Monday, October 5, 2009

சில படங்கள் - சில பாடல்கள்

ஜக்குபாய் - ரஜினி படத்தலைப்பு. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம். ஏ.ஆர்.ரஹ்மான் - கலைஞர் வெளியிட்ட பாடல்கள். இவை தவிர வேறு ஏதும் விசேஷம் இருப்பது போல் தெரியவில்லை. 'பொன் மகள் வந்தாள்' ரீ-மிக்ஸ் பாடிய ஃரபி இசையமைப்பாளராகி இருக்கிறார். இதிலும் ரீ-மிக்ஸ் இருக்கிறது. அன்புள்ள மான் விழியே. ஃரபியே.

மொத்தம் ஏழு பாடல்கள். மகேஸ்வரியும் சுனிதாவும் லம்பாக நிறைய பாடியிருக்கிறார்கள். எனக்கு ஒரளவுக்கு பிடித்தது - ஹரிஹரன் பாடிய ‘ஏழு வண்ணத்தில்'. ஹரிஹரனின் குரலுக்காக.

---

வேட்டைக்காரன் - வழக்கமான டெம்ப்ளேட் பாடல்கள். 5 குத்து, 1 மெலடி என்று இருந்ததில் மெலடி என்பது இப்போது காதல் டூயட் என்றாகிவிட்டது. மத்ததெல்லாம் தனியாகவோ, கூட்டத்துடனோ, ஜோடியாகவோ ஆடுகிற குத்துபாடல்கள். வேறென்ன எதிர்பார்க்க?

என்னை ரொம்ப கவர்ந்த பாடல் - 'கரிகாலன் கால போல'. சங்கீதா ராஜேஷ்வரன். யப்பா... என்ன குரலுடா அது? அந்த குலோப் ஜாமூன் கொஞ்சும் குரலுடன் அனுஷ்காவை நினைத்து பார்த்தால், இப்பவே என்னன்னமொ செய்யுது.

---



யோகி - ரஹ்மானுக்கு பிறகு புது கருவி, புது இசை என்று முயற்சி செய்வது யுவன் தான் என்று நினைக்கிறேன். படத்திற்கு போடும் தீம் மியூசிக், செல்போனில் ரிங்டோனாகத்தான் உபயோகப்படுமானால், இசையமைத்தவரை 'ரிங்டோன் கம்போஸர்' என்று தான் அழைக்கவேண்டும் என்றார் ஸ்ருதி. அப்படி இல்லாமல், தீம் மியூசிக் எக்ஸ்பெர்ட்டாக எனக்கு தெரிவது சமீபகாலத்தில் யுவன் தான். இந்த படத்தில் இரண்டு தீம் இசைகளில் கலக்கியிருக்கிறார். என்ன, அவர் முக்கி முக்கி பாடுவதை கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்.

பிச்சைக்காரர் மகனாக நடிக்க நடிகர்கள் மறுத்ததால், தான் நடிக்க வந்ததாக அமீர் கூறியிருந்தார். இப்பட பாடல்களில் ஹீரோவுக்கு கொடுக்கும் ஹை-டெக் பில்-டப்புகள் மிரள வைக்கிறது. படம் வரட்டும்.

---

பேராண்மை - வித்தியாசமான கதைகளோடு, வித்தியாசமான களத்தில் படமெடுக்கும் இயக்குனர்களில் அவ்வளவாக விளம்பரம் இல்லாதவர் - ஜனநாதன். முதல் படம் இயற்கையில் தேசிய விருது பெற்றவர். எனக்கு அந்த படம் ரொம்ப பிடித்திருந்தது. ஈ - கான்செப்ட் தவிர படம் கவரவில்லை. திரும்பவும் பேராண்மையில் வித்யாசாகர்-வைரமுத்து கூட்டணியுடன் வருகிறார்.

வித்யாசாகரின் ஆஸ்தான மதுபாலகிருஷ்ணன், சாதனா சர்கம் மற்றும் நிறைய புது குரல்கள் பாடியிருக்கிறார்கள். பாடல்களை ஒருமுறை கேட்டேன். இனி படத்துடன் கேட்டு கொள்ளலாம்.

---

நந்தலாலா - பாடல்கள் வெளியாகி ரொம்ப நாளாச்சு. படம் வருமான்னு தெரியலை. ஜேசுதாஸ் பாடியிருக்கும் ‘ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கும்' பாடல் க்ளாஸ். இந்த மாதிரி ஜேசுதாஸ் குரலில், இளையராஜா இசையில், ஒரு பாசப்பாடலைக் கேட்டு ரொம்ப நாளாச்சு. அதனாலயே பிடித்தது.

இளையராஜாவுக்கும் மிஷ்கினுக்கும் பிரச்சினையானாதற்கு காரணமாக சொல்லப்பட்ட அந்த குறவர் பாடல் - புது முயற்சி. கேட்கும் போது, கண்டிப்பா என்னமோ பண்ணும்.

இளையராஜா சமீபகாலங்களில் சிலப்படங்களில் இசையமைப்பதை கேட்கும்போது, ஏனோ தானோ என்று இசையமைப்பது போல் உள்ளது. இதனாலயே, அவரிடம் செல்லும் சில நல்ல இயக்குனர்களும் வழிமாறக்கூடும். பாலாவும் ரஹ்மானும் இணைவதாக வேறு செய்திகள் வருகிறது. இப்படியெல்லாம் தத்துபித்துவென்று உளறி இளையராஜா ரசிகர்களிடம் அடி வாங்க விரும்பவில்லை.

அவருக்கு விருது வழங்கவேண்டும் என்பதற்காக ‘அஜந்தா' படத்திற்கு தமிழக அரசு வழங்கிய விருது, செம காமெடி. ஏன் அந்த வருஷம் அவர் இசையமைத்து வேறு எந்த படமும் வரவில்லையா?

.

12 comments:

நரேஷ் said...

பதிவு நல்லாயிருக்கு...

ஜக்குபாய்நான் இன்னும் கேக்கலை...வேட்டைக்காரனோட, நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாள் தூங்க மாட்ட பாட்டைப்பற்றீ சொல்லாத இந்தப் பதிவை நான் கடுமையாக கண்டிக்கிறேன்...

//அந்த குலோப் ஜாமூன் கொஞ்சும் குரலுடன் அனுஷ்காவை நினைத்து பார்த்தால், இப்பவே என்னன்னமொ செய்யுது.//

நான் பாட்டு கேக்கலை, ஆனா இந்த வரிகளைப் பாத்தா என்னென்னமோ செய்யுது!!!

என்னமோ மத்த விருதெல்லாம் ஒழுங்க கொடுத்துட்ட மாதிரி, அஜந்த படத்தைப் பத்தி மட்டும் கேள்வி கேக்குறீங்க???? இதெல்லாம் நமக்கு நாமே திட்டம் மாதிரி....ஆனா, எனக்கு அப்பிடி ஒரு படம் வந்ததே விருது அறிவிச்சதுக்கப்புறம்தான் தெரியுது....

விவேக் நாரயண் said...

உங்க பிளாக் நல்லா இருக்கு. சீக்கிரமே நான் இசையமைத்திருக்கும் ”அவர்” திரைப்படம் வெளியாகும். அதற்கும் இதே போல விமர்சனம் எழுதுங்கள்.

முரளிகண்ணன் said...

நல்ல விமர்சனம்

Muruganantham Durairaj said...

///நரேஷ் said...
என்னமோ மத்த விருதெல்லாம் ஒழுங்க கொடுத்துட்ட மாதிரி, அஜந்த படத்தைப் பத்தி மட்டும் கேள்வி கேக்குறீங்க???? இதெல்லாம் நமக்கு நாமே திட்டம் மாதிரி....ஆனா, எனக்கு அப்பிடி ஒரு படம் வந்ததே விருது அறிவிச்சதுக்கப்புறம்தான் தெரியுது...///

நானும் உங்க நிலையில் தான் :-)
:-)

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்

//இதெல்லாம் நமக்கு நாமே திட்டம் மாதிரி//

ஹி ஹி

சரவணகுமரன் said...

நன்றி விவேக் நாராயண்... கண்டிப்பா உங்க படத்துக்கு எழுதுறேன்... கலக்குங்க...

சரவணகுமரன் said...

நன்றி முரளிகண்ணன்

சரவணகுமரன் said...

வாங்க முருகானந்தம் துரைராஜ்

rajan said...

மிகவும் நல்ல விமர்சனம் சரவணா
எனக்கு பிடித்து வேட்டைக்காரன்
"கரிகாலன் கால போல" தான்
ஒவ்வொரு முறையும் ஒரு மாதிரி இருக்கிறது

Anonymous said...

ஹலோ சரவணகுமார், இளையராஜா ஏனோ தானோ என்றெல்லாம் இசையமைக்கவில்லை. இன்றும் அவரது இசை அற்புதமான படைப்பாகத்தான் இருந்துகொண்டு வருகிறது. அதேபோல் அவர் எந்த விருதுக்கும் ஆசைப்படவும் இல்லை. கேட்கவும் இல்லை. இன்று வரை இளையராஜாவின் இசை பல கோடித் தமிழ் நெஞ்சங்களின் சுவாசக் காற்றாகவும், ஜீவனாகவும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவரது இசையைப் போற்றிய தமிழ் உள்ளங்கள் ஒருநாளும் அவரை அடிக்கும் அளவுக்கு தரங்கெட்டுப் போய்விட மாட்டார்கள் என்பது உறுதி.

சரவணகுமரன் said...

ஐய்யய்யோ முருகு,

இப்படியெல்லாம் சொல்லி இளையராஜாவின் ரசிகர்களிடம் நான் அடி வாங்க விரும்பவில்லை என்று சொல்லியிருந்தேன். தவறாக புரியும்படி எழுதியிருந்தேனென்றால் மன்னிக்கவும்.

சரவணகுமரன் said...

நன்றி ராஜன். எனக்கும் அதுதான் பிடித்தது.