Wednesday, February 11, 2009

எஸ். வீ. சேகர் காமெடி

இது அவருடைய அரசியல் வாழ்வை பற்றிய பதிவு இல்லை.

சின்ன வயசுல, எஸ்.வீ.சேகர் நாடகங்கள வீட்டுல டேப்புல போட்டு சுத்தி உக்கார்ந்து கேட்போம். ரொம்ப நாள் கழிச்சு, இப்ப கேட்டேன்.

இப்ப, நான் படங்களில் பார்த்து சிரிக்குற காமெடி கூட ஒப்பிட்டு பார்த்தால், நகைச்சுவையில் உள்ள மாற்றம் தெரியுது. ஒரு வேளை, இன்னமும் நாடக நகைச்சுவை இப்படித்தான் இருக்குமோ?

யாமிருக்க பயமேன் நாடகத்தில் இருந்து சில.

---

என் வீட்டுல ரெண்டு பொண்டாட்டிக அடிக்குற கொட்டம் தாங்க முடிலப்பா...
என்கிட்டே விட்ருங்க.
ஆங்!
நான் டைவர்ஸ் வாங்கி தாரேன்.
டைவர்ஸ் வாங்குறது தமிழ் பண்பாடு இல்லையே?
ரெண்டு பொண்டாட்டி கட்டுறது மட்டும் தமிழ் பண்பாடா?
அது சங்ககால தமிழ் பண்பாடு.
இப்படி சொல்லியே ஆளாளுக்கு அஞ்சாறு ஒதுக்கிருவீங்களே?

---

யோவ்! முதல்ல என்னோட சொத்தை பிரிச்சி கொடு
சொத்த பிரிக்கறதா? நான் சாகறது வரை அது நடக்காது.
ஓகே. அதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்.

----

மூதாதையர் உயில் என்ன சொல்லுது, தெரியுமா?
என்ன சொல்லுது?
பிரிக்க கூடாதுன்னு.
உயில் கவரையேவா?

----

சித்தப்பா : எனக்கு சின்ன வயசுலேயே பொய் பல். அதாண்டா எனக்கு கல்யாணம் ஆகல.
சேகர் : அதான். பொய் பல், பொய் கண் இப்படி என்னலாம் பொயோன்னு நினைச்சி பொண்ணுங்க பயந்திருப்பாங்க.
சித்தப்பா : எனக்கு செவ்வாய் தோஷம்'டா
சேகர் : இல்ல... வேறென்னமோ மர்மமான காரணம் இருக்கு.
சித்தப்பா : இல்லடா...
சேகர் : இருக்கு.
சித்தப்பா : இல்லடா...
சேகர் : இருக்கு.
சித்தப்பா : முடியலடா...
சேகர் : அப்படி ஒத்துக்க.
சித்தப்பா : ஐயோ...... உன்னோட மல்லு கட்ட முடியலடான்னு சொன்னேன்.

---

தரகர் : பொண்ண பத்தி சொல்றேன், நல்லா கேட்டுக்க.
சேகர் : ம்ம்ம்....
தரகர் : இந்த நெத்தி இருக்கே நெத்தி, ஸ்ரீதேவி நெத்தி.
சித்தப்பா : நெத்தியடி
சேகர் : சித்தப்பா, உணர்ச்சிவசப்படதே. பொண்ணு எனக்கு.
தரகர் : காது இருக்கே, ஒரு காது குஷ்பு காது; ஒரு காது ரூபிணி காது
சேகர் : பொண்ணுக்கு மொத்தம் ரெண்டு காது தானே?
தரகர் : ஆமாம் தம்பி. கண்ணு ரெண்டும் ஸ்ரீவித்யா கண்ணு.
சேகர் : ஓஹோ!
தரகர் : இந்த மூக்கு இருக்குல்ல, மூக்கு?
சேகர் : சுகன்யா மூக்கா?
தரகர் : அதான் இல்ல.
சேகர் : மூக்கே இல்லையா? அந்த இடத்துல என்ன இருக்கு? பிளாட் போட்டு வித்துடாங்களா?
தரகர் : ஐயோ, தம்பி! இந்திரா காந்தி மூக்குன்னு சொல்ல வந்தேன்.
சேகர் : என்னய்யா இது? நீ சொல்றது எல்லாம் மொத்தமா கூட்டி பார்த்தா, நம்ம ஜனகராஜுக்கு பொம்பள வேஷம் போட்டமாதிரி வருதேயா?

---

சித்தப்பா : இந்த கிழவியை நான் டைவர்ஸ் பண்றேன்.
சித்தி : அய்யய்யோ! என்ன வார்த்தை சொல்லிடீங்க? கிழவியா?
சேகர் : ஒ! அதுக்குதான் அதிர்ச்சியா? டைவர்சுக்கு இல்லையா?

----

14 comments:

pudugaithendral said...

டைமிங் காமெடியில் கிங் அவர்.

அவரின் அனைத்து நாடகங்களும் எம்பி3 வடிவில் இருந்தது என்னிடம். தினமும் கேட்டுக்கொண்டு சிரித்து மகிழ்வோம்.

யாரோ சுட்டுகிட்டு போயிட்டாங்க.

காட்டுல மழை, ஹனி மூன் ஹைதராபாத் நாடகங்கள் ஆல் டைம் பேவரிட்.

சரவணகுமரன் said...

ஆமாம் புதுகை தென்றல்...

முன்பு ஒரு கேசட்டில் ஒரு நாடகம் என்று இருந்தது. அவரே நாடகத்தில் சொல்லுவார், "பேசிட்டே இருக்காதே, பி சைடு எண்டு வந்துடிச்சி'ன்னு

பிறகு, அவரது எல்லா நாடகங்களும் சேர்ந்து ஒரே சிடியில் கிடைத்தது. உங்களை போலவே, எனக்கும் நடுவில் சில நாட்கள் சிடியை காணவில்லை. இப்போது கிடைத்து விட்டது. கேட்டு கொண்டு இருக்கிறேன்.

ஆனால் இதுவரை அவரது ஸ்டேஜ் நாடகங்களை நேரில் பார்த்ததில்லை.

Anonymous said...

anaithu mp3 dramas www.maheswaran,comil ullathu...

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி, senthil

முரளிகண்ணன் said...

சுவையான தொகுப்பு

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

கணேஷ் said...

சித்தப்பாவும், சேகரும் பேசுவது தான் டாப்.

சரவணகுமரன் said...

வாங்க ராம்சுரேஷ்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

மண்சட்டி said...

அன்பின் குமரன்..
அருமையான வலைத்தளாம்..
மிகவும் இயல்பான நடையில்
தளத்தினை அமைத்துள்ளீர்கள்..
அமீரகத்தில் வாழும் என்னைப்
போன்றவர்களுக்கு ஏற்ப மிகுந்த நகைச்சுவையாக படைத்துள்ளீர்கள்..
வாழ்த்துக்கள்..குமரன்..

அன்புடன் மண்சட்டி
(http://elangovan68.blogspot.com)

சரவணகுமரன் said...

நன்றி இளங்கோவன்

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

மங்களூர் சிவா said...

:))))

சரவணகுமரன் said...

நன்றி மங்களூர் சிவா