Sunday, October 5, 2008

காதலில் விழுந்தேன், சக்கரகட்டி, ராமன் தேடிய சீதை

காதலில் விழுந்தேன்

முதல் பாதி லவ் பண்றவங்களுக்கும், காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்களுக்கும் பிடிக்கும். ரெண்டாம் பாதி மனித குரங்குகளுக்கு வேண்டுமானால் பிடிக்கும். ஹீரோ மேனரிசம் விக்ரம் போன்றே இருக்கிறது. நாக்க முக்க பாட்டுக்காக குழந்தைகளை இப்படத்தை கூட்டி போக விரும்பினால், ரொம்ப கஷ்டப்பட வேண்டி இருக்கும்.

சக்கரக்கட்டி

இவ்ளோ பட்டும், இந்த படத்தை தாணு எடுக்க துணிந்தது, ஆச்சரியம். இந்தியாவின் சிறந்த திரைக்கதையாசிரியர், தன் மகனின் முதல் படமாக இதை தேர்தெடுத்து இருப்பது, இன்னொரு ஆச்சரியம். சாந்தனு, ஜெயம் ரவி போலிருக்கிறார். பாடல் காட்சிக்கு காட்டவேண்டிய ரியாக்சனை படம் முழுக்க காட்டுகிறார். படத்தில் கதாநாயகி, நாயகனின் நண்பர்கள் அனைவரும் டி.ராஜேந்தர் படத்தில் வரும் நடிகர்களை ஞாபகப்படுத்துகிறார்கள். படுத்துகிறார்கள். மேல்தட்டு இளைஞர்கள் பேசும் பேச்சு இவ்ளோ மொக்கையாவா இருக்கும்?

ராமன் தேடிய சீதை

விறுவிறுப்பான படம், மெகா சீரியல் ரசிகர்களுக்கு. இந்த படம் நல்லாயிருக்கு என்று சொல்லும் அளவுக்கு, மற்ற படங்கள் ரசிகர்களை சோதித்துள்ளது. யதார்த்த நாயகன் மேல் மட்டும் நம்பிக்கை இல்லாமல், பசுபதி, நிதின் சத்யாவையும் நம்பி இருக்கிறது மோசெர் பேயேர். கூடிய விரைவில், இருபத்தியஞ்சு ரூபாய்க்கு எதிர்பார்க்கலாம்.

இந்த மூணு படங்களிலுமே, ரெண்டு மூணு நல்ல பாடல்கள் உள்ளது. விஜய் ஆண்டனி, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர் மூவருமே பாராட்டுக்குரியவர்கள்.

காதலில் விழுந்தேன் - தோழியா, உன் தலை முடி
சக்கரக்கட்டி - டாக்ஸி, மருதாணி, சின்னம்மா
ராமன் தேடிய சீதை - இப்பவே இப்பவே, மழை நின்ற பின்பும்

5 comments:

rapp said...

me the first?

rapp said...

ஹா ஹா ஹா, சூப்பர் விமர்சனம்.

//படத்தில் கதாநாயகி, நாயகனின் நண்பர்கள் அனைவரும் டி.ராஜேந்தர் படத்தில் வரும் நடிகர்களை ஞாபகப்படுத்துகிறார்கள்//

//விறுவிறுப்பான படம், மெகா சீரியல் ரசிகர்களுக்கு//

இதுதான் பன்ச். நான் நெனச்சத அப்டியே வார்த்தையில கொண்டுவந்துட்டீங்க:):):):) கலக்கலோ கலக்கல்

சரவணகுமரன் said...

நன்றி rapp, வருகைக்கும் கருத்துக்கும்... :-)

Anonymous said...

காதலில் விழுந்தேன் - தோழியா, உன் தலை முடி

http://www.youtube.com/watch?v=PgZgubuT2DM

சரவணகுமரன் said...

ஓ! அது இங்க இருந்து உருவியதா?

உனக்கென நான், எனக்கென நீ...

சுட்டி காட்டியதற்கு நன்றி, பெயரில்லா