Friday, December 28, 2007

ரஜினி - பிரகாஷ்ராஜ் : ஒரு ஒப்பிடு!

இவுங்க ரெண்டு பேரையும் இப்ப ஒப்பிடுறதுக்கு என்ன வந்துச்சுன்னு கேக்குறிங்களா? ஒண்ணும் இல்ல... எனக்கு நேரம் போகல... அவ்வளவுதான்... உங்களுக்கும் நேரம் போகலைன்னா பாருங்க...

ரெண்டு பேரும் பிறந்தது கர்நாடகா. பொழைக்கறது தமிழ்நாடு... (ஆந்திராவுந்தான்...) ரெண்டு பேரும் முதல்ல நடிச்சது கன்னட படங்கள். அப்புறமா நடிச்சது தமிழ். ரெண்டு பேரையும் தமிழுக்கு கூட்டிட்டு வந்தது கே. பாலச்சந்தர். ரெண்டு பேருமே தமிழுல வில்லனாக, கதாநாயகனாக, குணச்சித்திரமாக, நகைச்சுவையாக நடிச்சி இருக்காங்க. படங்கள தயாரிச்சி இருக்காங்க...

ரஜினி பொதுவா படங்கள் தயாரிக்குறது, அவரோட முன்னாள் தயாரிப்பாளர்களுக்காக, இயக்குனர்களுக்காக, கஷ்டப்படும் நடிகர்களுக்காக. பிரகாஷ் ராஜ் தயாரிக்குறது, திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும், நல்ல படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கவும். ரெண்டுமே பாராட்டப்படவேன்டியது தான். ஆனாலும் அறிவு ஜீவிகளால் அதிகம் பாராட்டபடுவது பிரகாஷ்ராஜ் தான்.


ரெண்டு பேருமே குருவுக்காக படம் தயாரிச்சி இருக்காங்க (முத்து, பொய்). ஒண்ணு வெற்றி பட சமாச்சாரங்களோடு வந்து ஒரு ரஜினி படமா ஓடிச்சி...இன்னொன்னு குருவே இயக்கி வெளி வரவே ரொம்ப கஷ்டபட்டுச்சி... என்னதான் குரு லாபமடஞ்சாலும் மக்கள் (ரஜினியே) அதிகம் பாராட்டுனது பிரகாஷ்ராஜைதான்.


ரெண்டு பேருமே வெளிப்படையா பேசுரவுங்க... உதாரணத்துக்கு ரஜினி தான் குடிச்சிட்டு ஷூட்டிங் வந்து திட்டு வாங்குனத எல்லாம் சொல்லுவாரு... அதே மாதிரி தான் பிரகாஷ் ராஜும். இது போல் எக்கச்சக்க மேட்டர்கள எல்லாம் ஆனந்த விகடன் தொடர்ல எழுதி இருந்தாரு.


ஆனா ரஜினி பேசும் போது பட்டும் படாம மத்தவங்க மனச நோகடிக்காம பேசுவாரு. பிரகாஷ் ராஜ் மனசுல பட்டதா அப்படியே சொல்லுவாரு. உதாரணத்துக்கு, இந்த பதிவ ரஜினி படிச்சா " Good... நல்ல இருக்கே... என்ன பண்ணிட்டு இருக்கிங்க... work ரொம்ப முக்கியம்... நல்லா பண்ணுங்க.." ன்னு சொல்லுவாரு. பிரகாஷ் ராஜ் னா, "உனக்கு வேற வேல இல்லையா... உருப்படியா எதாச்சும் பண்ணு" ன்னு சொல்லுவாரு... கரெக்ட்' தான்... வேலைய பார்ப்போம்... :-)

2 comments:

Sridhar V said...

// உங்களுக்கும் நேரம் போகலைன்னா பாருங்க...
//
எவ்வளவோ பண்றோம்... இத பண்ண மாட்டாமோ? :-)

//ரெண்டு பேருமே குருவுக்காக படம் தயாரிச்சி இருக்காங்க (முத்து, பொய்). //

'முத்து' தயாரிச்சது கவிதாலயா. ரஜின் பாலசந்தருக்காக நடிச்சு கொடுத்திருக்கார். இது வரைக்கும் தயாரிக்கலை. அந்த தப்பை அவர் செய்யவே இல்லை (அவர் பாணியில). ஆனா அவரோட தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்ட போது நிறைய உதவியிருக்கார்னு படிச்சிருக்கேன். :-)

'பொய்' டி.வி. சீரியலா வர வேண்டியது படமா எடுத்திருக்க வேண்டாம்.

வெத்து வேட்டு said...

if you compare both in positive way..it is against Tamil culture..you have to bash rajni then only we will be happy