Monday, January 25, 2010

செருப்புக்கும் உண்டு சிறப்பு

மதன் மோகன் மாளவியா பற்றி தெரியுமா? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. மேலே படியுங்கள்.



சுதந்திர போராட்ட வீரர். கல்வியாளர். 1910களில் இவருக்கு ஒரு இந்து மத பல்கலைக்கழகம் தொடங்க ஆசை. அன்னி பெசண்ட் அம்மையார் போன்றோர்களுடன் இணைந்து வேலையை துவக்கினார். பல்கலைக்கழகத்திற்கு வாரணாசி மன்னர் 2000 ஏக்கர் நிலம் நன்கொடையாக அளித்தார். எனினும், மற்ற வேலைக்களுக்கு பெரும் தொகை தேவைப்பட்டது.

நிதி திரட்ட ஊர் ஊராக சுற்றுபயணம் மேற்கொண்டார். பெரும் செல்வந்தர்களையும், வியாபாரிகளையும் சந்தித்து நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பயணத்தின் ஒருக்கட்டத்தில் ஹைதராபாத் வந்து சேர்ந்தார். அப்போது ஹைதராபாத் நிஜாம் உலக அளவில் பெரும் பணக்காரர். அதனால், அவரிடமும் கேட்டு வைப்போம் என்று மதன் மோகன் நிஜாமிடம் உதவிக்கோரினார்.

”என்ன தைரியம் இருந்தால் என்னிடமே நிதி கேட்பாய்? அதுவும் ஒரு இந்து பல்கலைக்கழகம் தொடங்க?” என்று ஏறியவர், தன் செருப்பை மதன் மோகன் மேல் எறிந்து அவமானப்படுத்தி அனுப்பினார். மதன் மோகன் செருப்பை எடுத்துக்கொண்டார்.

நேராக ஹைதராபாத் சந்தைக்கு செருப்புடன் சென்றார். ஏலத்தை ஆரம்பித்தார். த்ரிஷா பயன்படுத்திய சோப்பு டப்பா, நயன்தாரா கடித்த ஆப்பிள் என்றாலே இப்போது வாங்குவதற்கு பல பேர் இருக்கும் போது, அப்போது நிஜாம் செருப்பு என்றால் சும்மாவா? கூட்டம் கட்டியது.

விஷயம் நிஜாம் காதுக்கு சென்றது. ”நான் பயன்படுத்திய செருப்பு, ஒரு சிறு தொகைக்கு ஏலத்தில் சென்றால் எனக்குதானே அவமானம்?” என்று எண்ணியவர், தன் வேலையாள் ஒருவரை அனுப்பி, ”எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை. அதை வாங்கி வா.” என்று அனுப்பி வைத்தார்.

மதன் மோகன் நடத்திய ஏலத்தில் ஒரு பெரும் தொகைக்கு அந்த செருப்பு விலை போனது. நிஜாம் செருப்பை நிஜாமுக்கே விற்றவர், அந்த பணத்தை பல்கலைக்கழகம் கட்ட பயன்படுத்திக்கொண்டார்.

---

அதனாலே நம்மக்கிட்ட என்ன இருக்குதுங்கறது முக்கியமில்லை. அதை எப்படி பயன்படுத்துகிறோம்’ங்கறதுதான் முக்கியம்.

(மாரல் ஆப் த ஸ்டோரி சொல்ல நினைச்சா, சிம்புவோட பஞ்ச் டயலாக் மாதிரி போச்சே!)

.

4 comments:

CVR said...

-/-/(மாரல் ஆப் த ஸ்டோரி சொல்ல நினைச்சா, சிம்புவோட பஞ்ச் டயலாக் மாதிரி போச்சே!)-/-/
LOL!! :D

முகில் said...

நல்ல சம்பவம் சரவணகுமரன்.

ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலி கான், அப்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரர் மட்டுமல்ல, உலகின் ஒண்ணாம் நம்பர் கஞ்சனும்கூட. அவர் அள்ளிக் கொடுத்திருந்தால்தான் ஆச்சரியம். ஒஸ்மான், உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்று டைம் அட்டையில் இடம்பெறவும் செய்தார். மேலும் தெரிந்துகொள்ள http://www.writermugil.com/?p=743 ;)

சரவணகுமரன் said...

வாங்க CVR

சரவணகுமரன் said...

நன்றி முகில் தகவலுக்கு...