Wednesday, August 19, 2009

நாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே?

பியரா சிங், வயது 80. ஒரு கொலைக்குற்றத்துக்காக தூக்கு தண்டனை பெற்றவர், கடந்த 20 ஆண்டுகளாக அமிர்தசரஸ் சிறையில், 12க்கு 6 அடி அறையில் அடைப்பட்டுக்கிடக்கிறார். கருணை வேண்டி, 12 வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதிக்கு மனு செய்திருந்தார். இன்னும் பதில் வரவில்லையாம். போய் சேர்ந்திருச்சான்னே தெரியலை.

கருணையே வேண்டாம். என்னை கொன்றுவிடுங்கள் என்கிறார். ”எனக்கு தூக்கு என்று தீர்ப்பு வழங்கிய நாளே, என்னை தூக்கிலிட்டு இருக்க வேண்டும்.”

தாமதிக்கப்படும் கருணை, பெருங்கொடுமை. இதற்கு மேல், அவருக்கு என்ன தண்டனை கொடுக்க முடியும்?

---

சாலைகளில் மூடப்படாத சாக்கடை துவாரங்களில், மனிதர்கள் விழும் விபத்தை பற்றி அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்போம். அப்படி ஒரு செய்தியை படித்தேன். இந்த முறை விழுந்தது - ஒரு யானை. தாய்லாந்தில். அவ்வளவு பெரிய சாக்கடை குழியா?

சில விஷயங்களில், நம் நாடு பரவாயில்லை என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்.

---

தமிழ் படங்களுக்கு பொருத்தமான டைட்டில் வைக்கிறார்களோ, இல்லையோ, தமிழில் மொழிமாற்றம் செய்து வரும் ஆங்கில படங்களுக்கு பொருத்தமாகத்தான் பெயர் வைக்கிறார்கள். சமீபத்தில் நான் அப்படி பார்த்த ஒரு தலைப்பு - ருத்ர மனிதர்கள் 2009. மனிதர்களை உண்ணுபவர்களை பற்றிய கதையாம். ’நான் கடவுள்’ படத்தில் ருத்ரன் தானே, மனிதர்களை தின்பான். அதான், அப்படி தின்பவர்களை பற்றிய படத்திற்கு ருத்ர மனிதர்கள் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

கொஞ்சம் நாள் முன்னாடி, இப்படித்தான் ‘300 பருத்தி வீரர்கள்’ என்று ஒரு படம் வந்தது.

---

போன விநாயகர் சதுர்த்திக்கு, விடுமுறை தினத்தை முன்னிட்டு என்று சொல்லி கலைஞர் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டார்கள். இந்த வருடம் விடுமுறை தினமான ஞாயிறு அன்று தான் சதுர்த்தியே வருகிறது.

இப்ப, என்ன செய்வீங்க...???

---

தவணை முறையில மிக்ஸி வாங்கிருப்போம்... கிரைண்டர் வாங்கியிருப்போம்... டிவி வாங்கியிருப்போம்... இனி ஜீன்ஸும் வாங்கலாம். இப்படி ஒரு அருமையான திட்டத்தை கொண்டு வந்திருப்பது, லெவிஸ் நிறுவனம். முதல் கட்டமாக, பெங்களூரில் மட்டும். மூணு மாச வட்டியில்லா தவணையில, ஜீன்ஸ் பேண்ட் வாங்கிக்கலாம்.

கடனை கட்டி முடிக்கறதுக்குள்ள, எப்படியும் எவனும் ஜீன்ஸை துவைச்சி இருக்க மாட்டான். இப்ப, கடனை கட்ட முடியாட்டி, என்ன பண்ணுவாங்க? ஜீன்ஸை புடுங்கிட்டு போயிடுவாங்களா?

ச்சீய்...

---

பன்றி காய்ச்சல் இந்தியாவில் பரவுவதற்கு காரணம், அமெரிக்க சதியாம். புலனாய்வு பத்திரிக்கைகளின் கவர் ஸ்டோரி இது. ஷாருக் விவகாரத்தில், அம்பிகா சோனி சொன்னது போல், இதற்கும் நாம் பதிலடி கொடுக்க வேண்டும்.

ஊருக்குள் சேரனால் தான் முடியும் என்கிறார்கள்.

சேரன் சார், பொக்கிஷம் படத்தை ஆஸ்கர்க்கு அனுப்புங்க.

.

9 comments:

மகேந்திரன் said...

"தாமதிக்கப்படும் கருணை, பெருங்கொடுமை."..
கன்னத்தில் அறைவதைப்போன்ற வார்த்தை சரவணா..

"ஜீன்ஸை புடுங்கிட்டு போயிடுவாங்களா?"
சூப்பர்..

யாசவி said...

nice chat :-)

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//சில விஷயங்களில், நம் நாடு பரவாயில்லை என்று எண்ணிக்கொள்ள வேண்டியதுதான்//
சில விஷயங்களில் அல்ல, பல விஷயங்களில்!

நரேஷ் said...

நல்ல நக்கல்...

அதே சமயம் உங்க டச்சும் கூட...

நல்லாயிருக்கு!!!
(சேரன் மேல ஏன் இந்த கொலை வெறி!!!)

சரவணகுமரன் said...

நன்றி மகேந்திரன்

சரவணகுமரன் said...

நன்றி யாசவி

சரவணகுமரன் said...

நன்றி பாலகுமாரன்

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்...

சேரன் மேல, எனக்கென்ன கோபம்? ஏதோ, நாலு பேரு சொன்னத நான் சொன்னேன் :-)

பொக்கிஷம் இன்னும் பார்க்கலை... நீங்க பார்த்தாச்சா?

நரேஷ் said...

இன்னும் இல்லீங்க...

நிலா, பாட்டைக் கேட்டவுடனே சரி படம் பாக்கலாமோன்னு நினைச்சேன்... ஆனா அதுக்கடுத்து ஒரு பாட்டு போட்டாங்க, சேரன் அப்பிடியே அலைஞ்சு திரியற மாதிரி...

அதைப் பாத்தவுடன் முடிவை பரிசீலனை பண்ண ஆரம்பிச்சேன், வலைப்பதிவுல சிலரோட கருத்தைக் கேட்டவுடன் பயமா இருக்கு....