Thursday, August 27, 2009

சன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'இதயம், காதல் தேசம், உள்ளம் கேட்குமே - இந்த படப் பாடல்களை கேட்கும்போது, பலருக்கு அவர்களின் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வரும். கல்லூரி பற்றிய படங்கள் என்பதற்காக சொல்லவில்லை. இம்மாதிரி படங்கள் வரும்போது, அவர்கள் கல்லூரியில் படித்து கொண்டிருந்தால், இப்படங்கள் அவர்களுக்கு ரொம்ப விசேஷமாக இருக்கும். எனக்கு ‘ஏப்ரல் மாதத்தில்’ என்றொரு மொக்கை படம். :-( (நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, இந்த படம்தான் வந்தது.)

இந்த வருடம், கல்லூரியின் கடைசி வருடத்தை கடந்து கொண்டிருப்பவர்களுக்கு, அப்படி இருக்க போவது - நினைத்தாலே இனிக்கும்.... ஸாரி, சன் டிவியின் நினைத்தாலே இனிக்கும். ப்ரித்விராஜ், ப்ரியாமணி (மணிரத்னத்தின் அசோகவன ஜோடிகள்!), பி. வாசு வாரிசு, மிர்ச்சி சுசியின் கார்த்திக் ஆகியோர் படத்தின் நட்சத்திரங்கள்.இந்த படத்திற்கு Light Illusion என்கிற நிறுவனம் செய்திருக்கும் நிற, ஒளி மாற்றங்களை இங்கே ஷோகேஸில் வைத்திருக்கிறார்கள்.

---

விஜய் ஆண்டனி இசையில் மொத்தம் ஏழு பாடல்கள். எனக்கு மூன்று பிடித்திருந்தது.

அழகாய் பூக்குதே

இது லவ் பீலிங் பாட்டு. பெரிய தலைகள் எதுவும் பாடல்கள் எழுதாதே, இப்ப புத்துணர்வாக இருக்கிறது. இந்த பாடலை எழுதியிருப்பவர் கலைக்குமார்.

கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே
கவிதைவின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே!


ஸிந்ததைசர், ட்ரம்ஸ்களிடம் சிக்கி தவித்து கொண்டிக்கும் செவிகளுக்கு, இந்த பாடலின் இடையே வரும் புல்லாங்குழல் ஒலி - இதம். எளிமையாக, அழகாக இருக்கிறது. ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, இது என மெலடியிலும் கலக்க ஆரம்பித்துவிட்டார் விஜய்.

செக்ஸி லேடி

படத்தின் ஆர்ப்பாட்டமான பாடல். மேளத்தை துணைக்கு அழைத்துக்கொண்டு, ஒரு வெஸ்டர்ன் சாங். இளமை துள்ளல் இசையில் மட்டுமில்லாமல், ப்ரியனின் பாடல் வரிகளிலும்.

தூக்கமென்பதை தூக்கில் போட்டு நாம், கொல்ல வேண்டுமே இளவயதில்
சேவல் கூவிடும் வேளை வரையிலே, ஆட்டம் தொடருமே பலவகையில்

நட்சத்திரங்களை க்ளாஸில் ஊற்றிதான் பருக தூண்டிதே, தினம் இரவில்
இருட்டை கண்டதும் இன்பமாதோர் பேயும் பிடிக்குதே, நம் மனதில்


துள்ளல் இசையை கருவிகளில் மட்டுமில்லாமல், நிறைய இடங்களில் குரலிலேயே வர வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏற்கனவே, இந்த பாடலை டிவியில் போட்டு விட்டார்கள். கவனத்தை ஈர்த்தது, ஒளிப்பதிவாளர்தான். இந்த பாட்டுக்கு மட்டும் ரத்னவேலு என்கிறார்கள். மற்றபடி படத்திற்கு பாலசுப்பிரமணியம்.பாடலைக் காண மேலுள்ள படத்தை க்ளிக்கவும்.

பியா பியா

விஜய் ஆண்டனி பாடியிருக்கிற பாடல். பாடல் ஆரம்பக்கும் போதே, இது விஜய் ஆண்டனி பாடல் என்று சொல்லி விடலாம். கானா டைப், உற்சாகத்தை வரவழைக்கும் பாடல்.

உன் மூச்சு வாசனையில் ரோஜாக்கள், டவுன் டவுன் டவுன்...
உன்னுடைய பேச்சினிலே ரிங் டோன்கள், டவுன் டவுன் டவுன்...


அதுக்கு மேல, அண்ணாமலை எழுதுயிருக்கிறத நீங்களே கேளுங்க.

----

விஜய் ஆண்டனி அப்பப்ப, இங்கிலீஷ் ஆல்பங்களில் இருந்து உருவுவார். ‘இது மாணவர் உலகம்’ பாடலை அப்படியே எடுத்துவிட்டாரோ என்று நினைக்கும் வகையில் ஆல்பம் சாங் போல் இருக்கிறது. தமிழ் வரிகள் கூட ஆங்கில உச்சரிப்பில்... ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்’ நட்பின் புகழ் பாடும் பாடல். காலேஜ் பேர்வெலில் பாடுவதற்கான பாடல். ’நாட்கள் நகர்ந்து வருடங்கள் கடக்கும்’ - படத்தின் தீம் சொல்லும் ஒன்றரை நிமிட பிட் சாங். ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ - இந்த வார்த்தையை போட்டு ஒரு கானா பாட்டை ஆரம்பிக்க, எப்படித்தான் தோன்றியதோ?

---

சமீபத்தில் கோவையை கடந்து ரயிலில் வரும்போது, எம்பி3 ப்ளேயரில் எப்எம் ட்ரை பண்ணலாம்’ன்னு வைத்தேன். சூரியனில், இந்த படப்பாடல் தான் வைத்தவுடன் வந்தது. நினைத்துக் கொண்டேன். ஆஹா! ஆரம்பிச்சிட்டாங்கயா...

படம் வரும்வரை சூரியன். வந்தபிறகு சன் மியூசிக்.

சன் டிவி படம் என்பதனால் பயப்பட வேண்டாம். படத்தின் இயக்குனர் குமாரவேல், இயக்குனர் கமலின் அஸிஸ்டெண்ட். அப்ப, அதுக்கு தான் பயப்படணும் என்கிறீர்களா? என்றாலும், இது மலையாள க்ளாஸ்மேட்டின் ரீ-மேக். குரு-சிஷ்யன் இருவரும் ஒரே சமயத்தில் ரீ-மேக்குகிறார்கள்.

இயக்குனரின் தந்தை, கமலை வைத்து பல படங்கள் இயக்கிய ரங்கராஜன். அதில் கல்யாணராமன், மீண்டும் கோகிலா என்று சூப்பர் படங்கள் இருந்தாலும், எனக்கு பிடித்தது கடைசியில் வந்த மகராசன் தான். :-)

---

நினைத்தாலே இனிக்கும் என்று ஒரு புது நிகழ்ச்சியை சன் மியூசிக்கில் போடுகிறார்கள். நல்ல, நல்ல பாடல்களாக போடுகிறார்கள். நேரம் இரவு பதினொரு மணிக்கு. நல்ல பாட்டு போடுற நேரத்தை பாருங்க. நான் இப்பெல்லாம் அதுக்கு முன்னாடியே தூங்க போயிடுறேன். எனக்காக இதை ஒரு மணி நேரம் முன்னால் போட்டால், நல்லா இருக்கும்.

போனில் பாட்டு கேட்கும், லைவ் நிகழ்ச்சி. பதினொரு மணிக்கும், போனில் பேசுவதற்கு உலகில் தமிழ் மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். ஒருவேளை, உலகில் மற்ற பகுதிகளில் வாழும் மக்களுக்காகத்தான் இந்த நிகழ்ச்சியா?

கிட்டத்தட்ட மிட் நைட் நேரத்தில் வரும் ப்ரோகாம் என்பதால், சில விவகாரமான விளம்பரங்களும் இடையில் வருகிறது. பீ கேர் புல்.

.

11 comments:

ஜெட்லி... said...

ரீமேக் என்பதால் படம் நல்ல இருக்கும் என்று
நான் நினைக்கிறேன்....
எப்படியும் முதல் நாள் பார்த்து விடுவேன்
அப்புறம் நம்ம விமர்சனம்.....

மகேந்திரன் said...

எப்போதுமே செய்திகளை சுடச்சுட தருவது..(உஸ்ஸ்...அபா..)
சரவணன்..சரவணன்..சரவணன்....

"சன் டிவி படம் என்பதனால் பயப்பட வேண்டாம்."..
எப்புடிப்பா? எப்புடி? மணிரத்னமே வந்து சன் பிக்சர்ஸ்ல படமெடுத்தாலும்,
நாள்பூரா விளம்பரம் (!!) பண்ணி, பாட்டு போட்டு
சாவுங்கடான்னு இல்ல சங்கூதுவானுங்க..

இரவு பதினொரு மணிக்கு, நிஜமாவே பல நல்ல பாடல்களின் தொகுப்பு.
சூர்யா என்றொரு தொகுப்பாளரின் நல்ல தமிழ்..
அழைப்பது பெரும்பாலும் வெளிநாட்டில் வாழும் தமிழர்கள்..

விவகாரமான விளம்பரமா?
"மல்லி மணம் மயக்காமல் விடுமா?" அதை சொல்றிங்களா?
பின்ன நைட் பதினோரு மணிக்கு கோபுரம் பூசு மஞ்சள்தூள் விளம்பரமா போடுவாங்க??
போங்க பாஸு.. போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க..!!

சரவணகுமரன் said...

ஜெட்லி, பார்த்திட்டு சொல்லுங்க...

நீங்கதான், எங்களோட சோதனை எலிக்குட்டி... :-)

சரவணகுமரன் said...

மகேந்திரன், காலையிலேயே பயங்கர பார்ம்'ல இருக்கீங்க, போல?

//பின்ன நைட் பதினோரு மணிக்கு கோபுரம் பூசு மஞ்சள்தூள் விளம்பரமா போடுவாங்க??//

ஹா ஹா ஹா

//போங்க பாஸு.. போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க..!!//

நீங்களும் விவகாரமாவே பேசுறீங்களே? :-)

ஜெட்லி... said...

//நீங்கதான், எங்களோட சோதனை எலிக்குட்டி... :-)
//
என்னாது இது.... சின்ன புள்ள தனமா இருக்கு....
மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல
படம் எடுத்தவன் தப்பு .

நரேஷ் said...

மகேந்திரன் காலையிலியே கொலை வெறியில இருக்காரு போல...

படத்திற்கு பால சுப்பிரமணியம் மற்றும்தான் ஒளிப்பதிவு...ரத்னவேலு பண்ணுவதாக இருந்தது, ஆனால் கடைசியில் மாறிவிட்டது...

அழகாய் பூக்குதே பாடல்தான் எனக்கும் மிக பிடித்த பாடல்....ஆனால் அந்தப் பாடலும் ஏற்கனவே டாக்ஸி எண் ஏதோ ஒரு படம் வந்ததே அதில் வரும் “கண்ணீரைப் போலே நன்பனில்லை” என்ற பாடலைப் போலே இருப்பதாக எனக்கு ஒரு எண்ணம்...

பியா பியா பாடல் நீங்கள் சொன்ன அதே போன்ற வரிகளுக்காகவும் அதில் வரும் துள்ளலுக்காகவும் மிக பிடிக்கும்....

இது தவிர அந்த பிட் சாங் எனக்கு மிக பிடித்தது, ஒன்றரை நிமிடம் வந்தாலும் உணர்வு மயமாக இருக்கும் அழகான வரிகளுக்காகவே எனக்கு பிடிக்கும் ....

எல்லாப் புகழும் இறைவனுக்கே பாடல் ஆரம்பித்த உடன் எனக்கு நீங்கள் சொன்னதேதான் தோன்றியது எனினும், நல்ல வேளையாக அடுத்தடுத்த வரிகளில் எங்கும் அந்த வரி வரவில்லை...

நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி, நான் எண்ணியது என்னவென்றால், இந்த நிகழ்ச்சி கூட அந்த படத்திற்கு ஒரு விதத்தில் விளம்பரமாக இருக்கும் என்பதுதான்...இன்னொன்று இந்த நிகச்சிக்கு போட்டியாக கலைஞரிலும் அதே வகைப் பாடல்களை போடுகின்றனர் (10 மணியிலிருந்தே!!!)..

//போங்க பாஸு.. போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்க..!!//

அப்படி முறையான இடைவெளியில் பிள்ளைகளை பெறுவதற்கும், ஆரோக்கியமான குடும்பமாக இருப்பதற்முரிய விளம்பரங்களைத்தானே போடுகிறார்கள் :)))))

சரவணகுமரன் said...

ஜெட்லி, இது தான் உங்களோட பஞ்ச் டயலாக்கா? சூப்பரு!

சரவணகுமரன் said...

//மகேந்திரன் காலையிலியே கொலை வெறியில இருக்காரு போல...//

ஆமாங்க நரேஷ்...

//படத்திற்கு பால சுப்பிரமணியம் மற்றும்தான் ஒளிப்பதிவு...ரத்னவேலு பண்ணுவதாக இருந்தது, ஆனால் கடைசியில் மாறிவிட்டது...//

ஓ! அப்படியா?

//நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சி, நான் எண்ணியது என்னவென்றால், இந்த நிகழ்ச்சி கூட அந்த படத்திற்கு ஒரு விதத்தில் விளம்பரமாக இருக்கும் என்பதுதான்...//

அப்படிக்கூட இருக்கும் நரேஷ்...

//அப்படி முறையான இடைவெளியில் பிள்ளைகளை பெறுவதற்கும், ஆரோக்கியமான குடும்பமாக இருப்பதற்முரிய விளம்பரங்களைத்தானே போடுகிறார்கள் :)))))//

நீங்க வேற எடுத்து கொடுக்குறீங்களே? :-))

கார்த்திக் பிரபு said...

Heard the song alaigai pookuthu ...liked it :)

malaya remake enbadhal padam kandippa nalla irukum

சரவணகுமரன் said...

ஆமாம் கார்த்திக் பிரபு... நல்ல பாட்டு...

Gk said...

some songs from first ninathalai inikkum
1.bharathi kannamma
2.Engayum eppothum
3.Yatum ooreia yavarum kelir
4.namma ooru singari
5.what a waiting
6.nizhal kandavan nalum inge
7.ninaithala inikkum
8.anantha thandavamo
9.inimai nirandha ulagam irrukku
10.you are like fountain
11.sayonana vesham kalaindhadu

12.vanilai medai amanthathu

kindly help how to use tamil font