Wednesday, April 29, 2009

தேர்தலில் வெற்றி யாருக்கு?

இந்த முறை ஐபிலை விட சுவாரஸ்யமாக உள்ளது, தேர்தல் ட்வெண்டி-20.

ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்திய அரசியல்வாதிகளின் பணத்தை பற்றி கேள்வி கேட்டு அத்வானி பவுன்சர் போடுகிறார் என்றால், பொருளாதாரத்தை நூறு நாட்களில் சரி கட்டுவேன் என்று கூறி மன்மோகன் சிங் பந்துடன் சேர்த்து பேட்டையும் பவுண்டரிக்கு அனுப்புகிறார்.

தேர்தல் வாக்குறுதியாக, தனி ஈழம் பெற்று தருவேன் என்று அதிரடியாக முதல் ஓவரிலேயே சிக்ஸர் அடிக்கிறார் ஜெயலலிதா. நான் இந்த தேர்தலில் அம்மா தேசிய அளவில் வெயிட்டை காட்டுவார் என்று நினைத்து கொண்டிருக்கும்போது, சர்வதேச அளவில் தன் பார்வையை காட்டி வழக்கம்போல், என் நினைப்பில் மண்ணை போட்டுவிட்டார்.

இந்த தேர்தலிலேயே இந்த ஷாட் தான் நச் ஷாட் என்று நினைத்து கொண்டிருக்கும் போது, மூத்த அணி தலைவர் யாருக்கும் தெரியாமல் முதல் பாலில் யார்க்கர் போட பார்த்தார். சாகும்வரை உண்ணாவிரதத்தை லஞ்ச் வரை வெற்றிகரமாக நடத்தி, தலைவர் போட்ட பால் கலக்கல், விக்கெட் காலி, போர் நிறுத்தம் என்று அனைவரும் நினைத்து கொண்டிருக்கும்போது, ‘நாங்க அப்படி சொல்லவே இல்லை’ என்று இலங்கை அரசு, தலைவர் போட்ட பாலை ‘நோ பால்’ ஆக்கி விட்டார்கள். உணர்ச்சிமயமாக காலையில் மாஸாக இருந்தது, மாலையில் காமெடி பீஸாக மாறி விட்டது.

மக்களும் எந்த வருடமும் இல்லாத வகையில், கூட்டங்களில் கலந்து கொண்டு செருப்பு வீசி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

கேப்டன், நாட்டாமை, முத்துராமன் மகன், சிம்பு அப்பா இவுங்கல்லாம் என்ன பண்றாங்கன்னு தெரியலை. டி.ராஜேந்தரை தேமுதிக கட்சிகாரங்க நாலு பேர் போயி மிரட்டியது இந்நிலையில் ஒரு பரபரப்பு செய்தி. அதுக்கு பதிலா, அவரை மரியாதை படத்துக்கு ஏமாற்றி கூட்டிட்டு போயிருக்கலாம்.

----

யாருக்கு ஓட்டு போடலாம்ன்னு நடந்த ஒரு விவாதம்.

“மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா கூட்டணிதான் நாட்டு முன்னேற்றத்துக்கு நல்லது.”

“ஆனா, அவுங்க இலங்கையில போர் நடத்தி மக்களை கொன்னுட்டு இல்ல இருக்காங்க”

“பிஜேபி வந்தா போர் நின்னுடுமா?”

“இருந்தாலும், யார் பேச்சையும் கேட்காம போர் நடத்திட்டு இருக்குற காங்கிரஸுக்கு எதிர்ப்பு காட்ட வேண்டாமா?”

“எதிர்ப்ப காட்டுனா எல்லாம் சரியாகிடுமா?”

ம்ம்ம்ம்...

“பிஜேபி வந்தா என்ன பண்ண முடியும்? மன்மோகன், சிதம்பரம் மாதிரி பைனான்ஸ் எக்ஸ்பர்ட் இருக்காங்களா?”

“ஹலோ! யாரு ஆட்சிக்கு வந்தாலும், இந்தியா ஒரே மாதிரி தான் முன்னேறும். பெருசா ஒண்ணும் வித்தியாசம் இருக்காது. பிஜேபி ஆட்சியில கூட இந்தியா முழுக்க ரோடு போட்டு இந்தியா ஒளிர்கிறதுன்னு சொன்னாங்க.”.

“இப்ப என்ன பண்ணலாம்ன்னு சொல்ற? யாருக்கு ஓட்டு போட சொல்ற?”

“அதான் தெரியல. அதுக்குதான் உன்கிட்ட கேட்குறேன்”

“அய்யோ.....”


----

பொதுவா, பிரச்சாரத்தின்போது எந்த கட்சி முதலில் ஒரு நிலையை எடுக்குதோ அது தான் ஜெயிக்கும்ன்னு சொல்லுவாங்க.

போன தேர்தல்ல, திமுக ஒரு ரூபாய் அரிசியை முதல்ல சொல்லியது. பின்னாடி அதிமுகவும் அதையே சொன்னாலும், திமுகதான் ஜெயித்தது. அதேப்போல் தான், மற்ற மாநிலங்களிலும் நடந்தது. பைக்ல பிக்கப் இருக்குற வண்டிதான், ரேஸ்ல ஜெயிப்பது போல்.

இப்ப, அதிமுக தனி ஈழத்தை முதல் குரலாக முழங்கியிருக்கு. திமுக அதை தொடர்கிறது. அதனால், அதிமுக ஜெயிக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிகிறது.

இது பற்றி ஒரு விவாதம்.

“அம்மா கலக்கிட்டாங்க. அவுங்களுக்கு தான் நாப்பதும்.”

“நீ யாருக்கு ஓட்டு போடுவ?”

“அம்மாவுக்குதான்”

“ஏன்?”

“ஈழத்துக்கு ஆதரவா சொல்லியிருக்காங்களே?”

“ஜெயிச்சா ஏதாவது பண்ணவா போறாங்க?”

“தெரியல. இல்லன்னு கூட வைச்சுக்கோ.”

“அப்புறம் எதுக்கு?”

“அதுக்காக ஒண்ணுமே பண்ணாத கலைஞருக்கா ஓட்டு போடுறது?”

“நீயே சொல்ற. ஜெயிச்சா அம்மா பண்றது நிச்சயம் இல்லன்னு. அப்புறம் எதுக்கு போடுற?”

“சும்மானாச்சுக்காவது அம்மாவால தனி ஈழம்ன்னு தைரியமா சொல்ல முடியுது. ஐயாவால அது கூட பண்ண முடியலையே. ஈழத்தை பேசுனவுங்களை எல்லாம் தூக்கி உள்ள போட்டாங்க. அம்மாவை டச் பண்ண முடியுமா?”

ஜெயலலிதா, இவ்ளோ நாள், கொடநாட்டுல ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தாலும், தேர்தலின் போது ஏதாச்சும் சொல்லி போட்டிக்கு முன்னாடி வந்துடுறாங்களே? கலைஞர் - ஜெயலலிதா நேரடி போட்டிக்கு தமிழகத்தில் முடிவே வராதா?

----

எனக்கென்னமோ மத்தியில் காங்கிரஸ் அடி வாங்கும் என்றும், தமிழகத்தில் அதிமுக அணி பெரும்பான்மை பெறும் என்றும் தோன்றுகிறது. பார்ப்போம்.

13 comments:

epowerx said...

ந‌ல்ல‌ ப‌திவு. மிக‌ அருமையாக‌ ம‌க்க‌ள் ம‌ன‌தை ப‌ட‌ம் பிடித்திருக்கிறீர்க‌ள்.

சரவணகுமரன் said...

நன்றி epowerx

DHANS said...

மத்தியில் காங்கிரஸ் மரண அடி வாங்கும்

அம்மா 28 தொகுதிகளை பிடிப்பார்..

மூன்றாவது அணிக்குள் பிரதமர் பதவிக்கு போட்டி போடுவார், கடைசியில் பா ஜா கா வுக்கு ஆதரவு கொடுப்பார்.

ஈழம் பத்திலாம் கேட்காதீங்க

Senthil said...

good opinion

சரவணகுமரன் said...

நன்றி DHANS

சரவணகுமரன் said...

நன்றி செந்தில்

Anonymous said...

//பொருளாதாரத்தை நூறு நாட்களில் சரி கட்டுவேன் என்று கூறி மன்மோகன் சிங் பந்துடன் சேர்த்து பேட்டையும் பவுண்டரிக்கு அனுப்புகிறார்//

:))
The new 'Ezha Thai' avatar of our mummy is a really scary one...

Regards,
Lakshmi

கதிர் said...

தமிழ் நாட்டில் இருக்கும் பல பிரச்சனைகளையும் விட்டுவிட்டு, ஈழ பிரச்சனையை மட்டும் பேசி மக்களை உணர்ச்சிவசபடவைத்து, அரசியல் செயது கொண்டுள்ளார்கள். தேர்தலுக்கு பிறகு அனைத்தையும் மறந்து விடுவார்கள்.

Anonymous said...

//அதுக்கு பதிலா, அவரை மரியாதை படத்துக்கு ஏமாற்றி கூட்டிட்டு போயிருக்கலாம்.
//

//“சும்மானாச்சுக்காவது அம்மாவால தனி ஈழம்ன்னு தைரியமா சொல்ல முடியுது. ஐயாவால அது கூட பண்ண முடியலையே//

ammpudduthen....

நரேஷ் said...

சரியாத்தான் சொல்லியிருக்கீங்க....

சரவணகுமரன் said...

நன்றி லக்ஷ்மி

சரவணகுமரன் said...

நன்றி கதிர்

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்