Thursday, September 3, 2009

கதாபாத்திரத்திற்குள் ஒளிந்த இயக்குனர்கள்

சினிமாவுக்கான கதையும் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்வில் இருந்து எடுக்கப்படுபவை தான். இயக்குனர்கள், தாங்கள் பார்ப்பதிலிருந்து மட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கையில் இருந்தும் படத்திற்காக முழுதாகவோ, அல்லது தேவைக்கு ஏற்பவோ கை வைப்பார்கள்.

இப்படி செய்யும்போது, கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வும், ஒப்பனையும் தெரிந்தோ தெரியாமலோ இயக்குனர்களை போலவே வந்துவிடும்.

சமீபகாலமாக அப்படி வந்த சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பற்றிய பதிவு இது.

ஆனந்தம் - லிங்குசாமி



திருப்பதி ப்ரதர்ஸ் கதை, தன் சொந்த குடும்பக்கதையே எனறு அதன் இயக்குனர் லிங்குசாமியே சொல்லியிருக்கிறார். இதில் ஸ்யாம் கணேஷையும் லிங்குசாமியையும் பாருங்க. ஒரே மாதிரி இல்ல?

காதல் கொண்டேன் - செல்வராகவன்



செல்வராகவன் - தேனியில் பிறந்து வளர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். 'காதல் கொண்டேன்' படத்தில் தனுஷ் கல்லூரியில் அனுபவிக்கும் கொடுமைகள், கிராமத்தில் படித்து, நகரத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் சந்திப்பவை. இவர் 7ஜி ரெயின்போ காலனியும், தன் சொந்த கதைதான் என்று சொல்லியிருக்கிறார்.

திமிரு - தருண் கோபி



கதையை இவர் கதை என்று சொல்ல முடியாது. இதற்கு முன் பல படங்களில் இதே போல் கதை, இதே போல் திரைக்கதையுடன் வந்துள்ளது. மதுரை பிண்ணனி, ஸ்ரேயா ரெட்டியின் கேரக்டர் போன்றவற்றால் வெற்றிப்பெற்ற படம். ஒருமுறை சன் டிவி பேட்டியில், விஷாலின் மேக்கப் தன்னைப்போல் வைத்தது தான் என்று சொல்லியிருக்கிறார்.

தமிழ் எம்.ஏ. - ராம்



இதிலும் இயக்குனர் தான் சந்தித்தவற்றைதான், படம் பிடித்துள்ளார். ஜீவா எப்படி இருக்கிறார்?

வாரணம் ஆயிரம் - கௌதம் மேனன்



கௌதம், தன் தந்தை இறந்த பாதிப்பில் எடுத்த படம். இவரும் இன்ஜினியரிங் படித்தவர். படத்தில் இரண்டாம் பாதியில் வரும் சூர்யாவின் ஹேர் கட்டிங், இவரைத்தான் எனக்கு நினைவுப்படுத்தியது.

என் ஞாபகத்தில் இருப்பவை இவை. வேறு உருவ ஒற்றுமைகள் படங்களில் வந்திருந்தால், பின்னூட்டத்தில் சொல்லவும். பதிவின் இரண்டாம் பாகம் வெளியிடுகிறேன். :-)

இதுவரை, இயக்குனர்கள் தன்னை போல் உருவாக்கிய கதாபாத்திரங்களை பார்த்தோம். இனி வருபவர் வித்தியாசமானவர். கதாபாத்திரத்திற்குக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர். எங்கே மாற்றிக்கொண்டார்? ஹீரோவால், வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்.



இயக்குனர்- முருகதாஸ்
படம் - கஜினி (ஹிந்தி)
ஹீரோ - அமீர்கான்

.

18 comments:

சரவணகுமரன் said...

அய்யோ! பதிவு சூப்பரா இருக்கே?

எனக்கு நானே சொல்லிக்கிறேன். :-))

IKrishs said...

Nalla concept..But content commiya iruka madhiri oru feeling..
GOwtham menon yengha college la (Mookambigai-pudukottai) munooru kaalathula padichavaram...(Mudikalainu kelvi patten)...
Apparam "Vinnukkum Mannukkum" rajakumaran a vittteenga... :)...

thamizhparavai said...

பதிவு நல்லாவே இருக்கு...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

தினேஷ் said...

நல்ல ஓப்பீடு..

ராஜ நடராஜன் said...

என்னமா யோசிக்கிறாங்கய்யா!

Admin said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

சரவணகுமரன் said...

கருத்துக்கு நன்றி கிருஷ்குமார்...

சரவணகுமரன் said...

நன்றி தமிழ்ப்பறவை

சரவணகுமரன் said...

நன்றி சூரியன்

சரவணகுமரன் said...

நன்றி ராஜ நடராஜன்

ப்ரியமுடன் வசந்த் said...

ஆஹா யோசனை பயங்கரம்......

சரவணகுமரன் said...

பயப்படுற மாதிரியா இருக்குது, வசந்த்?

vaarththai said...

Pasanga director and "meenatchi" character

சரவணகுமரன் said...

நன்றி soundr

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

supper appu

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

supper appu

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்