Thursday, August 7, 2008

குசேலன் - பி. வாசுவை கேவலப்படுத்திய சுஹாசினி

அறிவுஜீவி சினிமா விமர்சகரான திருமதி. சுஹாசினி, ஜெயா டிவியில் வழங்கி வரும் "ஹாசினி பேசும் படம்" நிகழ்ச்சியில் குசேலனை விமர்சனம் செய்தார். அதுலதான் இயக்குனர் பி. வாசுவை மேடம் கேவலப்படுத்திடாங்க. அப்படி என்ன பண்ணுனாங்கன்னு பார்க்குறதுக்கு முன்னாடி படத்தைப் பத்தி என்ன சொன்னாங்கன்னு பார்ப்போம்.


படத்தை ரொம்ப மாத்தாம எடுத்ததால நல்லா இருந்ததாம். படத்தோட ஒளிப்பதிவு, கலர்ஸ் எல்லாம் நல்லா இருந்ததாம்.

படத்தோட ப்ளஸ் பாயிண்ட்ஸ் என்னன்னா, கதை, நடிகர்கள் தேர்வு மற்றும் ரஜினியின் பங்காம்.


மீனா, நயன்தாராயோட நடிப்பு (அத காமிக்கவே இல்லன்னு சொல்றீங்களா?), பசுபதியோட ஸ்கோப்ப கூட்டியிருக்கலாம்ங்கறதேல்லாம் மைனஸ் பாயிண்ஸ்சாம்.

மொத்ததுல ரேட்டிங் பாலன்ஸ் ஆகி நியூட்ரல் மார்க்காம்.

நயன்தாரா கேரக்டர் வேஸ்ட்டாம். அத தூக்குனாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லையாம். அவுங்க தன்னோட பிகரை காட்டுறதுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இருக்காங்களாம். ஆனா அவங்களுக்கு பயங்கர தன்னம்பிக்கையாம். ராதிகா, நதியாவுக்கு அப்புறம், ஸ்கிரின்ல ரஜினி கூட ரொம்ப கான்ஃபிடன்ஸா இருக்குறது நயன்தாராதானாம்.

சரி. மேட்டருக்கு வாரேன். அப்படி என்ன பி. வாசுவைப் பத்தி நம்ம பதிவர்கள் சொல்லாத அளவுக்கு சொன்னாங்க தெரியுமா?

"பி. வாசு எடுத்ததுலயே பெஸ்ட் படம் இதுதான்" :-)

14 comments:

Anonymous said...

/பி. வாசு எடுத்ததுலயே பெஸ்ட் படம் இதுதான்/

I agree with you.

Ravi

Anonymous said...

நானும் கடேசி பத்து நிமிஷம் பாத்தேன்.
ஒரு நக்கல் சிரிப்போடயே பேசுன மாதிரி இருந்துச்சு.
ஆனாலும் ரொம்ப நெஞ்ச நக்கிச் பேசுச்சு. இதுல வேற ஏதோ வார்த்தைகள மறந்து போன மாதிரி நிறுத்தி நிதானமா யோசிச்சு, யோசிச்சு பேசுச்சு. பார்க் ஹோட்டல்ல கட்டிங் போடாம் கைகால் நடுக்கம் வந்திருச்சோ என்னவோ?

அப்புறம் எவனோ ஒரு வெளங்கா மண்டையன கூட்டிட்டி வந்து உன் ஊட்டுக்காரியத் தெரியும், வேலக்காரியத் தெரியும்ன்னு மொக்க போட்டிருந்தது. ஷாட் இடைவேளையில பேச வேண்டியதையெல்லாம் நிகழ்ச்சியில பேசி உயிர எடுக்குது.

சரவணகுமரன் said...

வாங்க ஜெகதீசன்

சரவணகுமரன் said...

Ravi, Agree with suhasini?

Anonymous said...

பாஸ்...

இந்தம்மா ஆந்திரா சிரஞ்சீவி கட்சி மகளிர் அணி பொதுச்செயலாளர் போஸ்ட் "வாங்கீட்டாங்க"...

பார்த்து சூதானமா இருங்க...

கொல்ட்டிங்களை அனுப்பி உங்களை கோங்கூரா சட்னியாக்கிடப்போறாங்க

சரவணகுமரன் said...

ஆஹா... இந்த நியுஸ் புதுசா இருக்கே...

FunScribbler said...

hahaha...கலக்கிட்டீங்க!!

சரவணகுமரன் said...

வாங்க Thamizhmaangani :-)

Anonymous said...

சுஹாசினி என்னமோ கரீடாதான் சொல்லிக்கீது அப்போ பீ வாசு மத்த படமெல்லாம் எவ்ளோ மோசம்னு நீங்களே பாத்துகிடுங்க

தமிழ் பொறுக்கி said...

பி.வாசு இயக்கியதிலேயே பணக்காரனுக்கு அப்புறம் இப்ப தான் ரஜினிக்கு நல்ல படம் கொடுத்திருக்கராருன்னு சொல்லுங்க...
கடைசியில பாலச்சந்தர் மட்டும் தனியா கிளைமாக்ஸ் பார்த்து அழுததா தகவல்...

சரவணகுமரன் said...

//கடைசியில பாலச்சந்தர் மட்டும் தனியா கிளைமாக்ஸ் பார்த்து அழுததா தகவல்...//
எதுக்கு? இந்த படத்தை போய் தயாரிக்க வேண்டியதா போயிட்டேன்னா?

Tech Shankar said...Ahaa.. Idhu verayaa?

Anonymous said...

ivvalavu kodumaiyaa oru padam eduthu en kaasai kaali pannittaan-nu azhudhaaro ennamo?!?

Tech Shankar said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்