Friday, May 22, 2009

கண்ணதாசனுக்கும் கருணாநிதிக்கும் என்ன தகராறு?

கண்ணதாசன் யார்?
சினிமா கவிஞர்.

அப்புறம்?
அர்த்தமுள்ள இந்துமதம் போல இந்து மத புகழ்ப்பாடும் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

அப்புறம்?
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று பாடியதோடு நிற்காமல் மது, மாது என்று வாழ்ந்து காட்டியவர்.

அப்புறம்?
அவ்ளோதான் தெரியும் - வனவாசம், மனவாசம் படிக்கும் வரை. இந்த புத்தகங்களை படித்தபிறகு தான் அவர் அரசியலில் எவ்வளவு ஈடுபட்டு இருக்கிறார் என்றும், அதில் எவ்வளவு அடி வாங்கி இருக்கிறார் என்றும் தெரிந்தது.

----

’மருதநாட்டு இளவரசி’ படம் தயாராகிக்கொண்டிருக்கும் போதுதான் கருணாநிதியை பற்றி அறிந்தார் கண்ணதாசன். ’அபிமன்யு’ படத்தில் வரும் கருணாநிதியின் வசனங்கள், அவரை ஆறு நாட்கள் தொடர்ந்து அந்த படத்தை பார்க்கும் அளவுக்கு கவர்ந்தது. அப்பொழுது ஏற்பட்டது கருணாநிதியின் மீதான காதல் என்கிறார் கண்ணதாசன். கருணாநிதியை வகைத்தொகையில்லாமல் புகழ, அவரும் கண்ணதாசனை நேசிக்க ஆரம்பித்து இருக்கிறார். பிறகு, ’காதல் தேசம்’ வினீத், அப்பாஸ் போல இருந்திருக்கிறார்கள். எப்படி? ஒருவர் கையில் இன்னொருவர் தலை வைத்து தூங்கிற அளவுக்கு.

அந்நேரம் கருணாநிதி அரசியலிலும் இருந்ததால், பல விஷயங்களை கண்ணதாசனுடன் பகிர்ந்திருக்கிறார். திராவிடர் கழகத்தில் இருந்து விலகிய சமயம், கருணாநிதி பெரியார் செய்த ’கொடுமை’களை பற்றி கூறி இருக்கிறார். விலகியதில் பெரிதும் மகிழ்ந்திருக்கிறார். திமுக முதல் அறிமுக கூட்டத்திற்கு கருணாநிதியால் அழைத்து செல்லப்பட்டு இருக்கிறார் கண்ணதாசன்.

அச்சமயம் சினிமாவில் கருணாநிதி பட்டையை கிளப்பி கொண்டிருந்தார். கண்ணதாசன் பல வேலைகளை மாறி மாறி பார்த்து, முடிவில் ’கன்னியின் காதலி’ என்ற படத்திற்கு முதல் பாடலை எழுதினார்.

பிறகு கருணாநிதியுடன் பல கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். சில அரசியல்வாதிகளுடன் பழகிய பிறகு அவருக்கு தோன்றியது, “கொண்ட கொள்கையில் எந்த அரசியல்வாதிக்கும் உறுதி இல்லை. எல்லா பிரச்சினைகளிலும் உயிரை கொடுப்பேன் என்று கூறும் அரசியல்வாதிகளுக்கு, எத்தனை உயிர் இருக்கிறது?”

இடையில் சில பக்கங்களில் நண்பர் என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.

“என் நண்பர் தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமாக எழுதுவார். ஆனால், ஒரு பைசா பிச்சை போட மாட்டார். தொழிலாளர்களுக்காக, ரத்தம், நரம்பு என்று கட்டுரை எழுதுவார். ஆனால், அவரிடம் இருக்கும் தொழிலாளர்களுக்கு அதை கண்டு கொள்ள மாட்டார்”. விபச்சாரியிடம் கூட காரியம் முடிந்த பின்பு, காசை வாங்கி வந்தவராம் அவர் நண்பர்.

கண்ணதாசனும் அவர் நண்பரும் வாடகை கார் எடுத்து கொண்டு பெண்களுக்காக அலைந்திருக்கிறார்கள்.

முற்போக்கு என்கிற பேரில் வீட்டில் பொதுவில் வைக்க கூட முடியாதவாறு கதைகளை எழுதியவர் அவர் நண்பர். அதிலிருந்து அவர் எழுத்தை புறக்கணித்தார் கண்ணதாசன்.

யார் அந்த நண்பரோ?

----

“நான் தூத்துக்குடிக்கு பேச போகிறேன்?”

“உனக்கு என்ன பேச தெரியும்? எதுக்கு வீண் வேலை? வரவில்லையென்று சொல்லிவிடு”

இன்னொருவன் முன்னுக்கு வராமலிருப்பதே, தான் வாழ வழியென்பது எனது நண்பனின் சித்தாந்தம் என்கிறார் கண்ணதாசன்.

கல்லக்குடி போராட்டதிற்கு சென்று, சிக்கி, வழக்குக்காக அலைந்து, சிறையில் அடைப்பட்டு கிடந்ததில் அரசியல் வெறுக்க, சிறையில் இருந்து விடுதலையான பிறகு பத்திரிக்கை ஆரம்பித்தார் கண்ணதாசன். கருணாநிதிக்கோ, கல்லக்குடி போராட்டம் நல்ல மைலேஜ்ஜை கொடுக்க, கட்சியில் உயரத்திற்கு சென்றார்.

அடுத்த வந்த தேர்தலில் திருக்கோஷ்டியூரில் நின்றார் கண்ணதாசன். ஏனோதானோவென்று பிரச்சாரம் செய்து தோற்றுவிட்டார். அதற்கு பிறகு வந்த மாநகராட்சி தேர்தலில், கொஞ்சம் கடுமையாகவே உழைத்திருக்கிறார். தேர்தலில், திமுக பெரும்பான்மை பெற்றது. ’சரி, நம்மை பாராட்டுவார் அண்ணா’ என்று நினைத்து கொண்டிருக்கும்போது, அண்ணா கருணாநிதியை மட்டும் பாராட்டி மேடையில் கணையாழி அணிவித்தார்.

கடுப்பான கண்ணதாசன் அண்ணாவிடம் போய்,

“என்ன அண்ணா! இப்படி சதி செய்துவிட்டீர்களே?”

“அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்.” என்றார் அண்ணா.

-----

பிறகு திமுக வெறுத்து போக, கட்சியிலிருந்து விலகி சம்பத் தொடங்கிய த.தே.க. கட்சியில் சேர்ந்தார். பின்னால், அது காங்கிரஸில் ஐக்கியமாக, காமராஜருடன் நெருங்கினார். இன்னொரு பக்கம், சினிமாவிலும் வேகமெடுத்தார். கருணாநிதியோ, தமிழக அரசியலில் டாப் கியரில் சென்று கொண்டிருந்தார். கருணாநிதியை வெறுத்து கோபப்பட்டு தாக்கினார் கண்ணதாசன். கருணாநிதி, அதையெல்லாம் அப்போது அவருக்கு இருந்த மற்ற பிரச்சினையினால் கண்டுகொண்டிருக்கமாட்டார்.

ஒரு கட்டத்தில் காமராஜரிடமும் முட்டினார் கண்ணதாசன். திமுக, பகுத்தறிவு என்ற பேரில் ராமன், கிருஷ்ணன் என்று கடவுள்களை செருப்பால் அடித்து கடவுள் நம்பிக்கையை கேவலப்படுத்தியபோது, அவருக்கு வந்த ஆத்திரத்தில் இந்து ஆதரவு கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். முதல் போணி, துக்ளக்கில் “நான் ஒரு இந்து”.

அண்ணா நோய்வாய்பட்டு இறந்தப்பிறகு, கருணாநிதி காலையிலும் மாலையிலும் எம்ஜிஆரை சென்று பார்த்து அவருடைய ஆதரவை பெற்று, கட்சியின் தலைவர் ஆனார். நாவலர், அண்ணா சமாதியில் அழுது கொண்டிருந்தார். கண்ணதாசன் “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதியிருந்தார். ’இந்திரா காங்கிரஸி’ல் சேர்ந்திருந்தார்.

அவருடைய கெட்ட நேரம், பிறகு கருணாநிதி இந்திராவுடன் கூட்டணி வைத்தார். “கருணாநிதிக்கு மேல் ஆளே இல்லை” என்று சொல்லும் அளவுக்கு கண்ணதாசன் நிலை ஆனது. அவரும் முடிவில் கருணாநிதி ஜோதியில் கலந்தார்.

----

இந்த புத்தகங்களில் கண்ணதாசன் மற்றவர்களை பற்றி மட்டும் எழுதவில்லை. தான் செய்த அயோக்கியத்தனங்களையும் எடுத்துரைத்திருக்கிறார். ரொம்ப அப்பிராணியாகவும் இருந்திருக்கிறார். கட்டுப்பாடில்லாத படகு போல் அலைகழித்திருக்கிறார்.

இந்த நிலையிலும் சினிமாவில் அவர் தொட்ட உயரம் அதிகம்தான். தன் கவிதை வரியால், கேட்போரை கட்டி போட்டார். கேட்போர் அனைவரையும் ரசிகராக்கினார். இதில் மட்டுமே, தன் முழு கவனத்தை செலுத்தியிருந்தால், இன்னும் பல சாதனைகளை செய்திருப்பார்.

இவர் ஏன் அரசியலில் ஜொலிக்க முடியவில்லை? சாணக்கியத்தனம் என்றைழைக்கப்படும் மொள்ளமாறித்தனம் பண்ண தெரியாததுதான்.

தங்கள் வாழ்க்கையை திறந்த புத்தகம் என்பார்கள் சிலர். நான் படித்த சுயசரிதைகளிலேயே இந்த புத்தகத்தில் தான், எந்த தயக்கமும் இன்றி தன் வாழ்க்கையை உண்மையிலேயே திறந்து வைத்திருக்கிறார் ஒரு ஆசிரியர்.

வெண்ணிற ஆடை மூர்த்தி சொல்வது போல் “பப்பரப்பேன்னு”.

23 comments:

அக்னி பார்வை said...

very nice

வால்பையன் said...

கண்ணதாசன் பதிப்பகத்திலேயே கேட்டு பார்த்துட்டேன், எங்கேயும் கிடைக்க மாட்டிங்குது!

Anonymous said...

ரொம்ப தான் தைரியம் போங்க..
நீங்க மட்டும் நம்ம ஊர்ல இருந்திங்கன்னா,
உங்க வீட்டுக்கு ஆட்டோ வர்றது உறுதி..

Anonymous said...

Saravanan ,adhe vana vaasathula aringar anna pathi kooda oru "matter" yeluthi iruppar(aann vedathil pen vibachari,Or iravu inaba iravanadhu nu clue vera koduthu iruppar)..Romba adhirchiya irundhudu padikirapo...Krish

சரவணகுமரன் said...

வாங்க அக்னி பார்வை

சரவணகுமரன் said...

வால்பையன், கிடைக்க மாட்டேங்குதா? நான் சமீபத்தில் தான் ஒரு சின்ன புத்தக கடையில் வாங்கினேன்...

சரவணகுமரன் said...

ஆட்டோவா? ஏனுங்கண்ணா பயம் காட்டுறீங்க? அது என்ன தடை செய்யப்பட்ட புத்தகமா? ஒரு புத்தகத்துல படிச்சத எழுதியிருக்கேன். நானாகவா கதை விடுறேன்?

தினேஷ் said...

//“என்ன அண்ணா! இப்படி சதி செய்துவிட்டீர்களே?”

“அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக்கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டுவிடுகிறேன்.”//

அடங்கொக்காக்காமக்கா இப்படித்தான் அவன் அவன் வீர வாளும் , தங்க சங்கிலியும் அரசியல் மேடையிலே வாங்குறாங்களா , நான் இது தெரியாம
உண்மையிலேயே கொடுக்குறாங்கனுலே நினைச்சுப்ப்ட்டேன் .. ஆரம்பிக்க வேண்டியதுதான் மன்மோகன் சிங் கையாலே ஒரு பத்து பவுன் சங்கிலி வாங்க ... ( அதை கடையிலே வாங்க தேவைபடும் பணத்துக்கு யாராச்சும் கொஞ்சம் உதவுங்க ) ...

geethadilli said...

kannadaasan, nanbar ena kuripiduvadhu karunanidhithaanae? aparam andha mollamaarithanam enra vaarthai super super super.

abarnashankar,usa said...

karunanithiyin mollamarithanatha nangu ariya chovin "koovam nathikkaraiyilae" book padikkavum.athil anthakala arasial patri thelivaga solli iruppar.
abarnashankar

Muruganantham Durairaj said...

earlier i read about your review on book about M.R.Radha. Now one more new. (and some facts :-) )


Nice post.

அருண்மொழிவர்மன் said...

வனவாசம், மனவாசத்தை தொடர்ந்து அஞ்ஞாத வாசம் என்று எழுத உள்ளதாக கண்ணதாசன் குறிப்பிட்டிருந்தார். இது பற்றி ஏதாவது தெரியுமா?

மேலும், எனது வசந்த காலங்கள் என்றா பெயரில் இவர் எழுதிய புத்தகத்திலும் நிறைய விடயங்கள் உள்ளன....

சரவணகுமரன் said...

ஆமாம் கிரிஷ்... அதிர்ச்சியான செய்திகள் தான்...

சரவணகுமரன் said...

இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே, சூரியன்...

சரவணகுமரன் said...

கீதா,

அது யாருன்னு எனக்கு தெரியாதுப்பா... :-) எதுக்கு வம்பு?

சரவணகுமரன் said...

நன்றி அபர்ணாஷங்கர்

சரவணகுமரன் said...

நன்றி முருகானந்தம் துரைராஜ்

சரவணகுமரன் said...

அஞ்ஞாத வாசம் பற்றி தெரியவில்லையே, அருண்மொழிவர்மன்...

’எனது வசந்த காலங்கள்’ படிக்க முயன்று பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி...

Anonymous said...

//கண்ணதாசன் பதிப்பகத்திலேயே கேட்டு பார்த்துட்டேன், எங்கேயும் கிடைக்க மாட்டிங்குது!

//

It is from vanathi pathippagam

சரவணகுமரன் said...

நன்றி கிருபா

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி, அனானி

நரேஷ் said...

நல்லதொரு பதிவு!!!
பல புதிய தகவல்கள்!!!

தடை செய்யப்பட்ட புத்தகமாக இருந்தால் கூட நம்மூருல உட்டுடுவாங்க, ஆனா நம்ம அரசியல்வியாதிகளை பத்தி எழுதுனதை பத்தி படிச்சுட்டு அதுவும் சிலாகிச்சா அவ்ளோதான்!!!

Bharathi Raja R said...

நான் இதுவரை வாசித்த நூல்களிலேயே சிறந்த நூல் என்று சொல்வேன் இதை. நான் ஒன்றும் பெரிதாக வாசித்ததில்லை என்பது வேறு கதை. திராவிட இயக்க வரலாற்றைப் படித்து விருப்பு வெறுப்பின்றி நடுநிலையான ஆய்வு செய்ய விரும்பும் எவரும் இந்த நூலைப் படிக்காமல் அதன் அத்தனை பரிமாணங்களையும் அலச முடியாது.

இன்னும் சொல்லப் போனால் கண்ணாதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" பலரால் விரும்பிப் படிக்கப் பட்டு சிலாகிக்கப் படும் நூற்தொகுப்பு. அதை நான் படிக்க முயன்ற போதெல்லாம் எனக்குப் பெரிதாக அதில் ஈடுபாடு ஏற்படவில்லை. அதனால், கண்ணதாசனின் நூற்கள் அனைத்தும் எனக்குப் பிடிக்காமல் போய்விடும் என்றே முன்முடிவு செய்திருந்தேன். இதைப் படித்த பின் அப்படியே ஆடிப் போய்விட்டேன். தமிழ் என்ற சொல்லைக் கேட்டதும் நரம்புகள் புடைக்கும் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய நூல்.