Saturday, November 14, 2009

தலைவா!!! (இளகிய மனமா, ப்ளீஸ்... வேண்டாம்)

இன்று குழந்தைகள் தினம். காலண்டரில் தேதி கிழிக்கும்போது, நேருவை கண்டேன். சரி, ஏதோ பார்க்கலாம் என்று ஒவ்வொரு நாளாய் புரட்டினேன்.அடுத்தது, வ.உ.சி. கப்பலோட்டிய தமிழர். இப்ப, நினைவுக்கு வரும் தகவல் சொல்லிவிடுகிறேன். கப்பலோட்டிய தமிழர் என்று ராஜாஜியிடம் சொன்னால், ’கப்பல் அவரா ஓட்டினார்? கேப்டன் தானே ஓட்டினார்’ என்று இவர் ஓட்டுவாராம். சரி, நெக்ஸ்ட்.இந்திரா.ராஜாஜி. இவர் வாழ்க்கை வரலாறு சமீபத்தில் கொஞ்சம் படித்தேன். காமராஜர், அண்ணா போன்றவர்களை புகழும் அளவுக்கு இவரை புகழ்பவர்கள் கம்மி. ஏன்?பாரதி.அப்புறம்...

அப்புறம்...

அப்புறம்...


தலைவா!!!


இந்த வருடம் தான், நான் முதன்முதலில் ரஜினி பிறந்தநாளை காலண்டரில் பார்க்கிறேன். என்னோட காலண்டர்தான் இப்படியா? இல்ல, ஊரே இப்படித்தான் இருக்குதா?

அப்படியே, கலைஞரிடம் இந்த தினத்தை ‘இளைஞர் எழுச்சி தினமாக’ தமிழகமெங்கும் விடுமுறைக்கொடுத்து கொண்டாட ஆவண செய்யுமாறு வேண்டுகோள் வைக்கும்படி சரத்குமாரிடம் கேட்டுக் கொள்கிறேன்.

இதை படிச்சிட்டு, எஸ்.ஏ.சந்திரசேகர் சிவகாசிக்கு போன் போட்டுடக்கூடாது. ஆனா, அதுவும் ஒருநாள் நடக்கும்’ன்னு தான் தோணுது.

.

16 comments:

thiyaa said...

என்னமோ நடக்குது நடக்கட்டுமே...

Anonymous said...

நடக்காது என்பார் நடக்கும், நடக்கும் என்பார் நடக்காது :)

-Srini

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அது...................,

sampath said...

என்ன கொடுமை ஸார் இது?. நினைச்சா பயமா இருக்கு. விஜய் ஃபோடோ கேலண்டர்ல வந்தா தமிழ் நாட்ட ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது...

சங்கர் said...

உங்க போட்டோ கூட அந்த காலண்டர்ல இருக்குன்னு கேள்விபட்டேன் :)

சரவணகுமரன் said...

வாங்க தியா

சரவணகுமரன் said...

Srini,

இப்ப நடக்கும்’ங்கிறீங்களா? நடக்காது’ங்கிறீங்களா?

சரவணகுமரன் said...

சம்பத், விடுங்க... காலண்டர் வாங்காம விட்டுடுவோம்...

சரவணகுமரன் said...

சங்கர்,

இப்ப இருக்காதே? பிற்காலத்தில் வரலாம். :-)

Prathap Kumar S. said...

மேலே உள்ள காலண்டர் உள்ளவங்களுக்கும் கடைசி படத்துல உள்ளவங்களுக்கும் ஒரு வித்தியசாம் இல்லாம போய்டுச்சு....

//இதை படிச்சிட்டு, எஸ்.ஏ.சந்திரசேகர் சிவகாசிக்கு போன் போட்டுடக்கூடாது. ஆனா, அதுவும் ஒருநாள் நடக்கும்’ன்னு தான் தோணுது.//

நீங்க ஏன் எடுத்து கொடுக்குறீங்க... அவிங்களுக்கு தெரியாதுன்னா???
இதெல்லாம் எங்கப்போய்முடியுமோ...!!

கார்க்கிபவா said...

எனக்கு புரியல சகா. இதுல எதுக்கு விஜய் வந்தார்?

//என்ன கொடுமை ஸார் இது?. நினைச்சா பயமா இருக்கு. விஜய் ஃபோடோ கேலண்டர்ல வந்தா தமிழ் நாட்ட ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது//

நிறைய பேருக்கும் பிடிக்கும் என்பதால்தான் ரஜினியின் ஃபோட்டோ இருக்கு. அந்த அடிப்படையில் அடுத்து விஜய் படம்தான் என்று நீஙக்ள் முடிவு செஞ்சதாலே இப்படி சொல்றீங்கன்னு எடுத்துக்கலாமா?

சம்பந்தமே இல்லாமல் விஜயை பேரை நீங்க சேர்த்ததுக்கு காமெடி செய்யத்தான் என்று எடுத்துக் கொண்டாலும், அதில் இருக்கும் உண்மையை யோசிச்சு பாருங்க. விஜய் ஃபோட்டோ போட்டா நிறைய பேரு வாங்குவாங்கன்னு அவங்க நம்பினா, அதுல என்ன தப்பு இருக்கு? :))

Sundar said...

ennale naba mudayilae

This was not expected from the preson who I understand from reading your blog as rational thinker.

I was so impressed by reading your blog ( do u believe I am doing it for today morning itself , my emotions are turning on the other way .

Iam not a Anti Rajini ,I love his old movies , he is the so attractive actor who can portray as buffoon in once scence and also a angry men in the same next screen without any influence over the previous but that one part.
Wantedly or unwantedely he has n’t moved to the next level .

So on the on his professional angel he needs to be rated in the scale of of Sathyaraj,Prabhu,Karhtick ,Arjun …. As a normal commercial actor .


Next his Political venture, it is purely upto the individual what to do or not to do .
So we don’t bother , but the way he is keeping his the poor masses under darkness his political ambitions and making them money . is a third call mentality activity which can’t be tolerarted on on any grounds .

There are few occasions will get wild one of these when I say somebody Rajini as "Thalivar".I think it has become a fashion.

That’s all again iam stressing he is an normal actor .Please don’t comment Vijay. he is a miniature version of this senior . Both are same type of guys who does not believe in the quality of the work and just want to ride in the shoulder of the masses .Pls leave the emotions and measure it with the facts
This Screen god syndrome is one biggest barrier for the individual and societal growth.

சரவணகுமரன் said...

வாங்க நாஞ்சில் பிரதாப்

சரவணகுமரன் said...

ரஜினி வழிதானே, விஜய் வழி? அதனால் சொன்னேன் கார்க்கி.

சரவணகுமரன் said...

சுந்தர்,

ரஜினியை பிடிக்கும். அதற்காக தீவிரமான வெறியன் அல்ல. ரஜினியை விமர்சித்தும் எழுதியிருக்கிறேன்.

சிறு வயதில், எல்லோரையும் போல் யாரும் சொல்லி கொடுக்காமல் பிடித்தது ரஜினியை. இன்றும், ரஜினி படங்கள் மகிழ்ச்சியை கொடுக்கிறது.

அதற்காக ரஜினியை கன்னாபின்னாவென்று ஆதரிக்க மாட்டேன். ’தலைவா’ என்றது வெறிக்கொண்டோ, அல்லது நீங்கள் சொல்வது ஃபேஷனுக்கோ அல்ல.

சும்மா ஜாலிக்கு. :-)

Sundar said...

ungal pathil enaku neraivai tharugirathu.

enduyai intha kobam poduvga rajiniiku
over bulid up kodkum media,sila paditha kumbalaku than.

naanum rajini early 90's and 80's rajini padathu rasiganthan.

oru natural acting(enadu karuthu kamal oru padi keela than) talent ulla allu athua stepku pogala varuthum
matrum rasiagaralai panam kaikum marmagave parapathu endra thanmaithan.

Nandri