Friday, July 31, 2009

”கன்சல்டன்சில இருந்து பேசுறோம்”

ட்ரிங் ட்ரிங்...

“ஹலோ”

“கிருஷ்ணனா?”

“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”

“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”

“சொல்லுங்க”

“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”

“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”

“இது ஒரு முன்னணி பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். உங்களுக்கு இந்த வேலையில் எத்தனை ஆண்டு அனுபவம் உள்ளது?”

“ஆறு வருஷம்”

“உங்க தொழில்நுட்ப அனுபவங்களை பத்தி சொல்லுங்க?”

“நான் கடந்த ஆறு வருடங்களாக இணைய தொழில்நுட்பத்தில் வேலைப் பார்த்துவருகிறேன். தற்போது தொழில்நுட்ப அணித்தலைவராக இருக்கிறேன்.”

“உங்கள் வருடாந்திர சம்பளம்?”

“எட்டு லட்சம்”

“எவ்வளவு சம்பளம் எதிர்ப்பார்க்கிறீர்கள்?”

“பத்து லட்சம்”

“இந்த நேரத்தில் இது அதிகம். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.”

“சரி.”

“இந்த வேலை கிடைத்தால், எவ்வளவு நாட்களில் சேர முடியும்”

“ஒரு மாதம். என்னிடம் சில கேள்விகள் உள்ளது.”

”கேளுங்க”

“நான் வெளிநாட்டு பணியை எதிர்ப்பார்த்து இருக்கிறேன். அதற்கு வாய்ப்புள்ளதா?”

“கண்டிப்பா. நீங்கள் சேர்ந்த சில நாட்களில் வெளிநாடு அனுப்பப்படுவீர்கள்.”

“அதேப்போல், இனி நான் அதிகமாக மேலாண்மை பொறுப்பில் ஈடுபட எண்ணியுள்ளேன். பணி உயர்வு வாய்ப்பு எப்படி?”

“உங்கள் தகுதியை பார்க்கும் போது, நீங்கள் அதற்கு தகுதி உள்ளதாக தோன்றுகிறது. பிரகாசமான வாய்ப்பு உள்ளது”

“பணி சூழ்நிலை எப்படி? வேலை நேரம் என்ன? அதிக நேரம் வேலை பார்ப்பதில் தொந்தரவில்லை. ஆனால், அதுவே தொடர்ச்சியாக இருக்க கூடாதுல்ல. இங்க பார்த்தீங்க, நைட் பத்து மணிவரை இருக்க வேண்டி இருக்கிறது.”

“பணி சூழ்நிலை சிறந்த நிறுவனம் இது. பணி நேரம் இங்கு சிறப்பா நிர்வாகம் செய்யப்படுகிறது.”

“சரி சரி”

“வேறேதும் கேள்வி உள்ளதா?”

“இல்லை.”

“நேர்காணலுக்கு இந்த சனிக்கிழமை வரமுடியுமா?”

“ம்ம்ம்.... சரி. வருகிறேன். எங்கு?”

“டைடல் பார்க்.... ஏபிசி கம்பெனி”

“போன வைய்யா! நான் அங்கத்தான் வேலை பார்க்குறேன்.”

டொக்.

நீதி : என்ன வாங்குறோம்ன்னு தெரிஞ்சு, பேரம் பேசுங்க.

25 comments:

பிரபாகர் said...

எதிர்பார்த்த முடிவு, ஆனாலும் சுவராஸ்யமா எழுதியிருக்கீங்க...
வாழ்த்துக்கள்...
பிரபாகர்.

VINCY said...

இது போல் நிஜத்தில் எனக்கு சில முறை நடந்துள்ளது. இருந்த போதும் கதை எழுதிய விதம் சூப்பர்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல்.. :))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கலக்கல்.. :))

மகேந்திரன் said...

சூப்பர் சரவணா..
இதே அனுபவம் எனக்கு நிஜமாகவே நேர்ந்திருக்கிறது..

ஆர்வா said...

அட்டகாசம்.. செம கதை. நச்சுன்னு எழுதி இருக்கீங்க

Unknown said...

அசத்தல் பதிவு.....

dondu(#11168674346665545885) said...

இதை நான் ஒரு சோகக் கதை வெர்ஷனாக கேட்டுள்ளேன்.

அம்மா இல்லாத பெண் ஒருத்தி. வயது 35-க்கும் மேல். அவள் வேலையில் இருந்து வரும் சம்பளத்தை குறி வைத்திருக்கும் தந்தை அவளது திருமணத்தில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை.

கடைசியில் பெண்ணே பெயர் குறிப்பிடாது தபால் பெட்டி எண் கொடுத்து மாப்பிள்ளை தேடும் மேட்ரிமோனியல் விளம்பரம் தந்தாள். இரண்டாம்தாரமாக போகக் கூட தயார் என்ற விஷயமும் விளம்பரத்தில் இருந்தது.

அப்பெண்ணுக்கு முதல் கடிதம் வந்தது அவள் தந்தையிடமிருந்து, தான் மனைவியை இழந்தவர் என்று.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SUMAZLA/சுமஜ்லா said...

ரீடரில் தொடர்ந்து படித்து வந்தாலும், இது என்னை மிகவும் கவர்ந்ததால், பதிவு போட வந்தேன். மிக யதார்த்தமான கதை! ஆனாலும் நிஜமாக நடக்குதுங்க, அதுவும் ஐடி ஃபீல்டில் மிக அதிகமாக!

சரவணகுமரன் said...

கண்டுப்பிடிச்சிட்டீங்களா? :-)

வாழ்த்துக்களுக்கு நன்றி பிரபாகர்

சரவணகுமரன் said...

ஓ!

நன்றி VINCY

சரவணகுமரன் said...

நன்றி செந்தில்வேலன்

சரவணகுமரன் said...

உங்களுக்குமா? மகேந்திரன்

சரவணகுமரன் said...

நன்றி கவிதை காதலன்

சரவணகுமரன் said...

நன்றி வசந்த்

சரவணகுமரன் said...

அந்த சோக கதையை நினைவில் வைத்திருந்து பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி டோண்டு சார்

சரவணகுமரன் said...

ஆமாங்க சுமஜ்லா

Jawahar said...

ரொம்ப சிறப்பாகவும் பிராக்டிகலாகவும் இருக்கிறது.

http://kgjawarlal.wordpress.com

Ammu Madhu said...

சரவணா குமரன் பிரட் ஹல்வா குடுத்தாச்சு.சொந்த அலுவல் காரண மாக குறிப்பு கொடுப்பதற்கு சிறிது கால தாமதம் ஆகி விட்டது ....டைம் கிடைக்கும் பொழுது என் ப்ளாக்கில் பாருங்க..

அன்புடன்,
அம்மு.
http://ammus-recipes.blogspot.com

Ammu Madhu said...

நல்லா இருக்கு இந்த பதிவு,.

அன்புடன்,
அம்மு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்கள் பெயர் இங்கு அடிபடுகிறது நண்பரே

சரவணகுமரன் said...

நன்றி Jawarlal

சரவணகுமரன் said...

//சொந்த அலுவல் காரண மாக குறிப்பு கொடுப்பதற்கு சிறிது கால தாமதம் ஆகி விட்டது ....டைம் கிடைக்கும் பொழுது என் ப்ளாக்கில் பாருங்க..
//

பார்த்தேங்க... நல்லா இருந்தது... இது பற்றி சொல்லிக்கொடுத்ததற்கு ரொம்ப நன்றிங்க..

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ்... நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமர

அருமை அருமை - நகைச்சுவை - நச்சென்ற முடிவு -சூப்பர்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா