Thursday, July 23, 2009

ஜெயா மேக்ஸ் - பலவீனம் பலமாக...

தூர்தர்ஷன் காலத்தில் டிவி மேல எவ்ளோ கிரேஸ் இருந்தது? வெள்ளிக்கிழமை எங்கிருந்தாலும் ஒளியும் ஒலியும்’க்காக அந்நேரம் டிவி முன்னால் இருப்போம். அதிலும் ரஜினி, கமல் பாட்டு போடும்போது, சவுண்ட் கூட்டி வைத்து, சண்டையாகி கலாட்டாவில் முடியும். அதுபோல், ஞாயிறு படம். எந்த காலத்து படம் போட்டாலும் பார்ப்போம். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் பார்த்தது அதில்தான். தமிழ் என்றில்லை, சித்ரகார், சித்ரமாலா, ரங்கோலி என்று எதையும் விட்டுவைக்க மாட்டோம்.

இன்று கால ஓட்டத்தில் பாடல்கள் மட்டுமே போடும் தமிழ் சானல்கள் நாலு இருந்தாலும் (உள்ளூர் கேபிள் சானல்கள் வேறு!) அன்று இருந்த திருப்தி இன்று இருப்பதில்லை. ஒரு சானல் வைத்து விட்டு, இன்னொன்றில் என்ன போடுகிறான், பார்ப்போம் என்று மாத்தி, பிறகு அது பிடிக்காமல் மற்றொன்று மாற்றி, முடிவில் ரிமோட் தேய்வது தான் ரிசல்ட். ஆனாலும், பெரும்பாலான சமயங்களில் நான் போய் கடைசியாக நிறுத்துவது ஜெயா மேக்ஸில் தான்.

இதன் சிறப்பம்சங்கள்,

1) பனியன் போட்ட சனியன்கள் யாரையும் நிறுத்தி மொக்கை போடாமல், பாட்டை மட்டும் போடுவது. (அது எதுக்கு சம்பளம் கொடுக்கணும்’ன்னு நினைச்சிருக்கலாம்.)

2) விளம்பரம் அதிகம் போடாதது. அதுவும் இப்பொழுதுதான் போடுகிறார்கள். (நாங்களா போட மாட்டோம்ன்னு சொல்றோம். யாரும் தர மாட்டேங்கிறாங்களே’ன்னு அவுங்க நினைக்கலாம்.)

3) பாட்டை தேர்வு செய்து போடுவது, கண்டிப்பாக ஒரு நல்ல ரசனைக்காரராகத் தான் இருக்க வேண்டும். (வாழ்க அந்த புண்ணிய ஆத்மா! வளர்க அவர்தம் சேவை!)

4) பொன் குஞ்சு என்பதற்காக தீ, மாசிலாமணி, உளியின் ஓசை என்று போட்டு தாக்காமல் இருப்பது. (இருந்தாதானே போடுவது? அதுக்காக தலைவி பாட்டு போட்டு டேமேஜ் ஆகிற கூடாது)
குறிப்பு - மாசிலாமணியிலும் சில நல்ல பாடல்கள் இருக்கிறது. பேசிக்கலி நான் இமானுக்கும் ரசிகன், ‘மொபைலா’விலிருந்து.

5) காமெடி போட்டு கடுப்பை கிளப்பாமல், ஒன்லி சாங்ஸ் என்று இருப்பது (காமெடி சானல்கள் இருந்தாலும், அது எதுக்கு நைட்டானா, சன் மியூசிக்லயும், இசையருவிலயும் காமெடி போடுறாங்க?)

6) தொடர்ந்து ஒரே கலக்‌ஷனை போடாமல், தகுந்த இடைவெளியில் பாடல் தொகுப்பை மாற்றுவது. (சலிக்காமல் தொடர்ச்சியாக பாடல் கேட்கும்படி ஒரு கலக்‌ஷன் உருவாக்குவது ரொம்ப கஷ்டம். வேண்டுமானால், உங்கள் மீடியா ப்ளேயரில், வின்ஆம்ப்பில், ஐ-பாடில் முயன்று பாருங்களேன்.)

இந்த வாரம் அப்படி ஒரு கலக்‌ஷனை மாற்றி இருக்கிறார்கள். புத்துணர்ச்சியோடு இருக்கிறது.

உதாரணத்திற்கு, நேற்று தொடர்ச்சியாக நான் பார்த்த பாடல்கள்...

முள்ளும் மலரும் - செந்தாழம் பூவில் (இது அடிக்கடி பார்க்கிறது தான். லூஸ்ல விடுங்க)
ரோசாப்பூ ரவிக்கைக்காரி - என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் (இந்த பாட்டை இப்பத்தான் முதன்முதலில் டிவியில் பார்க்கிறேன்.)
கேளடி கண்மணி - கற்பூர பொம்மையொன்று (கடைசியா, எப்ப பார்த்தேன்?)

பழைய பாடல் என்றில்லை... புதுப்பட பாடல்களிலும் நல்ல பாடல்களாக போடுகிறார்கள். அட்லிஸ்ட் எனக்கு பிடித்த பாடல்களை. இடைப்பட்ட பாடல்கள் - இன்னும் விசேஷம்.

பாட்டு பாடவா படத்தில் வரும் ”வழி விடு... வழி விடு... வழி விடு... என் தேவி வருகிறாள்” என்ற பாட்டை நான் பள்ளியில் படிக்கும்போது, சன் மியூசிக் முதல் எடிஷனில் பார்த்தது. அதன் பிறகு இப்பொழுதுதான் பார்க்கிறேன். இளையராஜாவும் எஸ்.பி.பி.யும் இணைந்து பாடிய பாடல். படத்தில் எஸ்.பி.பி. அவருக்காகவும், இளையராஜா ரகுமானுக்காகவும் பாடியது. இரு இமயங்களின் நுணுக்கங்களை நெருக்கத்தில் இணைத்து கேட்கலாம்.

ராஜாவின் பார்வையிலே: விஜய் - அஜித் இணைந்து நடித்த இந்த படத்தில் வரும் “ஒரு சுடர், இரு சுடர், ஒளி சுடர், மணி சுடர், முத்து சுடர் ஆடுதடி” பாடலின் ஒளி கிட்டத்தட்ட நினைவில் இருந்து மறைந்துவிட்டது. ஒலி அவ்வப்போது கேட்டு கொண்டுத்தான் இருக்கிறேன். இந்த பாடலையும் நேற்று பார்த்தேன். வீரா “மலை கோயில் வாசலில்” சாயலில் வரும் இந்த பாடல், ஒரு உற்சாகத்தை கொடுக்கும் டூயட். சும்மா, நீங்க கேட்டாலே தலையை ஆட்டுவீங்க. அந்த கால விஜய்யை கேட்கவா வேண்டும்? பாடலின் நடுவே சூப்பராக தலையை ஆட்டி ஆடுவார்.

மெலடியில் மட்டுமா கலக்குகிறார்கள்? நேற்று முன்தினம் நான் பார்த்த இரு அதிரடி பாடல்கள்.

காதல் பரிசு - ஏய்! உன்னைத்தானே

கமலும் ராதாவும் இன்னொரு கேங்கை எதிர்த்து போட்டி ஆட்டம் போடும் தூள் பாடல். இளையராஜா மேற்கத்திய பாணியில் இளமை துள்ளலுடன் போட்ட மெட்டு. பாடலில் நடுவே, கமல் பறந்து, குழுவினரின் மேலமர்ந்து, எதிராளியை நோக்கி கை நீட்டுவது அமர்க்களம். இந்த பாடலை தொடர்ந்து வந்தது,

அடுத்த வாரிசு - ஆசை நூறு வகை

ரஜினி யூத்தாக இருந்து கெட்ட ஆட்டம் போட்ட பாடல். பல மூவ்மெண்ட்கள் எக்ஸசைஸ் போல இருக்கும். அதில் இருக்கும் குழந்தைத்தனத்திற்காகவே ரசிக்கலாம். என்னா வேகம்? என்னா துள்ளல்? ரஜினியின் ஸ்டைல் கலந்த ஆட்டத்தையும் இளையராஜாவின் ஆட்டம் போட வைக்கும் இசையையும் ஒரு சேர இதில்தான் காண முடியும். டொண்ட் மிஸ் இட்.

இது எல்லாமுமே ஒவ்வொரு வகையில் எனக்கு பிடித்த பாடல்கள். இப்படி எல்லாவற்றையும் தொடர்ந்து காண வைத்து என்னை குஷிப்படுத்திய, குஷிப்படுத்திக்கொண்டிருக்கும் ஜெயா மேக்ஸிற்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

இதற்கெல்லாம் மூலகாரணமாக திகழ்ந்துக்கொண்டிருக்கும் புரட்சித்தலைவி வாழ்க!

10 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ரஜினி யூத்தாக இருந்து கெட்ட ஆட்டம் போட்ட பாடல்//

சின்ன பசங்க அப்படியே திருப்பி ஆட த்குந்த வேகமான எளிமையான ஆட்டப் பாடல்

சரவணகுமரன் said...

ஆமாங்க சுரேஷ்...

சரவணகுமரன் said...

அம்மாவுக்கு ஆதரவு சுத்தமா இல்லங்கறது உண்மைதான் போல!

Ariv said...

வேலை விட்டு 9 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தால் ஒரு சேனல் ல கூட பாட்டு போடா மாட்றானுங்க... காமெடி காமெடி நு போட்ட காமெடி ஏ போடுறானுங்க.. உசிர எடுக்ரானுங்க பாஸ்... அதான் ஆளுக்கு ஒரு காமெடி சேனல் ஓபன் பண்ணிட்டு இதுல வேற போடுறானுங்க.. அத நிறுத்த சொல்லி யாராவது ரெகமெந்ட் பண்ணுங்க ப்ளீஸ்..!!! உங்களுக்கு புண்ணியமா போகும்.... அதுவும் இப்போவெல்லாம் இளையராஜா பாட்டு போடுவதே கிடையாது.... எங்கள் ரூமில் டிஷ் டிவி வைத்துள்ளோம்.. அதில் இப்போது ஜெயா மாக்ஸ் வருவதில்லை.. அதை பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லவும்...!!!

சரவணகுமரன் said...

Ariv,

ரொம்ப நொந்து போயி இருக்கீங்க போல?

//எங்கள் ரூமில் டிஷ் டிவி வைத்துள்ளோம்.. அதில் இப்போது ஜெயா மாக்ஸ் வருவதில்லை.. அதை பெறுவதற்கான வழிமுறைகளை சொல்லவும்...!!!//

உங்க ஏரியா கேபிள் ஆப்பரேட்டரை கேட்டு பாருங்க... சில இடங்களில் அவர்களே செட்டாப் பாக்ஸ் கொடுத்து அனைத்து சேனல்களும் கொடுக்கிறார்கள்.

Ariv said...

Mikka Nandri...!!

Indian said...

//உங்க ஏரியா கேபிள் ஆப்பரேட்டரை கேட்டு பாருங்க... சில இடங்களில் அவர்களே செட்டாப் பாக்ஸ் கொடுத்து அனைத்து சேனல்களும் கொடுக்கிறார்கள்//

Check with your Hathway cable operator (in Bangalore). Jaya max is available but not Zee Tamil (missed yaarukku yaaro, magnum opus of Sam Anderson ) :(

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி Indian...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வழி விடு... வழி விடு... வழி விடு... என் தேவி வருகிறாள் எனக்கு பிடித்த பாடல்.

பாட்டு பாடவா வில் எல்லாப் பாட்டும் சூப்பர்

சரவணகுமரன் said...

ஓ! அப்படியா ரமேஷ்... நல்லா இருக்கும் பாடல்கள்...