Wednesday, May 5, 2010

சுறா - விஜய்க்கு மைல்கல்

சுறால ஒண்ணும் ஸ்பெஷலா கிடையாது. வேட்டைக்காரன் மாதிரிதான் என்று விஜய்யே சொன்ன பின்னாடி, படத்தை குறை சொல்வதில் அர்த்தமில்லை.

---



எந்த படம் வெளியானாலும், பதிவுலகத்தில் விமர்சன பதிவுகள் பொளந்து கட்டும். இதற்கு எதிர்பார்த்ததை விட கம்மி தான். ஒருவேளை, நிஜமாவே அவ்வளவு வரவேற்பு இல்லையோ? என்று நினைத்தால், தியேட்டர்களில் கூட்டமாக தான் இருக்கிறது. அதனால, படம் பார்த்துட்டு பார்த்தத வெளியே சொல்ல மக்கள் தயங்குறாங்க’ன்னு நினைக்குறேன். இப்படியொரு தனித்துவமான நிலையை இப்படம் தோற்றுவித்திருக்கிறது.

அப்படியே படம் பார்த்து, பதிவு எழுதியவர்களும் “ஏன் இந்த படம் பார்த்தோம்?” என்று முதலில் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்கிறார்கள். பிறகே, படத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஏதோ இயற்கைக்கு புறம்பான காரியத்தை செய்த குற்ற உணர்ச்சி, இவர்கள் எழுத்தில் தெரிகிறது.

இன்னொரு விஷயம். முன்ன, விஜய் படங்கள் வந்தவுடன் பார்த்தால், ஆச்சரியத்துடன் கேட்பார்கள். “(அதுக்குள்ள) பார்த்தாச்சா?” என்று. இப்பவும், அதே “பார்த்தாச்சா?” கேள்விதான். ஆனால், ஆச்சரியத்திற்கான காரணம் தான் வேறாக இருக்கிறது. சிலர், கூடவே அதிர்ச்சியையும் வெளிப்படுத்துகிறார்கள்.

இப்படி பல வகையில், மாற்றங்கள் வந்து சேர்ந்திருக்கிறது, விஜய் படங்களுக்கு. விஜய்க்கு. விஜய்யின் திரையுலக வரலாற்றில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய மாற்றம். ஒரு மைல்கல்.

கிளாஸ் படங்கள் மட்டுமே பார்க்கும் பெண்களுக்கும், விஜய் பிடித்த நடிகராக இருந்தார். சமீபகாலமாக, விஜய் படங்களில் பயமுறுத்தும்படி வில்லன்கள் வருவதால், அழகான பெண்கள் தியேட்டர் செல்ல பயந்து தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது இந்த படமென்று இல்லை. கொஞ்ச காலமாகவே இருக்கிறது. இவர்கள் “விண்ணைத்தாண்டி வருவாயா” பார்த்துவிட்டு, அடுத்தது “ராவண”னுக்காக வெயிட் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தியேட்டர் வர, விஜய் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இப்படியெல்லாம் வெளி உலகில் நடந்தாலும், தியேட்டரில் கூட்டம் தாறுமாறாகவே இருக்கிறது. ஒரு வார நாளில், செகண்ட் ஷோவுக்கு கூட பெங்களூரில் நான் பார்த்த தியேட்டரில் கூட்டமாகவே இருந்தது.

தியேட்டர் முன்னால் ஒட்டியிருந்த போஸ்டரில், பால் வடிந்த சுவடு, பால் அபிஷேகம் நடந்ததற்கு அத்தாட்சியாக இருந்தது. பேனரில் மேலே ரஜினி, சிரஞ்சிவி, ராஜ்குமார் ஆகியோர் இருந்தனர். ராஜ்குமார் காலைத் தொட்டு வணங்கும் விஜய்யை பேனராக வைத்திருந்தார்கள்.

---

இனி, படத்தில் விஜய்யை பற்றி....

1) படத்தில் விஜய் நன்றாக நீச்சல் அடித்திருக்கிறார்.
2) நன்றாக மீன் குழம்பு வைக்கிறார்.
3) வழக்கம்போல், நன்றாக ஆடியிருக்கிறார். விஜய் ரசிகர்களுக்காக, ஸ்பெஷல் போனஸாக. உருண்டு புரண்டு கஷ்டப்பட்டு ஆடவேண்டியதை, அநாயசமாக ஆடியிருக்கிறார்.
4) க்ளோசப் காட்சிகளில், விஜய் முகம் உருண்டையாக இருக்கிறது.

விஜய் நிறைய சென்டிமெண்ட் பார்க்க ஆரம்பித்திருக்கிறார். தனது வெற்றிப்படங்களில் இருந்த விஷயங்களை, தற்போது வரும் ஒவ்வொரு படங்களிலும் வைத்து பார்க்கிறார்.

---

டைட்டிலில் விஜய் பெயரையும், கலாநிதி மாறன் பெயரையும் ஒரே மாதிரி போடுகிறார்கள். கூடிய விரைவில், கலாநிதி மாறனுக்காக ஸ்பெஷல் டைட்டில் கிராபிக்ஸ் ரெடி செய்து விடுவார்கள் போலிருக்கிறது.

விளம்பரங்களில் கலாநிதி மாறனின் ‘க’ என்ற எழுத்தின் அளவுக்கு தான், விஜய்யின் முழு பெயர் அளவே இருக்கிறது.

---

எனக்கு படத்தில் பிடித்தவை,

1) கோர்ட் சீனில் விஜய், டீ.ஆர். போல் ”டண்டனக்கா டணக்குனக்கா” வசனம் பேசியது.
2) வெண்ணிற ஆடை மூர்த்தி மேடையில் பாடும்போது, வடிவேலு கீழே இருந்து கொடுக்கும் சைகை.
3) வில்லன் தமன்னாவை கடத்திக்கொண்டு வைத்துவிட்டு, போனில் வெறித்தனமாக பேசிக்கொண்டிருக்கும் போது, ஒண்ணும் தெரியாத பாப்பாவாக படிக்கட்டில் தமன்னா அமர்ந்திருப்பது.
4) படகை ரோட்டில் குறுக்காக நிறுத்தி வைத்துவிட்டு, ‘ஐயய்யோ! இது எப்படி இங்க வந்தது?’ என்று வடிவேலு அதிர்வது.

கையில இன்னும் ஒரு விரல் மிச்சமிருக்கு.

---

தெலுங்கில் ‘பொம்மாயி’ பாட்டை பார்த்தேன். தமன்னா இடுப்புக்காக தான், அந்த டவுசர் டான்ஸ் என்று நினைத்தேன். அனுஷ்காவுக்கும் அதே டான்ஸ் தான்.

---

பழைய தலைவர்களுக்கும், புது தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

பழைய தலைவர்கள், ஒரு பேச்சுக்காவது “உங்களுக்காக உயிரை கொடுப்பேன்.” என்பார்கள். இப்ப, “எனக்காக உயிரைக்கொடுக்க ஒரு கூட்டம் இருக்கிறது” என்று தான் சொல்கிறார்கள்.

---

1) தியேட்டருக்கு வெளியே மசாலா மாங்காய் விற்றவருக்கு, எல்லாம் விற்று தீர்ந்ததில் சந்தோஷம்.
2) டிக்கெட் க்யூவுக்கு பக்கத்தில் உட்கார்ந்து, பார்வை இழந்த ஒருவர் பானையைத் தட்டி பாடிய பாடல்களுக்காக, அவர் முன் இருந்த துண்டில் நிறைய சில்லறைகள் விழுந்தது.
3) ரிலீஸான முதல் மூன்று நாட்களிலும், 50 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்க்கும், 100 ரூபாய் டிக்கெட்டை 200 ரூபாய்க்கும் விற்று, ப்ளாக்கில் டிக்கெட் விற்பவர் மகிழ்ச்சியாக இருந்தார்.
4) தியேட்டரில் முட்டை பப்ஸ் விற்றவர், நிறைய விற்றதில் மகிழ்ச்சியாக இருந்தார்.

நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை.

.

23 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை.//

நச்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை.
//

ரைட்டு.. அப்படீனா சரிதான்...

ப.கந்தசாமி said...

ஏனுங்க, படம் எப்படி இருந்தால் என்ன, கல்லா கட்டினால் போதுமல்லவா? அது எப்படியும் நடக்கும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒரு முடிவோடதான் இருக்கப்பு. இது நல்லதுக்கில்லை.

SShathiesh-சதீஷ். said...

விஜய் ரசிகராக படம் திருப்தி இல்லை ஆனால் நீங்கள் சொன்னது போல படம் ஹிட் ஆகிடும் காரணம் எல்லோரும் சென்று பார்ப்பது. விஜய் மாறவேண்டும்.

ஆயில்யன் said...

//
கையில இன்னும் ஒரு விரல் மிச்சமிருக்கு.///


ரசித்தேன் ! :)

மோனி said...

..//நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை//..

So... ஆம்புலண்ஸ் வாங்கிடலாம்ங்குறீங்க...

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு. ரசித்தேன்.

ILLUMINATI said...

//தெலுங்கில் ‘பொம்மாயி’ பாட்டை பார்த்தேன்.//

அப்டியா?எந்த படம் பாஸ்?லிங்க் ப்ளீஸ்.... :)

//நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை.//

செம கலாய்...

Kartheeswaran said...

//நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்லை.// நச்சு கமெண்டு நண்பா...!

Ravi kUMAr said...

அப்படியே படம் பார்த்து, பதிவு எழுதியவர்களும் “ஏன் இந்த படம் பார்த்தோம்?” என்று முதலில் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்கிறார்கள். பிறகே, படத்தை பற்றி சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஏதோ இயற்கைக்கு புறம்பான காரியத்தை செய்த குற்ற உணர்ச்சி, இவர்கள் எழுத்தில் தெரிகிறது.



நிசமா நல்லா எழுதிருக்கிங்க...

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ்

சரவணகுமரன் said...

ஆமாம் டாக்டர்

சரவணகுமரன் said...

வாங்க பட்டாபட்டி

சரவணகுமரன் said...

ரமேஷ், ஹி ஹி...

சரவணகுமரன் said...

வாங்க சதீஷ்

சரவணகுமரன் said...

நன்றி ஆயில்யன்

சரவணகுமரன் said...

ஹி ஹி... ஆமாம் மோனி...

சரவணகுமரன் said...

நன்றி செ.சரவணக்குமார்

சரவணகுமரன் said...

நன்றி ILLUMINATI...

இந்தாங்க பிடிங்க லிங்க்...

http://www.youtube.com/watch?v=acKJy3X7S_k

சரவணகுமரன் said...

நன்றி கார்த்தீஸ்வரன்

சரவணகுமரன் said...

நன்றி ரவிக்குமார்

barathnarayanan said...

Padam one time wathcable....