Thursday, August 12, 2010

எந்திரன் - துணுக்ஸ்

எந்திரன். நானும் ஜோதியில் ஐக்கியமாகிறேன்.---

பொதுவாக ரஹ்மானின் பாடல்கள் மேல் வைக்கப்படும் விமர்சனம் - ஒரே இயந்திர சத்தம், மனித உணர்வே இல்லை என்பது தான். 'ரோபோவில் அப்படி சொல்ல முடியாதே’ என்று நினைத்தேன். வேறென்னலாமோ சொல்கிறார்கள்.

---

மலேசியா பாடல் வெளியிட்டு விழாவில் கலாநிதி மாறனும், ரஜினியும் நடந்து வந்த போது, மக்கள் ஆரவாரத்துடன் கையசைத்தது கலாநிதியை பார்த்து தானே? - சன் டிவி பார்வையில்.

---

ரஜினி படமோ, ரஹ்மான் படமோ பாடல் வெளிவந்த உடன் கேட்க நினைத்து கேட்டுவிடுவேன். (ஷங்கர் படங்களும் தான். அது ரஹ்மான் படங்களில் அடக்கம்.) இந்த முறை தான் ரொம்ப லேட். இதில் மறக்க முடியாத அனுபவம் - பாபா தான்.

ஹாஸ்டலில் ஒரு டேப் ரிக்கார்டரை சுற்றி அமர்ந்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஏமாற்ற, அடுத்தது அடுத்தது என்று போய்க்கொண்டு இருந்தோம். முடிவில் ”‘மாயா மாயா’ பாடல், நல்லாதானே இருக்கிறது?” என்று எங்களை நாங்களே சமாதானப்படுத்திக்கொண்டு அதை மட்டும் பிறகு கேட்டுக்கொண்டிருந்தோம்.

---

சிவாஜியில் ‘ஏழையாகி பணக்காரனாவது’, ‘கொள்ளையடித்து மக்களுக்கு நல்லது செய்வது’ என்று ரஜினி, ஷங்கர் இருவரது பார்மூலாவும் இருந்தது. இது ஷங்கரின் படம். அதில் ரஜினி நடித்திருக்கிறார் என்பது உண்மையாக இருக்கும் பட்சத்தில், கண்டிப்பாக புது அனுபவம் தான்.

---

தமிழ்படத்திற்கு இவ்வளவு பட்ஜெட்டில் படமெடுக்கும் அளவுக்கு மார்க்கெட் இருக்கிறதா, இல்லையா என்பதெல்லாம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்னும்போது தேவையில்லாத விஷயமாகிறது. சன் டிவி, சூரியன் ஃஎப்எம், தினகரன், குங்குமம், டிடிஎச் என்று சம்பாதிக்க எத்தனை வழிகள்?

ஒரு படம் உருவான விதம் என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு படத்தின் பாடல்கள் உருவான விதம் என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா உருவான விதம் என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

---

புதிய மனிதா - எஸ்.பி.பி. பாடியிருந்தாலும் வழக்கமான தொடக்க பாடல் இல்லை. நல்ல விஷயம் தான்.
அரிமா அரிமா - ஏனோ இந்த பாடல் கேட்கும்போது, சொர்ணலதா ஞாபகம் வந்தார். அவர் பாடியிருக்கலாமோ?
இரும்பிலே ஒரு இதயம் - சிவாஜி ரஜினிக்கு ரஹ்மான் குரலில் டூயட்டா? என்ற சந்தேகமே ஒன்றுமில்லாமல் போனபோது, ரோபோவுக்கு ரஹ்மான் குரல் என்றால் என்ன? நச் தான்.
கிளிமாஞ்சரோ - காட்டுவாசிகளோடு ஆடுவது போல் ஸ்டில்ஸ் வந்ததே? அந்த பாட்டுதான். என்ன வகை படமெடுத்தாலும், ஷங்கர் இப்படி ஒரு பாட்ட விட மாட்டாரே?
காதல் அணுக்கள் - ரஜினி & ஐஸ்வர்யா ராய் லவ் சாங்!!! ட்ரெய்லரில் பார்க்க ஜாலியா இருந்தது.
பூம் பூம் ரோபோடா - கணேஷ் மொபைலில் இதுதான் ரிங் டோன்.
சிட்டி டான்ஸ் தீம் - ரங்கீலா, தால் காலத்திற்கு பிறகு, ரஹ்மானிடமிருந்து ஒரு நீண்ட அதிரடி இசை கலவை.

---

பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்னது,

“நான் ஒண்ணும் பண்ணல. ஒரு குழந்தை மாதிரி என்னை எல்லாம் பண்ண வச்சு, எனக்கு பேரு வாங்கி கொடுக்க கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க.”

அதுதான் ரஜினி.

தொழில்நுட்ப கலைஞர்கள் பேசும் ட்ரெய்லரில், கடைசியில் ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்டுவிட்டு, ஒரு குழந்தையை போல குதூகலிக்கிறார் பாருங்கள்!

மில்லியன் டாலர் பேபி.

.

9 comments:

விக்னேஷ்வரி said...

நல்ல துணுக்ஸ்.

தர்ஷன் said...

//பூம் பூம் ரோபோடா - கணேஷ் மொபைலில் இதுதான் ரிங் டோன்.//

என்னுடையதிலும் அதுதான்

VasuRam said...

உங்களின் தகவல் நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
Link:www.secondpen.com/tamil/what is jaiku?

முகில் said...

//ஒரு படம் உருவான விதம் என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு படத்தின் பாடல்கள் உருவான விதம் என்று சொல்லுவதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா உருவான விதம் என்பதை இப்போது தான் கேள்விப்படுகிறேன்.//
இத்தோட முடியிர விடயம் இல்லையே இது. இன்னும் என்ன என்ன உருவானவிதம் எல்லாம் பாக்கவேண்டியிருக்கோ தெரியலையே!

சரவணகுமரன் said...

நன்றி விக்னேஷ்வரி

சரவணகுமரன் said...

அப்படியா தர்ஷன்

சரவணகுமரன் said...

நன்றி வாசுராம்

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்

சரவணகுமரன் said...

ஆமாங்க நவில்