Thursday, July 31, 2008

குசேலன் - சிங்கம் அசிங்கமானது

“கலாட்டா பண்றவங்கள உதைக்க வேண்டாம்?”

“நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும்? படத்தை ரிலிஸ் பண்ணலைன்னா எனக்கு ஒண்ணும் நஷ்டம் இல்லை.”

“படத்த ரிலிஸ் பண்ண விடுங்க. நான் தவறை உணர்ந்து விட்டேன். நான் இனி இத்தவறை செய்ய மாட்டேன்”
என்ன இது? அரசியல்வாதி தோத்தான்.

இந்த மன்னிப்பு தேவையா?

பெங்களூர்ல இருக்குற உண்மையான ரஜினி ரசிகன்கிட்ட “உனக்கு குசேலன் பார்க்கணுமா? இல்ல உன் தலைவன் மன்னிப்பு கேட்கணுமா?”ன்னு கேட்டா, அவன் ஆணியே புடுங்க வேண்டாம்’ன்னு சொல்லியிருப்பான்.இந்த மன்னிப்பு, பெங்களூர்ல உள்ள ரஜினி ரசிகர்களைக் குசேலன் பார்க்க வச்சியிருக்கலாம். சாய்மீரா நிறுவனத்துக்கு ஒரு அஞ்சு சதவிகிதம் (?) அதிகம் லாபம் தரலாம். ஆனால், ரஜினி இனி எடுக்க போகும் ஒவ்வொரு முடிவின் ஸ்திரத்தன்மையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது.

படம் வெளியாகும் முன்பே, ரஜினிக்கு ஒரு தோல்வி.

இதுக்கும் மேலே எவனாவது “மன்னிக்கறவன் மனுசன்… மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுசன்”ன்னு சொன்னா, ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. :-)

46 comments:

சின்னப் பையன் said...

//பெங்களூர்ல இருக்குற உண்மையான ரஜினி ரசிகன்கிட்ட “உனக்கு குசேலன் பார்க்கணுமா? இல்ல உன் தலைவன் மன்னிப்பு கேட்கணுமா?”ன்னு கேட்டா, அவன் ஆணியே புடுங்க வேண்டாம்’ன்னு சொல்லியிருப்பான்//

:-))))

ராஜ நடராஜன் said...

நான் முதல் போட்டிக்க்றேன்.

ராஜ நடராஜன் said...

ச்ச்சி...ச்சின்னப்பையன் முந்திகிட்டாரு:)

பொன்னர் said...

இந்தப் பதிவைக் கொஞ்சம் பாருங்கள்.
http://kumarankudil.blogspot.com/2008/07/blog-post_24.html

rapp said...

//ரஜினி இனி எடுக்க போகும் ஒவ்வொரு முடிவின் ஸ்திரத்தன்மையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்கி உள்ளது//

அப்போ இவ்ளோ நாளா அவர நம்பிக்கிட்டா இருந்தீங்க????????????
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....................................

rapp said...

//இதுக்கும் மேலே எவனாவது “மன்னிக்கறவன் மனுசன்… மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுசன்”ன்னு சொன்னா, ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. :-)
//

இதில் உள்குத்து எதுவும் இல்லையே????????????

Anonymous said...

ரஜினிகாந்தின் நடவடிக்கை அரசியல்வாதிகளை விட கேவலமானது.

rapp said...

புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வாங்க :):):)

Anonymous said...

Ivan vandha arasiyal ennavo punithamaiyudum madiri pesina rasika kunjunga engae ponanga..

indha vekkam ketta vishayathai pathi pesa oru aalaiyum kaanuma.

Ivan mattum CM aana.. MK, JJ ellam pichai vanganum.

G.Ragavan said...

ஹா ஹா ஹா

ரஜினிக்கு நடிக்கத் தெரியும்னு இப்பத்தாங்க நான் ஒத்துக்கிறேன். :-)

http://gragavan.blogspot.com/2008/07/rajini-apology-kuselan.html

ச.பிரேம்குமார் said...

ரஜினி என்ன செய்வார் பாவம். எழுதிக்கொடுத்தால் தான் அவருக்கு வசனம் பேச வரும் போல. இல்லாவிட்டால் இப்படி உளறிக்கொட்டி கொண்டிருப்பார். பஞ்ச் டயலாக்கெல்லாம் படத்துக்கு தான் ஒத்து வரும்.

இனியாவது தமிழக மக்கள், ரஜினி ரசிகர்கள் திருந்துவார்களா பார்ப்போம். குறைந்தபட்சம் நம் பதிவர்களாவது குசேலன் படம் பார்ப்பதை தவிர்ப்பார்களா அல்லது வரிந்துக்கட்டி கொண்டு குசேலன் படத்திற்கு விமர்சனம் எழுதுவதை நிறுத்துவார்களா என்று பார்ப்போம்.

இதெல்லாம் ஒரு பொழப்பான்னு தான் கேட்க தோன்றுது

சரவணகுமரன் said...

வாங்க ச்சின்னப்பையன்

சரவணகுமரன் said...

ராஜ நடராஜன், பரவாயில்லை... லூசுல விடுங்க... :-)

சரவணகுமரன் said...

த்ரிஷா, அது போன வாரம்... இது இந்த வாரம்... :-)

இது வடிவேலு ஸ்டைல் இல்ல... ரஜினி ஸ்டைல்...

சரவணகுமரன் said...

த்ரிஷா, அது ரஜினிக்கு டிவி சேனல்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறித்து எழுதப்பட்ட பதிவு. இன்னிக்கி வரை, அது அப்படித்தான் இருக்கு...

சரவணகுமரன் said...

//அப்போ இவ்ளோ நாளா அவர நம்பிக்கிட்டா இருந்தீங்க????????????

ஆஹா, நல்லா கேக்குறாங்கையா கொஸ்டின்னு... :-)

சரவணகுமரன் said...

//இதில் உள்குத்து எதுவும் இல்லையே????????????

ஹி... ஹி...

இந்த மன்னிப்புக்கு அப்புறமும் இப்படி சொல்லி ரஜினி மதிப்பு ஒரு பக்கம் கூடத்தான் போகுது...

சரவணகுமரன் said...

அனானி, நியாயமான கேள்விகளை நாகரிகமான முறையில், அதாங்க அவன் இவன்னு சொல்லாம மரியாதையா கேட்டாதான், சரியா சென்றடையும்... நியாயம் இருக்கும்.

சரவணகுமரன் said...

//குறைந்தபட்சம் நம் பதிவர்களாவது குசேலன் படம் பார்ப்பதை தவிர்ப்பார்களா

வாய்ப்பே இல்ல... மன்னிப்பு கேக்குற அளவுக்கு இந்த படத்துல என்ன இருக்குன்னு பார்க்க கிளம்பிடுவாங்க... :-)

சரவணகுமரன் said...

G.Ragavan, பதிவு சூப்பர்...

ஜெகதீசன் said...

:)
வாழ்க சூப்பர் ஸ்டார்.... :)
///
//குறைந்தபட்சம் நம் பதிவர்களாவது குசேலன் படம் பார்ப்பதை தவிர்ப்பார்களா

வாய்ப்பே இல்ல... மன்னிப்பு கேக்குற அளவுக்கு இந்த படத்துல என்ன இருக்குன்னு பார்க்க கிளம்பிடுவாங்க... :-)
///
ஓசியாக திருட்டு வீசீடியோ அல்லது ஆன்லைனில் நல்ல பிரிண்ட்டோ கிடைத்தால் கூடப் பார்க்கப் போவதில்லைன்னு முடிவு செய்துவிட்டேன் நான்....
:P

கோவி.கண்ணன் said...

சிங்கத்துக்கே சீக்கு வந்தால் அந்த சிங்கம் தான் என்ன பண்ணும் கர்ஜனைதான் :) இப்ப முடியல வயசாகிவிட்டது அதனால் வளைந்து கொடுக்கிறது !

வந்தியத்தேவன் said...

படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் தான் ரஜனி இப்படி ஒரு நாடகத்தை நடத்தி மக்களை இழுக்கிறாரோ. லக்கிலுக்கின் விமர்சனம் படியுங்கள். ஆகஸ்ட் கொடுமை ரஜனியைத் துரத்துகின்றது. ஆனாலும் சகல டாப் 10லும் 1 இடத்தில் குசேலன், விகடன் 50 மார்க் கொடுக்கும் ஆகக்குறைந்தது 42 ஆவது கொடுப்பார்கள். குமுதம் பரவாயில்லை அல்லது சுமார் என விமர்சனம் போடுவார்கள். எதற்க்கும் உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என வரும் தீபாவளிக்கோ பொங்கலுக்கோ கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள் அன்றைக்குப் பார்த்துக்கொள்ளலாம்.

Anonymous said...

I want only the Nayantara portion of the movie.

ஜோசப் பால்ராஜ் said...

//இதுக்கும் மேலே எவனாவது “மன்னிக்கறவன் மனுசன்… மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுசன்”ன்னு சொன்னா, ஒண்ணும் சொல்லுறதுக்கில்லை. :-)//

சத்தியராஜ் பாணியில திட்டிடுங்க.

என்ன பேசுறோம்னு தெரியாம பேச வேண்டியது, அப்றம் அய்யோ காசு போச்சேன்னு மன்னிப்பு கேட்க்க வேண்டியது. இனிமே தானா அவரு சம்பாதிக்க போறாரு? இப்டி கேவலமா ஒரு 2 கோடி சம்பாதிக்கிறதுக்குபதிலா இமய மலைக்கே போயிடலாம்.

ஜோசப் பால்ராஜ் said...

http://maraneri.blogspot.com/2008/08/blog-post.html -
என் பதிவையும் பாருங்க.

Syam said...

//அவன் ஆணியே புடுங்க வேண்டாம்’ன்னு சொல்லியிருப்பான்//

super... :-)

சரவணகுமரன் said...

//ஓசியாக திருட்டு வீசீடியோ அல்லது ஆன்லைனில் நல்ல பிரிண்ட்டோ கிடைத்தால் கூடப் பார்க்கப் போவதில்லைன்னு முடிவு செய்துவிட்டேன் நான்....

நல்ல முடிவு... பட விமர்சனங்களும் அதற்க்கு வலு சேர்க்கும் போல் உள்ளது...

சரவணகுமரன் said...

//இப்ப முடியல வயசாகிவிட்டது அதனால் வளைந்து கொடுக்கிறது

அவரு சிங்கம் இல்ல... சிங்கம் மாதிரி...

சரவணகுமரன் said...

//படத்தில் ஒன்றும் இல்லை என்பதால் தான் ரஜனி இப்படி ஒரு நாடகத்தை நடத்தி மக்களை இழுக்கிறாரோ.

அப்படியும் இருக்கலாம்... அவரு நிலைமையும் இப்படி ஆகிடிச்சே...

சரவணகுமரன் said...

//I want only the Nayantara portion of the movie.

அனானி, இந்த பரபரப்புக்குள்ளயும் உங்களுக்கும் கிளுகிளுப்பு தேவைப்படுது? :-)

சரவணகுமரன் said...

//சத்தியராஜ் பாணியில திட்டிடுங்க.

அவரு பாருங்க, இன்னைக்கு செம ஜாலியா இருப்பாரு....

சரவணகுமரன் said...

நன்றி, syam

Anonymous said...

ithulam oru polapa.....ivan lam kasukaga enna venum nalum pannuvan....

Anonymous said...

ரஜினி என்ற உள்ளீடற்ற உருவத்தின் மீது கட்டமைக்கப்படும் பிம்பத்தின் சரிவு, உருவத்தின் சரிவு எனப்பிதற்றுகிறோம்.

பொருளின் உள்ளடக்கதிற்குத்தான் விளம்பரம் துணை போகவேண்டும். விளம்பரத்தால் வெறும் குப்பைகளை வியாபாராமாக்க முடியாதென்பது வெகு விரைவில் புரிந்து விடும்.

உருப்புடாதது_அணிமா said...

கடைசி போனி ஆஜர் ஸார்..
(நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்))

சரவணகுமரன் said...

அனானி, நியாயமான கேள்விகளை நாகரிகமான முறையில், அதாங்க அவன் இவன்னு சொல்லாம மரியாதையா கேட்டாதான், சரியா சென்றடையும்... நியாயம் இருக்கும்.

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி, வடகரை வேலன்.

சரவணகுமரன் said...

//நாங்க பதிவ படிக்க மாட்டோம் ஆனா பின்னூட்டம் மட்டும் இடுவோம்

நல்ல பாலிஸி... உருபடாததது...

தீரன் said...

அசிங்கம் அசிங்கமாவே தான் இருக்கு...நாம தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருந்தோம்...இனிமேலாவது திருந்தினா சரி ..நல்ல தொகுப்பு...நாக்க புடிங்கின மாதிரி இருக்கு !

சரவணகுமரன் said...

நன்றி தீரன்.

gundumama said...

ரஜினி எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக தான் செய்துள்ளார். அவரை அநியாயத்துக்கு தலையில் தூக்கி வைத்து ஆடியது நமது தப்பு அதற்கு ரஜினியை குறை சொல்லுவது சரி இல்லை.

எல்லோருக்கும் பிடித்தவனாக வாழ நினைப்பது தவறா? நீங்களே உங்கள் முதல் பதிவில் ஷாருக் கான் மனோஜிடம் மன்னிப்பு கேட்டதை பற்றி எழுதி இருந்திர்கள். உங்கள் பதிவிலிருந்து,
// ஆனால் எந்த வித ஈகோவும் பார்க்காமல் தன்மேல் கோபம் கொண்டவர்களையும் தன்னை விரும்புபவர்களாய் மாற்றியதற்கு பாராட்டுக்கள் //

ஷாருக்கான் செய்தல் மட்டும் பாராட்டு ரஜினி செய்ய நினைத்தால் வசையா?

BTW I'm not a Rajini Rasigan :)

சரவணகுமரன் said...

gundumama, ஷாருக்கான் படத்தில் கிண்டல் செய்ததற்கு நேரில் மன்னிப்பு கேட்டார். தவிர, அது படம் ஓட வேண்டியதற்காக இல்லை. (அதற்காக ஷாருக்கான் ரஜினியை விட யோக்யம் என்று சொல்ல வரவில்லை.) ரஜினி, எல்லோருக்கும் நல்லவராய் இருப்பதில் தப்பில்லை. அப்படி இருக்க வேண்டுமென்றால், அப்படி பேசி இருக்க கூடாது. ஒரு உணர்ச்சி வேகத்தில் பேசி இருந்தாலும், மறு தினம், மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும். அதை விடுத்து, பேசியது தப்பில்லை என்று ஒரு நாளும், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ஒரு நாளும் கூறிவிட்டு, கடைசியில் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலையில் மன்னிப்பு கேட்பது தான் உறுத்துகிறது.

BTW, I'm a Rajini rasigan :-)

Unknown said...

வணக்கம் ...
இன்னும் வளர என் வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
http://loosupaya.blogspot.com

சரவணகுமரன் said...

//இன்னும் வளர

sharevivek, வாழ்த்துறீங்களா திட்டுறீங்களா? :-)

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/