Tuesday, October 27, 2009

முக்கிய அறிவிப்பு: டிவி பாருங்க!

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியரில் இந்த வாரம் முதல் மழைப்பாடல்கள் சுற்று ஆரம்பித்திருக்கிறது.



நேற்று துவங்கிய இதில் வழக்கம்போல பெரியவர்களுக்கே சவால் விடும்படி குழந்தைகள் கலக்கினார்கள். இந்த அறிவிப்பை நான் கொடுக்க முக்கிய காரணம் இன்று ஒளிபரப்பாகும் பகுதியில் (9PM - 10PM) ஒரு குழந்தை "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" பாடப்போகிறார். (பெயர் ஸ்ரீநிஷா என்று நினைக்கிறேன்).

எப்போதுமே பிரமாதப்படுத்தும் அவரின் பாடலைக்கேட்க ஆவலாயிருக்கிறேன். நாளை அல்லது வியாழக்கிழமை பகுதியில் ஓவியா என்றொரு குழந்தை "மழையே மழையே இளமை முழுதும்" பாடப்போகிறார். இதெல்லாம் அவர்களின் முன்னோட்டத்தில் காண்பித்த சிறு பகுதிகளின் வாயிலாக தெரிந்தது.

எனக்கு தெரிந்து இதுநாள் வரை நான் பார்த்த தொலைகாட்சி இசை நிகழ்ச்சிகளிலோ, பாடும் போட்டிகளிலோ (1995ல் சன் டீவியில் ஏ.வீ.ரமணன் நடத்திய சப்தஸ்வரங்கள் துவங்கி), எந்த போட்டியாளருமே தொடத்துணியாத பாடல்கள் இவை இரண்டும். சிறுவர்களின் உலகமே அலாதியானது தானே? இருவருக்கும் பாடல் தேர்வு செய்து கொடுத்தவர்களுக்கு நன்றி.

இதில் இரண்டாவது பாடல் பிரதாப் போத்தன், சரிதா நடித்த "அம்மா" படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் எஸ்.பி.பி மற்றும் ஜானகி பாடியது. "கூந்தல் மலரில் தேனை எடுக்க... காத்துக்கிடந்தேன் கால்கள் கடுக்க..." என்ற வரிகளுக்காகவே எனக்கு பிடித்தமானது இந்த பாடல்.

நிகழ்ச்சியை பார்க்க காத்திருக்கிறேன். நீங்களும் பாருங்கள்...

-மகேந்திரன்.

.

8 பேரு கருத்து சொல்லியிருக்காங்க...:

Anonymous said...

எல்லோருமே அருமையாக பாடுகிறார்கள். எனக்கு அல்கா, ரோஷன் பாடுவது கூடுதலாக பிடிக்கும்.

said...

ஸ்ரீநிஷா செம க்யூட்.....நானும் இன்னிக்கு கண்டிப்பா பாக்கணும்

said...

நானும் பார்க்கிறனான் அசத்துறாங்க

said...

Who is Mahendran?

said...

பாருங்க கமல்... பாருங்க...

said...

வாங்க தியா

said...

கணேஷ்,

மகேந்திரன் எனது நண்பர். விரிவான அறிமுகத்திற்கு இங்கே செல்லவும்.

http://www.saravanakumaran.com/2009/06/blog-post_12.html

said...

தவறவிட்ட நண்பர்கள், இங்கே சென்று காணலாம்.

http://tamil.techsatish.net/file/airtel-oct-27/