Friday, July 3, 2009

நாட்டு சரக்கு - உயிர் காத்த வயாகரா

கணவன் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருக்கிறான். மனைவி சமையல் செய்து கொண்டிருக்கிறாள். அவர்களது 6 மாத குழந்தை கட்டிலில் படுத்தவாறே, தந்தையை பார்த்து கொண்டிருக்கிறது.

அடுப்பாங்கரையில் இருக்கும் மனைவியிடம், கணவன் பெருமையுடன்,

“ஏண்டி, பிள்ளை என்னையே பார்த்துக்கிட்டு இருக்கான். புள்ளைக்கு என்ன யோசனையோ?”

சலிப்புடன் “என்ன யோசிப்பான்? யாருடா இது? காலையிலேயே கிளம்பி போறாரு? கையில பெரிய சாப்பாடு கூடை வேற மறக்காம எடுத்துட்டு போறாரு. நைட் திரும்ப வாராரு. சாப்பிட்டுட்டு தூங்க போயிடுறாரு. மறுபடியும் காலையிலேயே எந்திரிச்சு போறாரு. எதுக்கு இவரு இப்படி இருக்காரு?’ன்னு ஆச்சரியத்தோடு யோசிச்சிட்டு இருப்பான்.”

---

அருந்ததீ பார்த்துட்டு வந்த அனுஷ்காவின் தீவிர ரசிகனான நண்பனிடம்,

“படம் எப்படி?”

“ம்ம்ம்... நல்லாயிருந்துச்சு”

”பயந்திட்டியா?”

“ஆமாம். ’நல்லா’ நடிச்சிட்டு இருந்த அனுஷ்கா, இந்த படத்தோட வெற்றியால, இனி இப்படி தான் நடிப்பாங்களோன்னு பயமாயிருந்துச்சு.”

----

ராஜஸ்தானில் ஒரு வேலை இருக்கிறது. ஷிப்ட் 5 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரம் வரை. கிட்டத்தட்ட 100 பேர் இந்த தொழிலில் அங்கு ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். தினசரி சம்பளம். ஒருநாளுக்கு 500 ரூபாயிலிருந்து 2000 வரை சம்பாதிக்கிறார்கள். உடனே, என்ன? எது? என்று கிளம்பி விடாதீர்கள். சராசரி மக்களால் முடியாதது அது.

அஜ்மீர் தர்காவில் பிச்சை எடுப்பது தான் அந்த தொழில். ஆனால், இந்த சம்பாத்தியம் எல்லாம் வருடத்திற்கு 10 நடக்கும் உருஸ் விழாவில் மட்டும் தான். 10 கோடி வரை டர்னொவர் வருமாம். தினமலரில் வந்த இந்த செய்தியில், இவ்வாறு பிச்சை எடுத்து சம்பாதிப்பவர்களை, ‘பிச்சைக்கார தொழிலதிபர்கள்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். என்ன முரண்பட்ட வார்த்தைகள்?

----

பொல்லாதவன் வந்த சமயம். டீக்கடையில் இருவர். (ஜூ.வி. பாணி!)

“இயக்குனர் மேல கேஸ் போட போறாங்களாம்”

“ஏன்?”

“பைக் வாங்கினதுக்கப்புறம், ஹீரோயின் லவ் பண்றதா காமிச்சிருக்கதால, பெண்கள இழிவுப்படுத்தியிருக்கறதா சொல்லி கேஸ் போட போறாங்களாம்.”

“அடப்பாவமே!”

“விடு... எப்படி தனுஷ லவ் பண்றதா காட்டலாம்?ன்னு சொல்லி கேஸ் போடலயே?”

----

அமெரிக்காவுல இருக்குற ஒரு யூனிவர்சிட்டில ஒரு ஆராய்ச்சி பண்ணியிருக்காங்க. ஆணி அடிப்பதில் யார் சிறந்தவர்கள்? ஆண்களா? பெண்களா? வேலையத்தவனுங்க. என்ன கண்டுப்பிடிச்சிருக்காங்கன்னா, பெண்கள் தான் நல்லா, கரெக்டா ஆணி அடிப்பாங்களாம். ஆனா, வெளிச்சத்துல தான் பெண்களோட துல்லியம் எல்லாமுமாம். இருட்டுனா, ஆண்கள் தானாம்.

டேய், என்னடா சொல்ல வாரீங்க?

---

லண்டலில் போன வருடம் பிறந்த ஆலிவருக்கு, பிறக்கும் போதே இதயத்தில் ஒரு குறைபாடு. பிறந்து 16 நாட்களில், ஒரு ஆபரேஷன் செய்து அதை சரி செய்திருக்கிறார்கள் லண்டன் டாக்டர்கள். மூன்றாம் மாதத்தில், ஆலிவர் ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட, ரயில்வேயில் வேலை பார்க்கும் அவன் தந்தையிடம், ”உங்க பிள்ளை பிழைக்குறது கஷ்டம். இன்னும் ரெண்டு மாசம் தான்.” என்றிருக்கிறார்கள். என்னன்னமோ சொல்லியிருக்கிறார்கள். ரத்த நாளத்தின் சுருக்கத்தால், ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. அதனால், ரத்த அழுத்தம் என்று.

பிறகு, திரவ நிலையில் இருக்கும் வயாகரா கொடுத்து பாருங்க. ரத்தம் ஓட்டம் இம்ப்ருவ் ஆகும்ன்னு சொல்லி இருக்காங்க. அன்னையிலிருந்து, தினமும் ஆறு வேலை வயாகரா எடுத்துக்கிறான். இதோ, இன்னும் சில நாட்களில் தனது முதல் பிறந்த நாளை கொண்டாடப் போகிறான் ஆலிவர். ”வயாகரா, நயாகரா” என்று மற்றவர்கள் பாடிக்கொண்டிருக்க, “வயாகராதான் ஆலிவரின் உயிர்காப்பான்” என்கிறார் ஆலிவரின் தந்தை.

6 comments:

வால்பையன் said...

//பெண்கள் தான் நல்லா, கரெக்டா ஆணி அடிப்பாங்களாம். ஆனா, வெளிச்சத்துல தான் பெண்களோட துல்லியம் எல்லாமுமாம். இருட்டுனா, ஆண்கள் தானாம்.//


என்னா வில்லத்தனம்!

மகேந்திரன்.. said...

சுவாரஸ்யமான துணுக்குகள் சரவணா..
நம் சிறு வயதில், முத்தாரம், கல்கண்டு என்று சில புத்தகங்கள் துணுக்குகளை
மட்டுமே பதிப்பித்து வந்தன. இப்போதும் வருகின்றனவா என்று தெரியவில்லை.
அவற்றை மீண்டும் வாசித்தது போன்றதொரு மகிழ்ச்சி.. நன்றி..

சரவணகுமரன் said...

வாங்க வால்பையன்

சரவணகுமரன் said...

நன்றி மகேந்திரன்

Anonymous said...

//“வயாகராதான் ஆலிவரின் உயிர்காப்பான்” என்கிறார் ஆலிவரின் தந்தை.

Viagara was an accidental by-product from a heart medicine trials - read it somewhere..

Srini

சரவணகுமரன் said...

தகவலுக்கு நன்றி, Srini