Thursday, May 7, 2009

ரஹ்மானுக்கு விவேக்கும்... விவேக்கிற்கு நானும்...

சித்திரை திருநாளுக்கு சன் டிவியில் விவேக், ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டி கண்டார். ரஹ்மானை பேட்டி காண்கிறோமே என்று விவேக் பயங்கரமாக ப்ரிபேர் செய்து வந்திருந்தார். ரஹ்மான் சிம்பிளாக பதில் சொல்லி கொண்டிருந்தார். ரஹ்மானுக்கே தெரியாத அளவுக்கு ஏதேதோ, எங்கெங்கோ படித்துவிட்டு வந்திருந்தார். ஜாலியா இருந்தது.

கடைசியில் ரஹ்மானுக்காக எழுதிக் கொண்டு வந்திருந்த கவிதையை படித்தார். இதோ அது...

----

ஏ.ஆர்.ஆர்.
காலம் உன்னிடம் இருந்து பறித்தது ப்ளாக் போர்டு
ஆனால் கலைவாணி உன் கையில் கொடுத்ததோ கீ-போர்டு.

கடல் இருந்த இடத்தில் தான் இருக்கும்
புயல் தான் கரையை கடக்கும்.
நம்மிடம் இசைஞானி என்ற கடலும் உண்டு
ஏ.ஆர்.ஆர். என்ற புயலும் உண்டு.

அமெரிக்க ஆஸ்கர் இதுவரை நமக்கு கேள்விக்குறி
அதை அடைந்ததால் நீ நமது தேசத்தின் ஆச்சரியக்குறி.

மற்றவர்களுக்கு உழைப்பு, ஒரு களைப்பு
ஆனால் உனக்கோ, அது களிப்பு.

ஆரம்பத்தில் உன் வாழ்வில் தான் எத்தனை அவமானங்கள்
இன்றோ உன் வரவேற்பறை முழுவதும் எத்தனை வெகுமானங்கள்.

காதணி விழாவுக்கும், பூப்புனித நீராட்டு விழாவிற்கும் கூட
போஸ்டர் அடித்து ஒட்டும் இக்காலத்தில்
நீ ஆஸ்கர் வென்ற மேடையில் கூட அமைதியாக
எல்லா புகழும் இறைவனுக்கே என்றாயே
அந்த பண்பினாலே எங்கள் இதயங்களை வென்றாயே!

நீ பார்ட்டிக்கு போவதில்லை
ஆனால் உன் பாட்டு இல்லாத பார்ட்டியே இல்லை!

நீ பப்புக்கு போவதே இல்லை
ஆனால் உன் பாட்டை கேட்காமல் எங்களுக்கு மப்பே ஏறுவதில்லை!

உனக்கு பிகரும் இல்லை
சுகரும் இல்லை.

தம்மும் இல்லை
பப்புள் கம்மும் இல்லை.

உனக்கு பிடித்த ஒரே ரம்
வந்தே மாதரம்.

மற்றவர்கள் கோல்டன் ஈகிள் அடிக்கின்ற வயதில்
நீ கோல்டன் குளோப்பே வென்று விட்டாய்
ஆம்! அது தானே ராயல் சேலஞ்ச்.

சல்மான்கான் போல் உனக்கு சிக்ஸ்பேக் இல்லை
ஷாருக்கான் போல் உனக்கு சிக்ஸ்பேக் இல்லை
அமீர்கான் போல் கூட உனக்கு எயிட் பேக் இல்லை
ஆனால் உன் போல் டபுள் ஆஸ்கார் வாங்கியவன் இங்கு எவனுமில்லை.

உன்னை பெற்றெடுத்தது நமது சினிமா
இப்போது தத்து எடுத்திருப்பது உலக சினிமா.

இனி நீ சான்பிரான்சிஸ்கோ சென்றாலும்
சென்னையை மறந்து விடாதே!

மன்ஹாட்டனில் இருந்தாலும்
மதுரையை மறந்து விடாதே!

டேனி பாயில் வணக்கத்திற்க்குரியவர்தான்
இருந்தாலும் உன் அம்மா போட்டு தரும் ஆப்பாயிலை மறந்து விடாதே!

உன் ரசிகர்கள் விரும்பியது
ஆஸ்கார் என்னும் சிவப்பு கம்பளவிரிப்பை.
ஆனால் நீ விரும்பியதோ
உன் தாயின் முகத்தில் சிரிப்பை.
என்ன தவம் செய்ததோ
அந்த தெயவத்தாயின் கருப்பை.

வாழ்க ஏ.ஆர்.ஆர்.
உன் பின்னே இனி வரப்போவது யார் யார்...


---

எனக்கு வாலி-மின்னலே காலத்தில் விவேக் காமெடி தான் பிடித்திருந்தது. வசனங்கள் புத்திசாலித்தனமாக தெரிந்தது. லைட்டாக கருத்து சொல்லிக்கொண்டிருந்தவர், சின்ன கலைவாணர் என்றவுடன், அதையே முழு தொழிலாக ஆக்கி கொண்டார். அதுதான் வடிவேலு கோல் போட நல்லா வாய்ப்பாக அமைந்துவிட்டது என்று நினைக்கிறேன். அதற்கு பிறகு ஒரே மாதிரி இருக்கிறது என்று ஏதேதொ முயற்சி செய்து பார்த்தார். எதுவும் பெரிதாக ஒர்க்-அவுட் ஆகவில்லை. இந்த நேரத்தில் அவருக்கு பத்மஸ்ரீ வேறு. அவருக்கு வாழ்த்து சொன்னவர்களை விட, அவருக்கு எதற்கு இது என்று கேள்வி கேட்டவர்கள் தான் அதிகம்.

எது எப்படியோ, வாங்கின விருதிற்கு ஏற்றாற்போல் ஏதாவது பெரிய சாதனை செய்ய வாழ்த்துக்கள்...

இனி விவேக்கிற்கு எனது கவிதை...

விவேக்
உன் காமெடி இப்போது பயங்கர மொக்கை
மற்றவர்கள் செய்து முடித்ததின் கடைந்தெடுத்த சக்கை.

வாழ்வுக்கு பிறகு மோட்சத்தை காட்டுவது தாடி வளர்த்த அகோரி
வாழும்போதே உனக்கு சூட்சுமத்தை காட்டியது அமெரிக்கன் கல்லூரி.

நீ கழட்டுவதே இல்லை கூலிங் கிளாஸ்
இதே பாணியை தொடர்ந்தால் உன் ஆட்டம் க்ளோஸ்.

சின்ன கலைவாணர் என்று உனக்கு ஒரு பட்டம்
இதை அவர் கேட்டிருந்தால் எடுத்திருப்பார் ஓட்டம்.

உன்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது கே.பி.
அவர் பெயரை காப்பாற்ற மறுபடியும் காமெடியில் நீ சோபி.

உனக்கும் மதுரை
உன் போட்டியாளர் வடிவேலுவுக்கும் மதுரை
இருவருக்கும் தமிழ்சினிமாவில் நகைச்சுவையே துறை
அவரை விட உனக்கே சமூக கருத்தில் அக்கறை
அதுதானோ உனது குறை?

நீ கதாநாயகனாக நடித்த படம், சொல்லி அடிப்பேன்
இன்னும் இம்மாதிரி முயற்சியில் இறங்கினால், நான் சொல்லாமலே அடிப்பேன்.

உனக்கும் கொடுத்திருக்கிறார்கள் பத்மஸ்ரீ
ஏன் என்று கொஞ்சமாவது யோசி.

உன் முதல் படம் மனதில் உறுதி வேண்டும்
இரட்டை அர்த்தமில்லாத, முகம் சுழிக்க வைக்காத
தரமான காமெடியே உன்னிடமிருந்து எங்களுக்கு வேண்டும்.

அடிக்கடி நீ உச்சரிப்பது கலாம்
அதற்காகவே அவ்வபோது அவருக்கு வைப்பாய் சலாம்
இப்போதைக்கு இது போதும், போகலாம்
வருங்காலத்தில் நீயும் உன் ஆசைப்படி இயக்குனர் ஆகலாம்.

வாழ்த்துக்கள்...


---

தமிழ் இசையை உலகமெங்கும் கொண்டு சேர்ப்பேன் என்று சொல்லி இருந்தார் ரஹ்மான். சொல்லியதை செய்து காட்டிவிட்டார்.

ஆக்ஸிடெண்டல் ஹஸ்பெண்ட் என்ற படத்தில், தெனாலி படத்தில் வரும் “ஜன்னல் காற்றாகி வா” பாடல் முழுமையாக தமிழில் அப்படியே பயன்படுத்தப்பட்டு உள்ளது. பாருங்க, கே.எஸ்.ரவிக்குமார் படப்பாட்டு ஹாலிவுட் படத்துல.அது மட்டும் இல்ல... அலைபாயுதே ‘யாரோ யாரோடி’ பாட்டு பிட்டும் ஒரு நீளமான காட்சியின் பின்னணியில் வருகிறது. காட்சிக்கு ஏகப்பொருத்தம். அந்த காட்சி யூ-டூபில் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சுட்டி கொடுக்கவும்.

சுட்டி கொடுத்த ஜியாவுக்கு நன்றி.

25 comments:

முரளிகண்ணன் said...

பதிவு சூப்பர். உங்களின் கவிதை சூப்பரோ சூப்பர்

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

Anonymous said...

பிரிச்சிட்டிங்க சரவணா..
விவேக் எனக்கு பிடிக்காது என்பதால்
கொஞ்சம் கூடுதலாகவே ரசித்தேன்
உங்க கவிதை அபாரம்..
ஏன் வடிவேலு எந்த படத்திலும்
கருத்து சொன்னதே இல்லையா?
இல்ல அவர உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா??!!

லோகு said...

மத்தவங்க அங்க இருந்து சுட்டாங்க..
நம்மாளு அவங்களுக்கே கொடுத்தாரு... சூப்பருங்க..

அருமையான பதிவு..

ஜியா said...

http://video.google.com/videoplay?docid=-6694677015712493166&hl=en

ithaana athu??

ச.பிரேம்குமார் said...

தமிழ் பாட்டு ஆங்கிலப்படத்தில்.. அருமை :)

நாடோடி இலக்கியன் said...

கலக்கல் பதிவுங்க.

கவிதையில பின்னிட்டீங்க.

//நீ கதாநாயகனாக நடித்த படம், சொல்லி அடிப்பேன்
இன்னும் இம்மாதிரி முயற்சியில் இறங்கினால், நான் சொல்லாமலே அடிப்பேன்//

இது டாப்பு.

விவேக் காமெடியில் ரெட்டை அர்த்த வசனங்களுக்கு அளவில்லாம போச்சு.அறுவறுக்கதக்க வகையில்தான் இருக்கு இன்றைய இவரின் காமெடி.

முகில் said...

எசகவித சூப்பர்!

//உனக்கும் கொடுத்திருக்கிறார்கள் பத்மஸ்ரீ
ஏன் என்று கொஞ்சமாவது யோசி.///

லொள்ளு ;)

தீப்பெட்டி said...

பதிவு ரொம்ப நல்லாயிருக்கு...

சரவணகுமரன் said...

நன்றி மகேந்திரன்...

வடிவேலு, விவேக் அளவுக்கு கருத்து சொல்றது இல்லையே?

சரவணகுமரன் said...

நன்றி லோகு

சரவணகுமரன் said...

நன்றி ஜியா... இன்னும் பார்க்கல... பார்த்துட்டு சொல்றேன்..

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி பிரேம்குமார்

சரவணகுமரன் said...

நன்றி நாடோடி இலக்கியன்

சரவணகுமரன் said...

நன்றி முகில்

சரவணகுமரன் said...

நன்றி தீப்பெட்டி

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்க கவிதை சக்கையா இருக்குங்க.. ஏ. ஆர். ஆர். நம்ம நாட்டின் பெருமை..

சரவணகுமரன் said...

கார்த்திகைப் பாண்டியன், ரொம்ப நன்றி.... சக்கையா இருக்குன்னு கேட்டு ரொம்ப நாளாச்சி... :-)

சரவணகுமரன் said...

ஜியா, அதே தான்... லிங்க்’க்கு ரொம்ப நன்றி...

தோழி said...

Here is the answer in Yahoo answers for The accidental husband movie songs. Eppanga Tamil language Bollywood aachu?

Best Answer - Chosen by Voters

songs r from bollywood ( tamil language) composed by AR Rehman... evn im reaalyy surprised .. hearin dose songs frm a Hollywud movie

சரவணகுமரன் said...

நன்றி தோழி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//காலம் உன்னிடம் இருந்து பறித்தது ப்ளாக் போர்டு
ஆனால் கலைவாணி உன் கையில் கொடுத்ததோ கீ-போர்டு.//


என்ன கொடுமை சரவணன் சரவணன்..,

கவிதையின் துவக்கமே சிக்ஸர்தான் தல...

அடுத்த ஒவ்வொரு வரியும் பின்னி பெடலெடுக்கிறது

சரவணகுமரன் said...

////காலம் உன்னிடம் இருந்து பறித்தது ப்ளாக் போர்டு
ஆனால் கலைவாணி உன் கையில் கொடுத்ததோ கீ-போர்டு.//

தல, இதை சொன்னது விவேக்...

Santhosh said...

Tamilil oru pazamozhi.. Than muthukai thannal pakka mudiley anal mathavanga muthikai parka poitar....

Namma orutharai pathi comments adikum pothu....konjam yosichu adikanum...

avanga avangalakku theriyum athu evavalu kastnamu...

Unknown said...

உலக சினிமாவில் தமிழ்ப் பாடல் (ஜன்னல் காற்றாகி வா - தெனாலி) ....எத்தனை இதமான தருணம் இது. இந்த பாடலை படத்தில் பார்க்கும் பொழுது கே.எஸ். ரவிக்குமார் மகிழ்ந்திருப்பார். அவர் பட பாடலல்லவா இது. வாழ்க ஏ .ஆர் .ரஹ்மானின் தமிழ் உணர்வு. இது போன்ற செய்திகளை அதிகம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இந்த செய்தியை பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் எனது நன்றிகள் நண்பரே.