Monday, April 13, 2009

ஆனந்த தாண்டவம்

ஆரம்பத்தில் சுஜாதா படம் போட்டபோது ரெண்டு பேரு கை தட்டினார்கள். அட! பரவாயில்லையேன்னு நினைச்சேன். அப்புறம் தமன்னா பேர் போடும்போது பத்து பேரு கை தட்டுனாங்க. அதானே?

இது ரொம்ப காலம் முன்பு விகடனில் வந்த தொடர்கதை. அத இப்ப படமெடுக்குறோம்னு என்னமோ பண்ணிட்டாங்க. தற்காலத்தில் வரும் இயக்குனர் இமயம், இயக்குனர் சிகரங்களோட பிளாப் படங்கள் போல் உள்ளது.

இயக்குனர் காந்தி கிருஷ்ணா, ஷங்கருக்கு ஒரு கை. இவர், ரொம்ப காலம் முன்பு எஞ்சினியர் என்று அரவிந்த் சுவாமி, மாதுரி தீட்ஷித் வைத்து ஒரு படம் ஆரம்பித்தார். அது தொடரவில்லை. பிறகு, செல்லமே. பலன், தமிழ் நாட்டிற்கு புரட்சி தளபதி கிடைத்தார். இன்கம் டாக்ஸ் சம்பிராதயங்கள் போன்றவற்றில் ஸ்ட்ராங் என்பதாலோ என்னவோ, சிவாஜியில் பணி புரிந்தார். இப்ப, ஆனந்த தாண்டவம். ம்ஹும்.

ஒரே ஆறுதல், ஆங்காங்கே வரும் வசனங்கள்...

மதுமிதா கதாபாத்திர அமைப்பு ரொம்ப இன்ட்ரஸ்டிங் ஆனது. தமிழ் படத்தில் பார்க்கும் போது என்னவோ போல இருக்கிறது. தமன்னா, நல்ல சாய்ஸ். கொஞ்ச காலம் முன்பு எடுத்திருந்தால், லைலா.

படத்தோட ஹீரோ, சித்தார்த் - தமிழ் சினிமாவில் ரவி கிருஷ்ணாவிற்கு கடும் போட்டியாக இருப்பார். ருக்மிணியும் அவர் பேசுறதும் அழகு.

படத்தோட டைமிங் சரியில்லை. ஆனா, நாவலை இப்ப படிச்சாலும் நல்லா இருக்கும்னு நினைக்குறேன். கொஞ்ச நாள் கழிச்சு, டிவியில பார்க்கலாம்.

படம் முடிஞ்சி வெளிய வந்த ஒரு குடும்ப பாங்கின் கமெண்ட் - கோர தாண்டவம்!

4 comments:

கிரி said...

//ஆரம்பத்தில் சுஜாதா படம் போட்டபோது ரெண்டு பேரு கை தட்டினார்கள். அட! பரவாயில்லையேன்னு நினைச்சேன். அப்புறம் தமன்னா பேர் போடும்போது பத்து பேரு கை தட்டுனாங்க. அதானே?//

:-))))

கத்தார் சீனு said...

மிக அருமையான அற்புதமான நாவல் ....பிரிவோம் சந்திப்போம் ...
இப்ப மட்டும் இல்ல...எப்ப படிச்சாலும் பிடிக்கும் !!!

சரவணகுமரன் said...

நன்றி கிரி

சரவணகுமரன் said...

நன்றி சீனு