Wednesday, August 5, 2009

இன்ஜினியரும் மேனேஜரும்

அது ஒரு நேஷனல் ஹைவேயை இணைக்கும் சிறு சாலை. சாலை, பக்கமிருந்த விளை நிலங்களிலிருந்து சற்றே உயரத்தில் இருந்தது. சாலையை விட்டு இறங்கி ஒருவன், எதையோ நிலத்தில் சில கருவிகளால் அளந்து கொண்டிருந்தான். அப்போது சாலையில் வேகமாக வந்த ஒரு கார் வழுக்கிக் கொண்டு நின்றது.

இவன் திரும்பி பார்க்க, கண்ணாடியை இறக்கிவிட்டவாறே ஒரு பெண்.

“ஹலோ! ஒரு ஹெல்ப். என் ப்ரண்ட பார்க்க அவசரமா போறேன். இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கேன். இப்ப எங்க இருக்கேன்னு தெரியலை. கொஞ்சம் உதவ முடியுமா?”

செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்தி விட்டு, காரை நோக்கி பேசிக்கொண்டே வந்தான்.

“இப்ப நீங்க நான் இருக்குற இடத்தில இருந்து பத்து அடி உயரத்துல இருக்கீங்க. கடல்மட்டத்துல இருந்து, 3000 அடி உயரத்துல. சென்னைக்கும் பெங்களூர்க்கும் இடையே 120 கிலோமீட்டர் தூரத்துல 41 டிகிரி ஆங்கிள்ல இருக்கீங்க.”

யோசித்த பார்வையுடன், ஸ்டிரியங் பக்கம் திரும்பினாள். மெல்லியதாய் தனக்குள் சிரித்து கொண்டாள். திரும்பி அவனிடம்,

“நீங்க ஒரு இன்ஜினியராத்தான் இருக்கணும்.”

நடந்து வந்து கொண்டிருந்தவன் நின்றான்.

“ஆமாம். எப்படி சொல்றீங்க?”

“நீங்க சொன்னது எல்லாம் டெக்னிக்கலா கரெக்ட். இருந்தும் அதுல எனக்கு தேவையான தகவல் எதுவும் இல்லை. ஸோ, இன்னமும் நான் தொலைந்த நிலையில் தான் இருக்கிறேன். உண்மையிலே, நீங்க சொன்னது எதுவும் எனக்கு உபயோகமா இல்லை. என் பயண நேரத்தை இன்னும் சிறிது வீணாக்கியது மட்டும் தான் உங்களால் முடிந்தது.”

நின்றவன் திரும்பி, தான் நடந்து வந்த தூரத்தையும், தூரத்தில் இருந்த தன் கருவிகளையும் பார்த்தான். அவளிடம் திரும்பி,

“நீங்க மேனேஜரா?”

“ம். எப்படி சொன்னீங்க?”

வலது கரத்தை தன் வயிற்றுக்கு குறுக்கே வைத்து, இடது கையால தன் கன்னத்தை தட்டியவாறே,

“ம்ம்ம்... உங்களுக்கு நீங்க எங்க இருக்கீங்கன்னும் தெரியலை. எங்க போறீங்கன்னும் தெரியலை. இப்ப இந்த கார்ல இந்த உயரமான ரோட்ல இருக்கீங்க. ஒரு வாக்குறுதி வேற கொடுத்திருக்கீங்க. ஆனா, அதை எப்படி காப்பாத்த போறீங்கன்னும் தெரியாம கொடுத்திருக்கீங்க. இந்த லட்சணத்துல, உங்களுக்கு கீழே இருக்குறவன், உங்க பிரச்சினையை எல்லாம் தீர்க்கணும்ன்னு ஒரு எதிர்ப்பார்ப்பு. பின்ன, நீங்க மேனேஜராத்தான் இருக்கணும்.”


.

16 comments:

நரேஷ் said...

ஹா ஹா ஹா

டவுசர் பாண்டி said...

ரொம்ப சோக்கா கீது , தலீவா !! எனுக்கு ஒரு சந்தேகம் இன்னாது,

//ஒரு வாக்குறுதி வேற கொடுத்திருக்கீங்க//

இன்னா வாக்கு குட்திச்சி
அந்த பொம்பள ? பிரியலயே ?

மகேந்திரன் said...

அட்டகாசம் சரவணா..
மண்ணின் மணம் மாறாமல் கதையை மாற்றுவதில் நீங்கள் கில்லாடி..

சென்ஷி said...

:-))

அருமை!

91001103021 said...

தூள் மா.

யாசவி said...

True one

:-))

மதன் said...

நானும் ஹா ஹா ஹா..

M.Thevesh said...

இதே மாதிரியான கதை
எங்கோ வாசித்ததாக
ஞாபகம்.எங்கே என்று
நினைவில் இல்லை.
ஆனாலும் அருமை.

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்

சரவணகுமரன் said...

நன்றி டவுசர் பாண்டி

//இன்னா வாக்கு குட்திச்சி
அந்த பொம்பள ? பிரியலயே ?//

நைனா, அதோட ப்ரண்ட பார்க்குறதுக்கு? நீ ஏதும் தப்பா நென்சிக்காதே...

சரவணகுமரன் said...

நன்றி மகேந்திரன்

சரவணகுமரன் said...

நன்றி சென்ஷி

சரவணகுமரன் said...

நன்றி ஸ்டார்

சரவணகுமரன் said...

நன்றி யாசவி

சரவணகுமரன் said...

நன்றி மதன்

சரவணகுமரன் said...

நன்றி Thevesh...

இது மின்னஞ்சலில் வந்ததுதான். அதில் பலூனில் பறப்பதாக வரும். நான் மாற்றியுள்ளேன்.