Saturday, February 7, 2009

நான் கடவுள் - உச் உச் உச்

பாலா, படம் பார்க்க வருபவர்களை எல்லாம் கதிகலங்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்துதான் படம் எடுப்பார். இதுவும் அப்படியே.

பிச்சைக்காரர்களின் உலகம்தான் இந்த படத்தின் கதைக்களம். பாலா, பிச்சைக்காரர்களை பரிதாபமாக காட்டி படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தை பெறுகிறார். தியேட்டர் முழுவதும் ஒரே உச் உச் சத்தம். அந்த மொட்டை வில்லனும் இதையே தான் படத்தில் செய்தான்.

ரஹ்மான், ஹாரிஸ், யுவன், டிஎஸ்பி இப்படி தமிழ் சினிமாவின் இசையே மாறி போய் கிடக்க, இளையராஜாவின் அதே பழைய கால இசை இப்ப வித்தியாசமா தெரியுது. வயலினும் உடுக்கையும் தான் முக்கிய இசை கருவிகள்.

ஹீரோ அறிமுகம் ஒரு பாடல் மூலம்தான். ஆனால் இந்த மாதிரி அறிமுகமாக எந்த ஹீரோவும் ஆசைப்பட மாட்டார்கள்.

ஆர்யாவின் கர கர குரல் மாற்றம் நன்றாக இருந்தது. படத்தில் அவருக்கு ரெண்டே காஸ்ட்யூம் கெட்டப். கருப்பு முழு உடை. கருப்பு ஜட்டி. அஜித் நடிப்பதாக இருந்ததால், வெற்றுடம்புடன் ஆர்யா நடக்கும்போது, தொப்பையுடன் தலயை நினைச்சி பார்த்தேன். ஹா ஹா ஹா.

எதுக்கு அழகான பூஜாவை கஷ்டப்பட்டு கறுப்பாக்கி, அடையாளம் தெரியாம ஆக்கி நடிக்க வைக்கணும்? பாலா நினைச்சா யாரைனாலும் நடிக்க வைச்சிடுவாரு. படம் முழுக்க, பல கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை தேடி பிடித்து நடிக்க வைத்திருப்பது போல், இதற்கும் பொருத்தமான யாரையாவது நடிக்க வைத்திருக்கலாமே? பூஜா நன்றாக செய்திருந்தார்.

சண்டைக்காட்சிகளில் ஆர்தர் வில்சன் கேமராவை விரட்டியிருந்தார். நல்ல விறுவிறுப்பு.

கிளைமாக்ஸ் முடிஞ்ச பிறகும், மக்களுக்கு புரியலை. இன்னும் என்னமோ இருக்கும்ன்னு உக்கார்ந்திருக்காங்க. அப்புறம், பாலான்னு டைட்டில் போட்டதுக்கப்புறம் தான், ஏமாற்றத்தை காட்டிக்காம எந்திரிச்சு போனாங்க. யாரும் திருப்தியா போன மாதிரி தெரியலை. இதையா மூணு வருஷம் எடுத்தாங்கன்னு பேசி கொண்டு சென்றார்கள்.

சில இடங்களில் என்னால் வசனத்தை சரியாக பின் தொடர முடியவில்லை. தியேட்டர் பிராப்ளமா, இல்லை, தமிழ்-சமஸ்கிருதம்-மலையாளம்-தேனி ஸ்லாங் என்ற கலவை பிராப்ளமா என்று தெரியவில்லை.

மற்ற பாலா படங்களில் இருந்தது போல், இதில் எனக்கு முழு திருப்தியில்லை.

7 comments:

முரளிகண்ணன் said...

சரவணகுமரன், யதார்த்தமான விமர்சனம்

RAMASUBRAMANIA SHARMA said...

சார் "நான் கடவுள்" படத்தின் கதை என்னவென்று நீங்கள் சொல்லவேயில்லை....!!!!

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

RAMASUBRAMANIA SHARMA, அதான் நிறைய பதிவுகளில் வந்து விட்டதே!

சரவணகுமரன் said...

PADIKKATHAVAN, ஏன் இத்தினி கோபம்? நான் அப்படி ஒண்ணும் மோசமா சொல்லலியே?

SurveySan said...

:) சிம்பிளா சொல்லியிருக்கீங்க.

சரவணகுமரன் said...

நன்றி surveysan