Tuesday, July 13, 2010

போன வார சினிமா - பழைய மெட்ராஸும், ஆவீயும்

தோசையை சூடாக சாப்பிட்டால் தான் ருசியாக இருக்கும் என்பதுபோல், புதுப்படத்தை உடனே பார்த்தால் தான் ரசிக்கமுடியும் என்பதுபோல், படத்தை பார்த்துவிட்டு பதிவும் உடனே போட்டுவிட வேண்டும். இல்லாட்டி, ஆறிப்போன எபெக்ட் தான். இருந்தாலும், இப்ப எழுத வேறு ஒன்றும் தோணாததால், போன வாரம் பார்த்த படங்களை பற்றியே எழுதுகிறேன்.



வந்தால் கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று நினைத்த இருபடங்கள், சென்ற வாரம் வெளியாகியது. மதராசபட்டிணம் & ஆனந்தபுரத்து வீடு.

---

ஏற்கனவே எனக்கு மதராசபட்டிணத்தின் பாடல்கள் பிடித்துப்போனதை பற்றி இங்கே எழுதியிருக்கிறேன். படத்தில், பின்னணி இசையும் ரொம்ப பிடித்துபோனது. சில இடங்களில் புல்லரிக்க வைத்தது. ஐ மீன், படத்தில் சில இடங்களில்...

ஐம்பது ரூபாய் கொடுத்து இந்த படத்தை பார்த்தேன். செண்ட்ரல் ஸ்டேசனையும், அதையொட்டிய ’சென்னையின் தேம்ஸ்’ நதியை பார்த்ததிலேயே ஐம்பது ரூபாய் சரியாக போய்விட்டது. எது செட், எது கிராபிக்ஸ் என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிராமல் அனுபவிக்கவும். உண்மையிலேயே, இந்த படத்தை பார்ப்பது ஒரு நல்ல டைம் மெஷின் அனுபவம்.

அந்த பழைய நதி, கூவமாக மாறியதை காட்டி, ஹீரோயின் பாட்டி (!) மூக்கை பொத்தும் காட்சி - செருப்படி. இது போல் வெளிநாட்டினரிடம் இருந்து பணம் பறிக்கும் காட்சிகளும். கூவம் சாக்கடையாக மாறியது, சுதந்திரத்திற்கு பிறகு தானா? வெள்ளையர்கள் வெளியேறி, நம்மவர்களின் ஆட்சியில் தானா?

ஒரு உண்மையான கதைக்களத்தில், வரலாற்று காலக்கட்டத்தில், எவ்வித குழப்பமுமின்றி கற்பனையான ஒரு காதல் கதையை உறுதியாக சொல்லியதற்காக இயக்குனருக்கு சபாஷ்.

லகான் மாதிரியிருக்கு, டைட்டானிக் மாதிரியிருக்கு, வழக்கம்போலான சில தமிழ் சினிமாக்காட்சிகள் என்றெல்லாம் சொன்னாலும், ஒரு இளம் குழுவின் கடும் உழைப்பில் உருவாயிருக்கும் தரமான படம் இது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய முழு பங்கையும் கொடுத்திருக்கிறார்கள்.

அபூர்வமாக படம் பார்ப்பவர்களும், பார்க்க வேண்டிய படம்.

---

சந்திரமுகி, அந்தியன் என சில ஜாம்பவான்களின் படங்களில் காட்டியதற்கு முன்பே, அந்த கருவை ஒரு சீரியலில் காட்டியவர் நாகா. இந்திய தொலைக்காட்சி சீரியல்களை பாப்புலாரிட்டி அடிப்படையிலும், தரத்தின் அடிப்படையிலும் வரிசைபடுத்தினால், அவர் இயக்கிய ‘மர்ம தேசம்’ கண்டிப்பாக அதில் ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கும்.

அப்படிப்பட்டவர் இயக்கும் முதல் படமென்பதாலும், ஷங்கர் தயாரிப்பென்பதாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆ.வீ.யில் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படவில்லை.

த்ரில்லிங்காக எதையாவது காட்டிவிட்டு லாஜிக் சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்து சென்றேன். முதல் காட்சியிலேயே, இதில் அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று சொல்லிவிட்டார்கள். ஈரம் போல், இதிலும் நல்ல பேய். ஆனால், நல்ல நந்தா. அம்புலிமாமா டைப் மேஜிக் காட்டுகிறார்கள்.

படத்தில் எனக்கு பிடித்தது - அந்த வீடும், அந்த பையனும். எத்தனை கோடி செலவழித்தாலும், இப்படி ஒரு இயற்கையான நீச்சல்குளத்துடன் வீடு அமைவது சிரமம். பொடியனின் ஹேர் ஸ்டைலும் சிரிப்பும் அருமை.

ஒருகட்டத்திற்கு மேல், ஹீரோவின் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தான், படத்தின் பெரும் பிரச்சினை. அந்த குண்டு வில்லனை பார்க்க, எனக்கு பாவமாக இருந்தது. லட்ச கணக்கில் பணத்தை கொடுத்துவிட்டு, ஹீரோவின் வீட்டில் காவல் காக்கிறார். ஹீரோவும், ஹீரோயினும் இவர் பிரச்சினையை பெரும்பாலும் கண்டுக்கொள்ளவே இல்லை. அய்யோ பாவம்!

ஆனந்தபுரத்து வீட்டில் பழைய ஆவி.

கொசுறு நியூஸ் - ஷங்கர் இன்னும் சில காலத்திற்கு படம் தயாரிக்க போவதில்லையாம். படம் பார்த்து பயந்தது, அவர் ஒருவராகத்தான் இருக்கும்.

.

10 comments:

கானா பிரபா said...

பகிர்வுக்கு நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கொசுறு நியூஸ் - ஷங்கர் இன்னும் சில காலத்திற்கு படம் தயாரிக்க போவதில்லையாம். படம் பார்த்து பயந்தது, அவர் ஒருவராகத்தான் இருக்கும்.///

ரொம்ப குறும்பு போங்கள்

விஸ்வாமித்திரன் said...

:))

'பரிவை' சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

Sukumar said...

படம் பார்த்து பயந்தது அவர் ஒருவரா தான் இருக்கும்..
ஹா ஹா ஹா....
என்ன வார்த்தை சொல்லிட்ட தலைவா... சிரிப்பு தாங்கலை....

சரவணகுமரன் said...

நன்றி கானா பிரபா

சரவணகுமரன் said...

நீங்க பண்றத விடவா, ரமேஷ்?

சரவணகுமரன் said...

வாங்க விஸ்வாமித்திரன்

சரவணகுமரன் said...

நன்றி குமார்

சரவணகுமரன் said...

சுகுமார், ஹி ஹி