Saturday, May 16, 2009

சர்வம் - பாவம்

ஆர்யா-யுவன்-விஷ்ணுவர்தன் காம்பினேஷனில் அறிந்தும் அறியாமலும், பட்டியலை தொடர்ந்து வந்திருக்கும் படம். முந்திய ரெண்டு படங்களும் பிடித்திருந்தது. அந்த எதிர்பார்ப்பில் பார்த்தால், ஏமாந்துவிட்டேன்.

படத்தின் ட்ரெய்லருக்காகவே நிறைய காட்சிகள் எடுத்தார்களோ, என்னமோ தெரியவில்லை. ட்ரெய்லரில் இருந்த எபெக்ட், படத்தில் எங்கும் இல்லை.

த்ரிஷாவை ஆர்யா லவ்வும் காட்சிகள், நல்ல ஆரம்பத்தை கொடுத்தது. அதுவும், அந்த இளையராஜா வயலின் இசை, சூப்பர். கேட்க விரும்புபவர்கள், கீழே உள்ள டேப் ரிக்கார்டரில் ப்ளே செய்து கேட்கவும்.



த்ரிஷா இறந்தபின்பு, ஆர்யா பேசும் வசனம் இதுவரை எந்த படத்திலும் பார்த்திராதது. ‘செல்வராகவன் படம் மாதிரி இருக்குல்ல’ என்றான் நண்பன். அந்த காட்சிக்காக மட்டும்.

நல்ல கதைதான். இடைவேளைக்கு பிறகு பின்னி பெடலெடுத்திருக்க வேண்டிய படம், கடும் தொய்வில் சிக்கி கொண்டது. திரைக்கதை இன்னும் ரேஸியாக செய்திருக்கலாம். கடைசியில் அந்த பையன் அடம்பிடிக்கும் காட்சிகள், சரியான கடுப்பை கொடுத்தது. முடிவும் சொல்லி கொள்வது போல் இல்லை.

ரெண்டு பாடல்கள் நல்லா எடுத்திருந்தாங்க. “நீதானே” என்ற பாடலில் ஹைபிட்சின் போது லாரி தெறிப்பதும், கார்கள் மோதி கொள்வதும், பைக் பறப்பதும் அமர்க்களம். இளையராஜா பாடிய பாடல் சரியான சொதப்பல். ஆர்யா டான்ஸ் ஆடுவார் என்று பார்த்தால், ஸ்டில் கொடுத்து கொண்டிருக்கிறார்.

படத்திற்கு ரிச் லுக்கை கொடுத்திருப்பவர்கள், ஒளிப்பதிவாளரும், ஆர்ட் டைரக்டரும். கேமரா பட்டத்துடன் பறக்கிறது. லிப்ட்டில் தலைகுப்புற கீழே வருகிறது. வெளிர் ஆஸ்பிட்டல், பாலைவனம் போல் ஒரு இடம். அதில் துணி காய போட்டது போல் வண்ண வண்ண பேப்பர்கள். காட்டுக்குள், மலை மேல், பாலைவனத்தில் என்று பல இடங்களில் ஒரு கண்ணாடி பெட்டி. கிளைமாக்ஸ் சர்ச், கிருஸ்துவ சிலைகள். இப்படி பாராட்ட பல விஷயங்கள்.

அந்த ஸ்கார்ப்பியாவையும், நாயையும் காட்டும்போது, பார்ப்பவர்களை மிரட்டி இருக்க வேண்டாம்? இந்த படத்தில் அந்த பையனை பார்க்கும்போதும், அந்த பையனின் அப்பாவை பார்க்கும்போதும், ஆர்யாவை பார்க்கும்போதும் எல்லாம் நமக்கு பாவமாக இருந்திருக்க வேண்டும். அதை விட்டு, வில்லன் சக்ரவர்த்தியை பார்க்கும் போது தான் எனக்கு பாவமாக இருந்தது. பையனும் ஓவர் சேட்டை. அவுங்க அப்பாவும் சக்ரவர்த்திக்கிட்ட அது ஆக்ஸிடெண்ட், முடிஞ்சு போச்சுன்னு ஆறுதல்படுத்தாம எடுத்தெறிஞ்சு பேசுறாரு. ஆர்யாவும் சோகமா தாடியை மட்டும் வைச்சுக்கிட்டு, ஜாலியா இருக்காரு. படத்துல வில்லன் மட்டும் தான், பாவமா சுத்திட்டு இருக்காரு.

அப்புறம் இன்னும் சிலர் இப்படி பாவமா திரிஞ்சாங்க. படம் பார்க்க வந்தவுங்க.

10 comments:

Suresh said...

நச் அப்போ ஊத்தல்

சரவணகுமரன் said...

ஆமாங்க சுரேஷ்

Unknown said...

annay neenga vimarsanam solla muyarchi pannunga....

neenga vimarsikkum pothu, kathayoda karuvaya sollala...

Better luck next time

சரவணகுமரன் said...

கதைய சொல்லணுமா என்ன? அதான் எல்லோரும் சொல்லுவாங்களே? திரும்பவும் நான் எதுக்கு?

இது நான் படம் பார்த்த அனுபவம். படம் பார்த்தபின் எனக்கு தோணியவை.

Anonymous said...

வணக்கம் சரவணா,
இப்போ எல்லாம் சினிமாவ பத்தி ரொம்ப கவலைப்பட ஆரம்பிச்சிட்டிங்க..
விடுங்க சரவணா.. நீங்க அதை பத்தி பேசற அளவுக்கு அது வொர்த் இல்லன்னு நினைக்கிறேன்.. உங்க களமே வேற சரவணா..

Anonymous said...

Raj..

Sarvam -- Karumam

சரவணகுமரன் said...

என்ன இது, மகேந்திரன்?

சரவணகுமரன் said...

வாங்க ராஜ்

geethadilli said...

pasanga paathuteengalaa? pasangaluku appaakalaa nadicha andha rendu paerum nallaa act panni irukaanga

சரவணகுமரன் said...

அப்படியா, கீதா? நான் இன்னும் பார்க்கவில்லை.