Wednesday, September 2, 2009

குபீர்’ன்னு சிரிக்கலாம், வாங்க



இன்னைக்கு மெயில்ல வந்த சில ஜோக்குகளைப் படிச்சதும், குபீர்’ன்னு சிரிப்பு வந்துச்சு. உங்களுக்கு வருதா, பாருங்க.

---

டேய் என் ஜாதகப்படி, எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு?

*

என்னங்க, ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகுறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பண்ணிக்க சொன்னார். அதான்.

*

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?

*

டாக்டர்! என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா...
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குறா!!!

*

சார்,
டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?...

*

நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும், எடுத்திட்டு போயிடறாங்க.
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்.

*

ஒரு காப்பி எவ்வளவு சார்?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

*

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்! அது எப்படி பெயில் ஆகும்?

*

இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி.வி யில சொன்னாங்க.
நீங்க கேட்டீங்களா?
இல்லை. அவங்களே சொன்னங்க...

---

உங்களுக்கு குபீர் வந்ததா? எத்தினி முறை?

---

கேரள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள்...

அப்புறம் இவுங்களுக்கும்...



.

22 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

ஜோக்குகள் அனைத்தும் நன்னாயிட்டு இருக்கு !

said...

குபீர் ..... :)

said...

கேரள சகோதர, சகோதரிகளுக்கு ஓணம் நல்வாழ்த்துக்கள்...

அப்புறம் இவுங்களுக்கும்..]]

இவங்களெல்லாம் உங்களுக்கு யாரு

;)

said...

//உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர்! அது எப்படி பெயில் ஆகும்?//

ஹீ...ஹீ...ஹீ,,,

அன்புடன்,
அம்மு.

said...

எனக்கு நாலு முறை குபீர். அதிலயும் டார்ச் அடிச்சு டி.வி சூப்பர்.

said...

மிக அருமையாக உள்ளது

said...

//டீ மாஸ்டர் டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர் பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர் மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே? ஏன் மண்டைய போட மாட்டேங்கிறீங்க?...//

:-)))))))))))))

said...

ஆவியில் வரும் வேறு நல்ல தகவல்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

said...

Just check this page and write about it
/www.indiancopycats.com/

said...

நகைச்சுவைகளும் கேரள சகோதரிகளும் (உங்களுக்கு மட்டும்) மிக அருமை.............

தோழிகளுக்கும் (வெவரமுல்ல!!!) தோழ்ர்களுக்கும் (சும்மா ஃபார்மாலிட்டிக்கு!!!) ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்....

அப்புறம் இந்த பதிவை உங்க பேரைப் போட்டு எங்க குழுமத்தில் உபயோகப் படுத்தியிருக்கிறேன்....

நன்றி!!!!

Anonymous said...

//கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குறா!!!
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?
நீங்க கேட்டீங்களா?
இல்லை. அவங்களே சொன்னங்க...//


இவிங்க 3பேரும் குபீர் கொடுத்தாங்க.

said...

நன்றி கோவி.கண்ணன்

said...

ஜமால்,

இவுங்கெல்லாம் நமக்கு அவுங்க... :-)

said...

வருகைக்கு நன்றி அம்மு

said...

நன்றி Vels

said...

நன்றி ரமேஷ் விஜய்

said...

வாங்க கிரி

said...

வால்பையன்,

இது ஆவியில் வந்ததா? எனக்கு மின்னஞ்சலில் வந்தது. எனக்கு சிரிப்பு வரவழைத்தது என்பதால பகிர்ந்துகொண்டேன்.

said...

ராஜேஷ்,

தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... இவ்ளோவா? என்று ஆச்சரியம் வரவழைத்தது...

said...

//கேரள சகோதரிகளும் (உங்களுக்கு மட்டும்) மிக அருமை.............//

நாந்தான் எவ்வளவு தெளிவா சொல்லியிருக்கேன். அப்புறமும் இப்படியா?

//இந்த பதிவை உங்க பேரைப் போட்டு எங்க குழுமத்தில் உபயோகப் படுத்தியிருக்கிறேன்....//

எனக்கும் மின்னஞ்சலில் வந்ததுதான்...

said...

நன்றி அனானி

Anonymous said...

nalla sirippu vanthuchu