமா? பிரியாணி வாங்கி தின்னுருக்கான். அட, நிஜமாங்க!. ஆள் தீவிர பிரியாணி பிரியர். பைக்க திருடிட்டு போற வழியில, பிரியாணி சாப்பிடுவானாம். பில்லுக்கு காசு இருக்காது. ‘இந்த பைக்க வச்சிருங்க. பணம் கொண்டு வாரேன்’ன்னு சொல்லிட்டு அப்படியே போயிடுவானாம்.

அடப்பாவி, பொல்லாதவன் படத்துல வருற மாதிரி திருடுன பைக்க வெளிநாட்டுக்கு அனுப்பியிருந்தா கூட ஒண்ணும் தோணியிருக்காது. ஒரு பிளேட் பிரியாணிக்கு கொடுத்து பைக் மதிப்ப குறைச்சிட்டியேடா?

6 comments:

வண்ணத்துபூச்சியார் said...

ஷங்கர் ஒரு "டப்பா" டைரக்டர்.

அறிவியல் அறிஞர்களை கேவல படுத்த வேண்டாம்.

சரவணகுமரன் said...

வண்ணத்துபூச்சியார்,

தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க... அத ஷங்கரை கிண்டல் செய்யும்வாறு எழுதினேன்... தவறாக இருக்கும் பட்சத்தில் மன்னிக்கவும்...

RAMASUBRAMANIA SHARMA said...

"எல்லா விஷயங்களும் நல்லாவும் இருக்கு....நகைச்சுவையாகவும் இருக்கு"....

சரவணகுமரன் said...

நன்றி RAMASUBRAMANIA SHARMA

Bala said...

unnoda bike safe a erruka?

சரவணகுமரன் said...

காலையில இருந்திச்சு... இப்ப போயி பார்த்தா தான் தெரியும்...