Friday, September 18, 2009

தமிழக அரசியல், சினிமா - கூகிள் மாபெரும் கருத்துக்கணிப்பு

யாரையும் யாருக்கூடவும் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாதுன்னு சொல்லுவாங்க. கூகிள் ஒப்பிட்டு பாருங்க’ன்னு சொல்றாங்க. அதாவது, தேடுதல் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்’ன்னு சொல்லி கூகிள் ட்ரெண்ட்ஸ் பக்கம் வச்சிருக்காங்க. நானும் பொழுதுபோகாம தேடிப்பார்த்ததன் பலன், இந்த பதிவு.

தலைப்ப பார்த்து, டிவில எலக்‌ஷன் ரிசல்ட் பார்க்குற மனநிலைக்கு போகாதீங்க. இது கூகிளை வச்சு, நான் பண்ணின ஆய்வு. ஆராய்ச்சி முடிவுகள் கீழே.

---

ஆப்பிளை ஆப்பிள் கூடத்தான் ஒப்பிடணும். ஆரஞ்ச ஆரஞ்சுக்கூடத்தான் ஒப்பிடணும். அதனால, ஜோடி ஜோடியா போட்டி.

எம்ஜிஆர் Vs சிவாஜி

எம்ஜியாரை தேடுனதுல பாதி அளவுக்கு தான் சிவாஜியை தேடி இருக்காங்க. அதுவும், ரஜினியோட சிவாஜிப்படத்தை தேடுனதுனாலத்தான் இந்த அளவும்.



ரஜினி Vs கமல்

ரஜினி, கமல்’ன்னு பார்த்தா, கமல் முன்னணி. ரஜினிகாந்த், கமல்ஹாசன்’ன்னு பார்த்தா, ரஜினிகாந்த் முன்னணி. அப்பாடி, ரெண்டு பேரும் சமம்’ன்னு சொல்லிக்கலாம்.





விஜய் Vs அஜித்

விஜய் முன்னணியில் இருப்பதற்கு, அவருடைய பொதுவான பெயரும் ஒரு காரணம். இன்னொரு காரணம், மக்கள் இண்டர்நெட்டில் நிறைய நகைச்சுவை தேடுவதும் ஆகும்.



சிம்பு Vs தனுஷ்

தனுஷுக்கு இந்த ஏரியா கொஞ்சம் வீக் தான்.



இளையராஜா Vs ரஹ்மான்

ஒண்ணும் சொல்றதுக்கில்லை.



வடிவேலு Vs விவேக்

இங்க விவேக் முந்திக்கிட்டதுக்கு காரணம், ஊரு உலகத்துல ஏகப்பட்ட விவேக்குகள்.



த்ரிஷா Vs நயன்தாரா

த்ரிஷாவை கண்டிப்பா நிறையப்பேரு தேடியிருப்பாங்க. மொள்ளமாறிங்க.



திமுக Vs அதிமுக

இந்த எலெக்‌ஷனிலும் திமுக தான் முன்னணி. அம்மாக்கிட்ட கேட்டா, ஓட்டுப்பெட்டியில் கோளாறு என்பதுபோல் கூகிளில் கோளாறு என்பார்.



கருணாநிதி Vs ஜெயலலிதா

ஆனா, தனிப்பட்ட முறையில் அம்மா தான் முன்னணி. அதுதானே, அவுங்களுக்கும் வேணும்.



ஸ்டாலின் Vs அழகிரி

இது கொஞ்சம் அபாயகரமான ஒப்பீடு. இப்படி ஒப்பிட்டுத்தான், தமிழ்நாட்டுல பெரிய சமூக மாற்றமே வந்துச்சு. பயமாத்தான் இருக்குது. இருந்தாலும்...



சாரு Vs ஜெயமோகன்

இது ஒரு ஆச்சரியமான முடிவு மாதிரி தெரியும். ஆனா சாரு சர்மா, சாரு சேகல் என்று வேறுபல சாருக்கள் இருக்கிறார்கள்.



மணிரத்னம் Vs ஷங்கர்

இந்த கன்னாபின்னா முன்னணிக்கும் காரணம், பொதுப்பெயர்.



---

இந்த முடிவை வச்சு, என்ன சொல்றது? அதிகம் தேடப்பட்டு முன்னணியில் வந்தவர், அதிகம் பிரபலமானவர் என்று சொல்வதா? செல்வாக்கானவர் என்பதா? விசிறிகள் அதிகம் உடையவர் என்பதா? அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகம் உண்டாக்கியவர் என்பதா? தெரியவில்லை.

எப்படியோ? உபயோகமான அறிவியல் முன்னேற்றத்தை, வெட்டியாக பயன்படுத்துவோர் ஏராளம் என்று சொல்லலாம். என்னைப்போல.

நீங்களும் வெட்டி ஆராய்ச்சி செய்ய, இவரை அணுகவும்.

.

13 comments:

பித்தனின் வாக்கு said...

அம்மா என்னைக்கும் டாப்புனு ஒரு தரம் மறுபடியும் சொல்லீடுங்க, உங்களுக்கு மந்திரி பதவி கிடைத்தாலும் கிடைக்கும், ஸோ சொன்னமாதிரி, அம்மாக்கு நிகர் அம்மாதான், அதுபோல அம்மாக்கு எதிரியும் அம்மாதான். எப்ப உணருவாங்கதான் தெரியலை.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

//இந்த எலெக்‌ஷனிலும் திமுக தான் முன்னணி. அம்மாக்கிட்ட கேட்டா, ஓட்டுப்பெட்டியில் கோளாறு என்பதுபோல் கூகிளில் கோளாறு என்பார்//
சூப்பெர்

பாசகி said...

ஜி மத்த ஓப்பீடெல்லாம் இப்ப வேணாம். ரஜினி Vs கமல்-க்கு வருவோம், கமல் (நடிகர்)அதிகமா தேடப்படல, கமல்நாத்(மத்திய அமைச்சர்) தான் தேடபட்டிருக்கார். Graph-க்கு பக்கத்தில இருக்க News results-அ பாருங்க.

So, ரஜினிகாந்த் Vs கமல்ஹாசன்-தான் சரி. இப்ப News resutls-யும் பாருங்க, எல்லாமே தலைவரை பத்தி இருக்கும்.

பாஸ்-தான் எப்பவும் மாஸ் :)

[வகுப்பறைல போட்டுட்டிருந்த சண்டை இப்போ google வரைக்கும் வந்திருச்சு :))))]

நரேஷ் said...

//த்ரிஷாவை கண்டிப்பா நிறையப்பேரு தேடியிருப்பாங்க. மொள்ளமாறிங்க.//

ஹா ஹா ஹா

சரி எத்தனை பேரை இது மாதிரி வேலை வெட்டி இல்ல்லாம மொக்கையா தொழாவுறாங்கன்னு ஏதாவது ஸ்டாட்டிஸ்டிக்ஸ் இருக்கா???

மதிபாலா said...

இந்த முடிவை வச்சு, என்ன சொல்றது? //

rompave office la ani kamminnu..

:)))))

good effort and nice

இராகவன் நைஜிரியா said...

நான் ஓட்டுப் போட்டுட்டேங்க...

என்னால முடிஞ்சது அதுதான்...

வலைப்பூக்களை படிப்பதற்கே நேரம் பத்தலையே, இதையெல்லாம் எப்ப படிச்சு, எப்படி இடுகையாப் போறீங்க.

ஐயா நீங்க கிரேட்.

சரவணகுமரன் said...

வாங்க பித்தன்

சரவணகுமரன் said...

வாங்க கிருஷ்ணா

சரவணகுமரன் said...

ஆமாமாம் பாசகி

சரவணகுமரன் said...

நரேஷ், இன்னும் கொஞ்சம் நாள்ல அதையும் சொல்வாங்க கூகிள்

சரவணகுமரன் said...

ஹி ஹி

நன்றி மதிபாலா

சரவணகுமரன் said...

இராகவன்,

ஹி ஹி... எல்லாம் ப்ளான் பண்ணனும்...

சரவணகுமரன் said...

வாங்க ராதாகிருஷ்ணன் சார்