Wednesday, July 22, 2009

உங்க சிஇஓ’வுக்கும் இவ்வளவு நம்பிக்கையா?

ஒரு விமான நிறுவனத்திற்கு, சாப்ட்வேர் செய்ய வேண்டிய தேவை வந்தது. எந்த கம்பெனியிடம் வேலையை கொடுப்பது? என்று தீர்மானிக்க ஒரு விநோத திட்டம் தீட்டினார்கள். அச்சமயம், அமெரிக்காவிற்கு செல்ல ஒரே நேரத்தில் இருபது பெரிய சாப்ட்வேர் கம்பெனிகளின் தலைமை அதிகாரிகள் டிக்கெட் ரிசர்வ் செய்திருந்தார்கள். இது தான் சரியான நேரம் என்று விமான நிறுவனம் ரகசியமாக திட்டத்திற்கு செயல் வடிவம் கொடுத்தார்கள். ஒன்றுமில்லை, அவர்களின் திறமையை, நம்பகத்தன்மையை, நம்பிக்கையை சோதிக்க போகிறார்கள்.

இருபது சிஇஓ’க்களும், அமெரிக்காவில் நடக்கும் கூட்டமைப்பு மீட்டிங்கிற்கு செல்லும் நாள் வந்தது. ஒவ்வொருவரும் ப்ளைட்டில் ஏறும் போது, அவர்களிடம் தனியாக விமான நிறுவனத்தினர் ஒரு விஷயம் சொல்கிறார்கள்.

“நீங்கள் எங்கள் விமானத்தில் பயணம் செய்வதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், உங்கள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ஆளில்லா தானியங்கி’ மென்பொருளால் இந்த விமானம் முதன்முறையாக இயக்கப்படுகிறது. அதில் நீங்கள் பயணம் செய்வது இன்னும் விசேஷமாகிறது.”

என்னது, பைலட் இல்லாம வெறும் சாப்ட்வேர் ப்ளைட் ஓட்டப்போகுதா? பெரிய நிறுவனங்கள் என்பதால், எந்த சாப்ட்வேர் யாருக்கு செய்து கொடுத்தோம் என்று தலைமை நிர்வாகிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதனால், அதை அப்படியே நம்பினார்கள்.

இப்ப, நிறுவன தலைமை அதிகாரிகளுக்கு கலக்கமாகி விட்டது. பயம். நடுக்கம். என்ன பண்றது?

எஸ்கேப் ஆவதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொன்னார்கள்.

”ஒரு அவசர வேலை வந்திருக்கு. என் டிக்கெட்டை கேன்சல் பண்ணிருங்க.”

”ஓ! மை காட். தாத்தா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டாரா?” (சின்ன வயசுல இருந்து இக்கட்டான நேரத்துல தாத்தா தான் ஹெல்ப் பண்றாரு)

“அப்படியா? மீட்டீங் கேன்சலா? ஒகே, திரும்ப எப்பன்னு சொல்லுங்க... பை”

“20 கோடி லாஸா? உடனே நான் வாரேன்”

“ஐயோ, வயத்தை கலக்குதே!”

இப்படி பத்தொன்பது பேரும் எஸ்ஸாகிவிட்டார்கள்.

ஆனால், ஒருத்தர் மட்டும் ஜம்மென்று சீட்டில் உட்கார்ந்தார். அவர் முகத்தில் எந்த பதட்டமும் இல்லை. பைலட் இல்லாத முதல் விமானம் என்று சொல்லப்படும் அந்த விமானத்தில் பயணம் செய்ய எந்த தயக்கமும் காட்டவில்லை.

விமான சோதனை டீம் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இவர்தான். இவர் நிறுவனம் தான். தங்கள் சாப்ட்வேர் தேவையை இவரிடம் தான் கொடுக்க வேண்டும். எதற்கும் பேசி பார்த்து விடலாம் என்று நினைத்து, தங்கள் ஆள் ஒருவரை பயணி போல் வேடமிட்டு, அவர் பக்கத்தில் அமர வைத்தார்கள்.

“என்ன சார்? இந்த ப்ளைட்ல பைலட்டே இல்லையாமே?” பயணி வேடத்தில் ஒற்றன் தூண்டில் போட்டான்.

நம்மாளு “ஆமாம். அப்படித்தான் சொன்னாங்க”

“உங்களுக்கு ஒண்ணும் பயமில்லையா?”

“எனக்கெதுக்கு பயம்? அந்த சாப்ட்வேர் எங்க நிறுவனத்தால் பண்ணியது, தெரியுமா?”

“ஓ! அப்படியா? உங்கள் நிறுவனம் மேல், உங்கள் ஊழியர்கள் மேல் அவ்வளவு நம்பிக்கையா?”

”நம்பிக்கைதான். கொஞ்சம் காத கிட்ட கொண்டு வாங்க. எங்க கம்பெனி சாப்ட்வேர்ங்கிறதால, இது முதல்ல ஸ்டார்ட்டே ஆகாது. அப்புறம் எங்க பறக்குறது?”

12 comments:

Anonymous said...

இந்த மாதிரி ஒரு நல்ல கதை எழுதும் நீ எவ்வளவு அறிவாளியாக இருக்க வேண்டும்.

இய‌ற்கை said...

ha..ha..ha...:-)))

இராகவன் நைஜிரியா said...

ஆஹா... சி.இ.ஓ அப்படின்னா இப்படித்தான் இருக்கணும்..

வால்பையன் said...

செம காமெடி தலைவா!?

(நீங்க அந்த கம்பெனி தானா)

சரவணகுமரன் said...

ஷீர்டி சாய்தாசன்,

திட்டுறீங்களா பாராட்டுறீங்களான்னு தெரியலை!

கதை மின்னஞ்சலில் வந்தது. சிறு மாற்றங்களுடன் தமிழ்படுத்தியிருக்கிறேன்.

சரவணகுமரன் said...

இயற்கை,

வருகைக்கு நன்றி...

சரவணகுமரன் said...

ஆமாங்க, இராகவன்

சரவணகுமரன் said...

வால்பையன்,

அதெல்லாம் சொல்ல முடியாது. தொழில் ரகசியம். :-)

கிரி said...

:-))))))

சரவணகுமரன் said...

வாங்க கிரி

Muruganantham Durairaj said...

:-) :-)

சரவணகுமரன் said...

வாங்க முருகானந்தம் துரைராஜ்