Monday, August 3, 2009

சாப்ட்வேர்காரர்களின் மொழி

ஸ்வீட்ஸ் கடையில்,

”அண்ணே, கொஞ்சம் அந்த முறுக்கை கொடுங்கண்ணே... டெஸ்ட் பண்ணிக்குறேன்.”

(வாங்குறதுக்கு முன்ன, டேஸ்ட் பார்க்கணும்மாம்)

---

ஆஸ்பிட்டலில்,

”என்னைக்கு டாக்டர், அவர ரிலீஸ் பண்றீங்க?”

(டிஸ்சார்ஜத்தான் அப்படி கேட்குறாரு)

---

புதுசா கல்யாணம் ஆனவன், போனில் சாப்ட்வேர் நண்பனிடம்,

”ஏண்டா கல்யாணத்துக்கு வரலை?”

”அன்னைக்கு டெலிவரி இருந்திச்சுடா...”

”உன் பொண்டாட்டிக்கா?”

!

---

ஆசிரமத்தில்,

”சாமி, வாழ்க்கையில எனக்கு ஒரே Issues... இதுக்கெல்லாம் என்ன Solution?”

(அவருக்கு வாழ்க்கையில பிரச்சினையாம்... அதுக்கு என்ன தீர்வுங்குறத இப்படி கேட்குறாரு)

---

”அவுங்க ஹனிமூனுக்கு ஆன் சைட் போறாங்க...”

(வெளிநாடு போறதுன்னாவே, ஆன்சைட் தான்)

---

குழந்தை சாப்ட்வேர் அப்பாவிடம்,

”அப்பா, Threadன்னா என்னப்பா?”

“அத ஏன்’ம்மா கேட்குற? சரி... இப்ப ஒரு சமயத்துல, ஒரு வேலையை...”

அம்மா உள்ளேயிருந்து, “Threadன்னா நூல்’டீ”

---

இன்னொரு குழந்தை அவுங்க சாப்ட்வேர் அப்பாவிடம்,

“டாடி, String’ன்னா என்ன டாடி?”

“String'ன்னா Text. வார்த்தைகள். வாக்கியங்கள்.”

“அப்புறம் எதுக்கு டாடி, புக்ல கயிறு மாதிரி படம் போட்டுருக்கு?”

---

டிவி ஷோரூமில் சேல்ஸ்மேனிடம்,

என்னோட requirement என்னன்னா,....

(டிவின்னு இல்ல, சிலரு டீக்கடையில போயும் requirement சொல்றாங்க)

---

மனைவி கணவனிடம்,

ஏங்க, வாசிங்மெஷின் பாதில நின்னுருச்சுங்க...

Restart பண்ணுடீ!

---

டேய், காலையில எங்க பெரியப்பா போன காரு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சி..

ஓ! அப்படியா? இப்ப status என்ன?

.

26 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

said...

ஹி ஹி.. :)

said...

ஓ! அப்படியா? இப்ப status என்ன?]]


ஹா ஹா ஹா

said...

ஓ.கே..., ஓ.கே...,

said...

ஹி ஹி ஹி...

இதுல எல்லாமே நமக்கு ஒத்து வருது :)

said...

:-)))

said...

வாங்க இராம்

said...

நன்றி ஜமால்

said...

வருகைக்கு நன்றி சுரேஷ்

said...

வெட்டிப்பயல்,

அதானே? வரணுமே... :-)

said...

வாங்க சந்தனமுல்லை

said...

:) முடியல... சத்தியமா த்ரெட்னா நூலை விட நம்ம thread தான் முதல்ல மனசுல வருது...

arul said...

ungala mathiri yosika innorutharu varanm.. he..he...

said...

ஆமாங்க ஆகாய நதி :-)

said...

நன்றி அருள்

said...

100% உண்மை

said...

நன்றி சூரியன்

said...

எனக்குப் பிடித்தது - த்ரெட்னா நூல்டீ...

இப்படி தப்பு தப்பா சொல்லித்தந்தா எப்படி பொண்ணு பெரிசாகி ஆணி புடுங்கும்? :-)

said...

:))))))

said...

he he.. ;)

இதில பல துணுக்குகள் உங்க சொந்த அனுபவத்திலருந்து வந்த மாதிரி தெரியுதே..!
;o)

said...

அனைத்தும் அருமை.

/டிவின்னு இல்ல, சிலரு டீக்கடையில போயும் requirement சொல்றாங்க/

இது அனைத்திலும் அருமை.

said...

hehe...

true;

said...

நன்றி நாகு...

அதுவுமா அதே ஆணியை புடுங்க போகுது?

said...

நன்றி ஜோ

said...

நன்றி Bee'morgan... சொந்த அனுபவங்களும் உண்டு. சுத்தி நடக்குற அனுபவங்களும் உண்டு.

said...

நன்றி துபாய் ராஜா

said...

நன்றி Mãstän