Monday, February 23, 2009

ஆஸ்கர் வாழ்த்துக்களும் மனசாட்சியின் குரலும் :-)

நகைச்சுவையா இருக்கோ இல்லையோ, இப்பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல.

கலைஞர்

சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்தச் செல்வம் இன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்றதன் மூலம் தரணி வாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்றுவிட்டார்.

ஆதலால், சிறுபான்மை சமுதாயத்திற்கு கழகம் செய்திட்ட தொண்டினை எண்ணி தங்கள் வாக்கினை உதயசூரிய... அச்சச்சோ, இனி வாழ்த்து அறிக்கையோ?

ரஜினி

ஒவ்வொரு தமிழருக்கும், இந்தியருக்கும் பெருமை சேர்த்துவிட்டார் ரஹ்மான்.

இனி எந்திரன், ஓவர்சீஸ்ல சும்மா அதிரும்ல...

ஜெயலலிதா

ரஹ்மான், இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

ஆமா, நம்ம இளைஞர் பாசறை என்னாச்சு? பன்னீர்...

கமல்

ஆஸ்கார், அமெரிக்காவின் உச்சம். அதையே உலகின் உச்சம் என்று நினைத்து நின்று விட கூடாது. அதை தாண்டி செல்ல வேண்டும்.

ம்ம்ம்... இனி ஆஸ்கார், ஆஸ்கார்ன்னு நம்ம உயிரை எடுக்க மாட்டாங்க...

சோனியா

இந்தியாவை பெருமையடைய செய்த ரஹ்மானுக்கும், இந்த படத்தில் பங்காற்றிய நடிகர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இந்தியாவை பற்றி இப்படி ஒரு படம் எடுக்கும் நிலை உள்ளதற்கு, காங்கிரஸிற்க்கும் எனக்கும் உள்ள பங்கை மறந்துவிட வேண்டாம்.

ப.சிதம்பரம்

ஆஸ்கார் விருதுக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு பணம் பரிசாக வழங்கப்பட்டு இருந்தால் அவருக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று நிதிமந்திரியிடம் பரிந்துரைசெய்வேன்

இதன் மூலம் அவர் சொத்து மதிப்பை தெரிந்து கொள்ளலாம். ஓ! இப்ப, ஐடி டிபார்ட்மெண்ட் நம்மக்கிட்ட இல்லையோ?

ராம.நாராயணன்

அந்த மாபெரும் தமிழனுக்கு சென்னையில் விரைவில் தமிழ் திரையுலகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும். திரையுலகில் உள்ள அனைத்து பிரிவினரும் சேர்ந்து இவ்விழாவை நடத்துவார்கள்.

வராதவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ச்சே, பழக்கதோஷத்துல இதுதான் வருது.

ஹாரிஸ் ஜெயராஜ்

நம்மாளு வாங்குனதுல ரொம்ப சந்தோஷம்.

இனி தமிழ் பக்கம் அவ்ளோவா வரமாட்டாருல்ல. மக்களே, இனி நான் இருக்கேன்.

யுவன்

தமிழ்ல இருந்து போயி ஆஸ்கார் வாங்குனது பெருமை பட வேண்டிய விஷயம். எங்க குடும்பத்துல எல்லோருக்கும் சந்தோஷம்.

ஆனா, அப்பாவை தான் காணும்.

எஸ்.ஜே.சூர்யா

ரொம்ப மகிழ்ச்சி. நான் ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.

என்னை யாரும் மறந்திடாதிங்க. நானும் டைரக்டர் தான்... டைரக்டர் தான்... ஆமா, சொல்லிட்டேன்.

13 comments:

வினோத் கெளதம் said...

//ஆதலால், சிறுபான்மை சமுதாயத்திற்கு கழகம் செய்திட்ட தொண்டினை எண்ணி தங்கள் வாக்கினை உதயசூரிய... அச்சச்சோ, இனி வாழ்த்து அறிக்கையோ?//

Kalakal..

கணேஷ் said...

//நானும் நானும் டைரக்டர் தான், நானும் டைரக்டர் தான்..

விழுந்து விழுந்து சிரித்தேன்.. கலக்கல் போஸ்ட்.

முரளிகண்ணன் said...

\\வராதவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\\

சூப்பர்

சரவணகுமரன் said...

நன்றி வினோத் கௌதம்

சரவணகுமரன் said...

நன்றி கணேஷ்

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

RAMASUBRAMANIA SHARMA said...

"நல்ல நகைச்சுவை...எல்லோரும் ரசிக்க வேண்டும்"...

RAMASUBRAMANIA SHARMA said...

ஆம்...

Anonymous said...

//காங்கிரஸிற்க்கும் எனக்கும் உள்ள பங்கை மறந்துவிட வேண்டாம்.
//

ROTFL :))

சரவணகுமரன் said...

நன்றி RAMASUBRAMANIA SHARMA

சரவணகுமரன் said...

நன்றி ambi

ராமய்யா... said...

//காங்கிரஸிற்க்கும் எனக்கும் உள்ள பங்கை மறந்துவிட வேண்டாம்.
//

Semma Comedy Sir Neenga..

சரவணகுமரன் said...

நன்றி ராம்ஜி