Saturday, April 4, 2009

’பசங்க’களுக்கு ’சர்வ’ ’மரியாதை’

இப்ப தலைப்புல இருக்குற மூணு படங்களேட பாட்ட தான் கேட்டுட்டு இருக்கேன். ஆனா, இந்த மூணு படங்களிலுமே ஒன்றிரண்டு பாடல்கள் தான் எனக்கு பிடித்திருக்கு. அதான் அர்த்தமே இல்லாம இப்படி ஒரு தலைப்பு.

பசங்க

சுப்பிரமணியபுரத்திற்கு பிறகு ஜேம்ஸ் வசந்தம் இசையில் வெளிவந்திருக்கும் படம். டாக்டர், பால முரளிகிருஷ்ணன், ஒரு பாட்டு பாடியிருக்காரு, பாருங்க. சூப்பர்ப். ‘அன்பாலே அழகான வீடு’ என்று ஆரம்பிக்கும் பாட்டுதான் இந்த படத்தின் ‘கண்கள் இரண்டால்’. உண்மையான குழந்தைகளும், பால முரளிகிருஷ்ணன் என்னும் இன்னொரு குழந்தையும் பாடியுள்ள பாடல். அவர் குரலிலும் ஒரு மழலை உள்ளது. கேட்டுக்கிட்டே இருக்கலாம். ஆரம்பம் - இந்திரா ‘நிலா காய்கிறது’ மாதிரி இருக்குல்ல?

இந்த படத்தில் மொத்தம் நாலு பாடல்கள். மற்றதில், ’ஒரு வெட்கம் வருதே’ நல்லா இருக்கு. ஸ்ரேயா கோஷல். அது போதாது?

சர்வம்

பாட்டு வந்து ரொம்ப நாள் ஆச்சு. பில்லாவுக்கு பிறகு விஷ்ணுவர்த்தன்-யுவன் காம்பினேஷனில் வரும் படம். நான் கடவுளுக்கு (சிவா மனசுல சக்தி) அப்புறம் ஆர்யா நடித்துள்ள படம். லவ்-திரில்லர் சப்ஜெக்ட். ஏதொவொரு படம் பார்க்கும்போது தியேட்டர்ல ட்ரெய்லர் பார்த்தேன். சூப்பரா இருந்தது.
பாட்டுல ரொம்ப பிடித்தது, இளையராஜா பாடியுள்ள வெஸ்டர்ன் பாட்டு. ரொம்ப என்ஜாய் பண்ணி பாடியிருப்பாரு. யுவன் அப்பாவை நல்லா பயன்படுத்துறாரு. அப்புறம் விஜய் ஜேசுதாஸ் பாடியிருக்குற ‘சுட்டா சூரியனை’ பாட்டும் நல்லா இருக்கு. நடுவுல வருற ‘மேகம் கருக்குது மழை வர பார்க்குது’ பிட் சூப்பர். மத்தபடி வழக்கமான யுவன் பாடல்கள்.

தீம் மியூசிக், பாதி மெலடியாவும் மீதி மிரட்டல் அடியாவும் இருக்குது. படமும் அப்படித்தான் இருக்குமுன்னு இயக்குனர் சொல்லியிருக்காரு. ஆனாலும், பில்லா தீம் கிட்ட வராது.

எந்திரன் படத்துல பணியாற்றுவதாக சொன்ன இரண்டு பிரபலங்கள், இந்த படத்தில் இருக்காங்க. சக்ரவர்த்தி, வில்லனாக. ஒளிப்பதிவு - நீரவ் ஷா.


மரியாதை

விஜயகாந்த் பட பாடல்கள் கேட்டு ரொம்ப நாளாச்சு. ‘காதல் ஆராரோ’, ‘மூக்குத்தி முத்தழகு’, ‘தந்தன தந்தன தை மாசம்’ - இதெல்லாம் அவரு படத்துல எனக்கு பிடிச்ச பாடல்கள். விக்ரமன் - ராஜ்குமார் ஒரு பிரபலமான கூட்டணி. ஆனா, இதுல அவுங்க கிடையாது. ’நாக்க முக்க’ விஜய் ஆண்டனி. விக்ரமன் படத்துல யார் மியூசிக் போட்டாலும் ஒரே மாதிரிதான் இருக்கு. ராஜ்குமார், சிற்பி, ஜோஷ்வா, இப்ப விஜய் ஆண்டனி. ரஹ்மான் இசை எப்படி இருந்தது. ஞாபகம் இல்லை.

எனக்கு எம்.ஜி.ஆர். பாட்டுல ‘இன்பமே உந்தன் பேர்’ பாட்டு பிடிக்கும். இதுல அத ரீ-மிக்ஸ் பண்ணியிருக்காங்க. பாடியிருக்குறது - உதித். அவரோட ஹிந்தி உச்சரிப்பு - ஒரு மென்மையான குழந்தைத்தனமா இருக்குது. தமிழ் கொலை பஞ்சாயத்து வேற. இசை அடக்கமா இருக்குறதால நல்லா இருக்கு.

மத்ததெல்லாம் விக்ரமன் ஸ்டைல். அதுலயும் ‘அடடா அடடா’ன்னு ஒரு பாட்டு இருக்கு பாருங்க. நான் ஒவ்வொரு விக்ரமன் படத்துல இருந்தும் இந்த மாதிரி ஒரு பாட்டு எடுத்து காட்டுவேன்.

அப்புறம், விக்ரமன் படத்துல ஒரு பாட்ட ஹீரோ ஒரு தடவை, ஹீரோயின் ஒரு தடவைன்னு பல டைம் பாடுவாங்களே? இதுலவும் அப்படி ஒரு பாட்டு இருக்கு. இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால்,

விக்ரமன் இன்னும் திருந்தலை. ஜாக்கிரதை.

6 comments:

ஷங்கர் Shankar said...

நல்ல அலசல்!
சர்வம் ட்ரைலர் சூப்பரு!

வினோத் கெளதம் said...

//விக்ரமன் இன்னும் திருந்தலை. ஜாக்கிரதை.//
படம் பாக்க வேணாம்னு சிம்பாலிக்கா சொல்லறிங்க போல..

சரவணகுமரன் said...

நன்றி ஷங்கர்

சரவணகுமரன் said...

வினோத்,

ஹி ஹி... அப்படின்னு இல்ல. விக்ரமன் இப்ப வேற மாதிரி எடுத்துருப்பாருன்னு நினைக்க வேண்டாம்ன்னு சொன்னேன்.

கிரி said...

சரவணகுமரன் நீங்கள் ஒரு இசை ரசிகர் போல :-)

அடிக்கடி பாடல்கள் பற்றிய பதிவை காண நேரிடுகிறது.. நல்லா இருக்கு

சரவணகுமரன் said...

ஆமாம் கிரி... கேட்க மட்டும் தான் தெரியும் :-)

நன்றி கிரி...