Sunday, September 19, 2010

2 ஸ்டேட்ஸ்

அலுவலகத்தில் எனக்கு தெரிந்த பலர் கொஞ்ச காலத்திற்கு முன்பு இந்த புத்தகத்தைத்தான் வாசித்துக்கொண்டிருந்தார்கள். சிவப்பு அட்டை. தூரத்தில் இருந்தே கண்டுபிடித்துவிடலாம். எனக்கு அப்போது வாசிக்கும் ஆர்வமே ஏற்படவில்லை. சமீபத்தில் கைவசம் வேறு எதுவும் இல்லாததால், ஒரு நண்பர் தூண்ட, வாங்கி வாசித்தேன்.சேத்தன் பகத்திற்கு இது நாலாவது நாவல். அதற்குள் பெரும் புகழுக்கு சொந்தக்காராகிவிட்டார். டைம்ஸ் வெளியிட்ட ‘2010இன் நூறு செல்வாக்கான மனிதர்கள்’ பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார்.

இவருடைய புத்தகங்களின் இப்படியான விற்பனைக்கு நான் காரணமாக நினைப்பது.

* எளிமையான ஆங்கிலம்.
* எள்ளலும் நக்கலும்.
* மலிவான விலை. (95 ரூபாய்)

சென்ற வாரம் லேண்ட்மார்க் சென்றபோது, பகத்தின் புத்தகங்கள் நான்கையும் ஒவ்வொன்றும் ரூபாய் 50 என்று விற்றுக்கொண்டிருந்தார்கள். ப்ளாட்பாரத்தில் கூட இப்படி விற்க மாட்டார்கள்.

---

இந்த புத்தகத்தின் கதையை பார்ப்போம். உலகமெங்கும் காதலென்றால் ஆண்-பெண் என்று இருவருக்கிடையே வருவது. ஆனால், இந்தியாவில் காதலுக்கு பல லெவல்கள் இருக்கிறது. பையன் - பொண்ணு, பையன் - பொண்ணோட குடும்பம், பொண்ணு - பையனோட குடும்பம், பையனோட குடும்பம் - பொண்ணொட குடும்பம் என இவ்வளவுக்கு பிறகும் பையனுக்கும் பெண்ணுக்குமான காதல் நீடிக்க வேண்டும். இது தான் கதை சுருக்கம். கதை புரிந்திருக்குமோ?

நாம் பல தமிழ் படங்களில் பார்த்ததுதான்.

கதையின் பலம் - ஆசிரியரின் நகைச்சுவை உணர்வுதான். கல்லூரி பற்றி, பெண்கள் பற்றி, தமிழர்கள் பற்றி, பஞ்சாபிகள் பற்றி, அம்மாக்கள் பற்றி, அப்பாக்கள் பற்றி, வங்கிகள் பற்றி என எல்லாவற்றை பற்றியும் நக்கல் விட்டுக்கொண்டே இருக்கிறார். பெரும்பாலும், இவை இவர் மனதிற்குள் நினைப்பதாக வருகிறது.

பலவீனம் - முடிவு எப்படி, அடுத்தது என்ன நடக்கும் என எல்லாம் முன்பே தெரிந்துவிடுவது தான். இருப்பினும், சேத்தன் பகத்தின் நடை கதையோட்டத்திற்கு கைக்கொடுக்கிறது. இவருடைய கதைகள் தொடர்ந்து படமாக்கப்படுவதாலோ என்னவோ, கதை சில இடங்களில் சினிமாத்தனமாக இருக்கிறது.

---

கதையை படித்த இளசுகள், அகமதாபாத் ஐஐஎம்மில் சேர துடிப்பாக கேட் எக்ஸாமிற்கு படித்தாலும் படிப்பார்கள். பின்ன, கதையின் நாயகி, நாயகனின் ஹாஸ்டல் அறையில் தான் போர்வை போர்த்திக்கொண்டு பரீட்சைக்கு படிக்கிறாள்.

இப்படி ஓவரான விஷயங்கள் இருந்தாலும், ஆசிரியர் தான் கண்ட பலவற்றை கண்முன் நிறுத்துகிறார். சென்னை ஆட்டோ டிரைவர்களின் கெட்ட வார்த்தையை கூட அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கிடைக்கிற கேப்பில் எல்லாம் தமிழர்கள் கேவலப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பஞ்சாபிகளும் கிண்டல் செய்யப்பட்டு இருப்பதால், மன்னித்துவிட வேண்டி இருக்கிறது. சரிசமமாக கேவலப்பட்டு இருக்கிறார்களா என்று அளந்துப்பார்க்க வேண்டும். உண்மையில், ஐஐஎம், சிட்டி பேங்க் போன்றவர்கள் தாங்கள் கேவலப்பட்டதற்கு ஏதாவது சொல்லியிருக்க வேண்டும். உண்மைதானே என்று அவர்களே விட்டுவிட்டார்கள் போலும்.

சிரித்துக்கொண்டே பொழுதை போக்க உதவும் புத்தகம். உடனே யாரையாவது காதலித்துவிட வேண்டும் என்றும் நினைக்க வைக்கும். ஜாக்கிரதை!

.

13 comments:

Prathap Kumar S. said...

என் அலுவலகத்திலும் ஒருவர் வைத்து படித்துக்கொண்டிருப்பார். எளிமையான ஆங்கிலத்தில் இருப்பதால் வாங்கிப்படிக்க முயல்கிறேன்...

PG said...

இது வரை நாலு முறையாவது படிச்சிருப்பேன். ரொம்ப நல்ல புத்தகம். ஐ.ஐ.எம்.-ல நடக்கிறதா அவர் சொல்ற விஷயம் எல்லாம் எனக்கும் கொஞ்சம் டூமச்சா தான் இருந்துது. ஆனால் நிறைய பேர் கிட்ட கேட்டதிலிருந்த்து அதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மைதான்னு தெரிஞ்சிக்கிட்டேன். மத்தபடி தமிழர்கள / பஞ்சாபிகள கிண்டல் பண்ணிருப்பதை என்னால தவறாக எடுத்துக்க முடியலை. என்னதான் அவர் பண்ணது கிண்டலா இருந்தாலும் அதெல்லாம் டூப்புன்னு நம்ம சொல்லமுடியுமா? ஒத்துகிட்டு தான் ஆகணும். சொல்றத மத்தவங்க மனசு புண்ணாகாதவாறு காமடியா சொன்னது நல்ல இருக்கு.

Mohan said...

இவருடைய கதைகளில் காதல் எபிசோடு மட்டும் நன்றாக இருக்கும். "2 ஸ்டேட்ஸ்"-ல்,தமிழ் கெட்ட வார்த்தைகளை அப்படியே போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை

சரவணகுமரன் said...

பாருங்க நாஞ்சில் பிரதாப்

சரவணகுமரன் said...

ஆமாங்க PG

சரவணகுமரன் said...

மோகன், அது தேவையில்லாதது தான்.

Srinivasan said...

ஒரு சர்தார்ஜியின் பார்வையில் சென்னை! (நன்றி – ஆனந்த விகடன் – Issue Date – 18-11-2009)

உலகெங்கிலும் காதல் திருமணங்கள் ரொம்பவும் சிம்பிள். பையனுக்கு பெண்ணைப் பிடிக்க வேண்டும். பெண்ணுக்குப் பையனைப் பிடிக்க வேண்டும். அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள்.

ஆனால், இந்தியக் காதல் திருமணத்தில் இன்னும் சில சடங்குகள் இருக்கின்றன. பையனுக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டும். பெண்ணுக்குப் பையனைப் பிடிக்க வேண்டும். பையனின் குடும்பத்தினருக்குப் பெண்ணைப் பிடிக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினருக்குப் பையனைப் பிடிக்க வேண்டும். பையனின் குடும்பத்தினருக்குப் பெண்ணின் குடும்பத்தினரைப் பிடிக்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினருக்குப் பையனின் குடும்பத்தினரைப் பிடிக்க வேண்டும். இவ்வளவுக்குப் பிறகும் அந்தப் பெண்ணும் பையனின் காதலில் இருந்தால்தான், அவர்கள் திருமணம் செய்துகொள்வார்கள்!

இந்த ‘நறுக் சுருக்’ முன்னுரையுடன் துவங்குகிறது சேத்தன் பகத்தின் சமீபத்திய ஆங்கில நாவல் ’2 states.’

சேத்தன் பகத்? இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் இளமை எழுத்தாளர். ‘இந்தியா இப்போது இப்படித்தான் இருக்கிறது!’ என்று இளமை இந்தியாவைப் புத்தகத்தின் பக்கங்களில் காட்சிப்படுத்துபவர். ‘one night at the call centre’,'five point something’,'there mistakes of my life’ என இவரது முந்தைய நாவல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பெஸ்ட் செல்லர்ஸ். 25 வயதைத் தாண்டாத கேரக்டர்கள், காலேஜ் கேம்பஸ், 80% காமெடி, 15% செக்ஸ், 5% மெசேஜ்… இவ்வளவுதான் சேத்தன் பகத்தின் ஃபார்முலா. பரபரவென விற்கும் ஒவொரு நாவலும் பிறகு சல்மான் கான், அமீர் கான் நடிக்கும் படங்களாக வடிவெடுக்கின்றன. வெயிட்… சேத்தன் புராணம் போதும். இங்கே நாம் பேசவிருப்பது சேத்தனின் ’2 states’ நாவல் பற்றி மட்டுமே. காரணம், அதன் கதைக் களம்!

Srinivasan said...

கதைப்படி பஞ்சாபிப் பையன் கிருஷ்க்கும் சென்னைப் பெண் அனன்யா சுவாமிநாதனுக்கும் காதல். அதைப் பெற்றவர்களின் அனுமதியுடன் கலகலப்பான கல்யாணம் ஆக்குவதற்காக இருவருமே போராடுவதுதான் கதை. கிட்டத்தட்ட ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்தின் கதைதான். தனது டிரேட் மார்க் கிண்டல், நக்கல், கேலியுடன் இந்த நாவலிலும் முத்திரை பதித்திருக்கிறார் சேத்தன். ஆனால், ஒரு தமிழனாக, சென்னைவாசியாக அந்த நாவலைப் படிக்கும்போது சில இடங்களில் மூக்கு சிவப்பதைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. நாம் சர்தார்ஜிகளை ஜோக்கடித்துக் கலாய்ப்பதுபற்றி சேத்தனுக்குத் தெரிந்திருக்கிறது போலும். சந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழர்களைச் சவட்டி எடுத்திருக்கிறார்.

கிருஷ் சென்னையில் ஃப்ளைட் இறங்கியதும், மொழி தெரியாதவர்களை ஆடோக்காரர்கள் மிரட்டுவதைப்பற்றி மட்டுமே முழு அத்தியாயம். ஏர்போர்ட் டு நுங்கம்பாக்கத்துக்கு ஐந்து விரல்களைக் காட்டுகிறார் ஆட்டோக்காரர்.

’50 ரூபாய்தானே!’ என்று ஏறியமர்ந்து இறங்கினால் ‘நான் ஐந்நூறு ரூபாய் சொன்னேன்!’ என்று வம்பிழுக்கிறார். அதிர்ஷ்டவசமாக அந்தப் பக்கம் கடந்து செல்லும் தமிழறிந்த பஞ்சாபியை வைத்துச் சமாளிக்கிறார் கிருஷ். ஏமாந்த ஆட்டோ ‘…… …..’ என்று பளீர் கெட்ட வார்த்தையால் திட்டுகிறார். இன்னொரு இடத்தில் ஒரு சமையல் ஆள் இரண்டு வசைச் சொற்களால் கிருஷ்ஷை அர்ச்சிக்கிறான். அம் மூன்று வார்த்தைகளும் சுடு சுளீர் கெட்ட வார்த்தைகள். வாசித்துக்கொண்டே இருக்கும்போது திடுக்கிடவைக்கிறது ஆங்கிலத்தில் இருக்கும் அந்த ஆபாசத் தமிழ் வசவுகள்.

கதை ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் நடப்பதால் அனன்யாவை ஜெயலலிதாவுடன் அடிக்கடி ஒப்பிடுகிறார்கள் கிருஷ்ஷின் பஞ்சாபிச்சொந்தங்கள். ‘இந்தத் தமிழ்ப் பெண்களே இப்படித்தான். கொஞ்சம் இடம் கிடைத்தால் ஆளை மயக்கி இழுத்து வசியம் செய்துவிடுவார்கள். ஜெயலலிதா… ஜெயலலிதா’ என் கிறார் ஒரு பஞ்சாபி அத்தை. ‘என்னது… தமிழகத்தின் முதல்வர் முன்னாள் நடிகையா? எப்படி… அது எப்படி சாத்தியம்!’ என்று ஆச்சர்யப்படுகிறார் இன்னொரு அத்தை. ‘இந்த தென்னிந்தியர்களுக்குத் தங்கள் மகளை எப்படி வளர்ப்பதென்றே தெரியவில்லை. ஹேம மாலினி முதல் ஸ்ரீதேவி வரை இந்தக் கதைதான்!’ என்று அலுத்துக்கொள்கிறார் கிருஷ்ஷின் தாய்.

ஊரெங்கும் சினிமா போஸ்டர்கள், அதில் ‘மாமா’வாகக் காட்சியளிக்கும் ஹீரோக்கள் அருகில் நேற்று தான் வயசுக்கு வந்த ஹீரோயின்கள், லுங்கியுடன் ‘ஷாப்பிங்’ செய்யும் தமிழர்கள் என்று நீளும் வர்ணனைகள்.

கல்லூரியில் படிக்கும்போதே, ஹாஸ்டல், காலேஜ் கேம்பஸ்களிலேயே ஹீரோ – ஹீரோயின் செக்ஸ் வைத்துக்கொள்வது சேத்தனின் நாவலில் தவறாமல் இடம்பெறும்தான். ஆனால், இதில் கிருஷ் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டுக்குச் செல்கிறார் அனன்யா. அங்கு ஒரு பீர் குடித்துவிட்டு, கிருஷ்சுடன் கசமுசா செய்கிறார். அவர்கள் பெட்ரூமில் பிஸியாக இருக்கும்போது சேத்தனின் அபார்ட்மென்ட் தோழர்கள் வெளியே தேவுடு காத்திருக்கிறார்கள். ‘தமிழ்ப் பெண்கள் இன்னும் அந்த எல்லைக்கெல்லாம் போகலைப்பா!’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

சிட்டி பேங்க்கையும் விட்டுவைக்கவில்லைசேத்தன். தங்கள் முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் சிட்டி பேங்க் தெரிந்தே ஈடுபடுகிறது என்ற ரீதியில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். எந்த ஒரு விஷயத்தையும் இந்த அளவுக்குக் கேலி கிண்ட லுக்கு உள்ளாக்குவதற்கு ஓர் ஆங்கில எழுத்தாளருக்கு இருக்கும் சுதந்திரத்தை உணரும்போது, தமிழ் எழுத் தாளர்களின் நிலை பரிதாபமாக இருப்பதை எண்ணி ஆதங்கப்படுவதைத் தவிர, என்ன சொல்ல?!

”ஏன், தமிழர்களை இந்த வாரு வாரியிருக்கிறீர்கள்?” என்று கேட்டால், ”எனது மனைவியும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்தான். எங்கள் திருமணத்தின்போது நான் எதிர்கொண்ட பல சம்பவங்களின் பிரதிபலிப்புதான் இந்த நாவலாக வடிவெடுத்திருக்கிறது. நான் புத்தகத்தில் பஞ்சாபிகளையும் கிண்டலடித்திருக்கிறேன். ஆனால், ஒரு விஷயத்தைக் கவனியுங்கள்… இந்தப் புத்தகத்தை நான் எனது மாமனார், மாமியாருக்குச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன். உலக வரலாற்றில் யாராவது அப்படிச் செய்திருப்பார்களா… சொல்லுங்கள்!” என்று பதில் கேள்வி கேட்டுச் சிரிக்கிறார் சேத்தன்!

Srinivasan said...

கதைப்படி பஞ்சாபிப் பையன் கிருஷ்சுக்கும் சென்னைப் பெண் அனன்யா சுவாமிநாதனுக்கும் காதல். அதைப் பெற்றவர்களின் அனுமதியுடன் கலகலப்பான கல்யாணம் ஆக்குவதற்காக இருவருமே போராடுவதுதான் கதை. கிட்டத்தட்ட ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’ படத்தின் கதைதான். தனது டிரேட் மார்க் கிண்டல், நக்கல், கேலியுடன் இந்த நாவலிலும் முத்திரை பதித்திருக்கிறார் சேத்தன். ஆனால், ஒரு தமிழனாக, சென்னைவாசியாக அந்த நாவலைப் படிக்கும்போது சில இடங்களில் மூக்கு சிவப்பதைத் தவிர்க்கத்தான் முடியவில்லை. நாம் சர்தார்ஜிகளை ஜோக்கடித்துக் கலாய்ப்பதுபற்றி சேத்தனுக்குத் தெரிந்திருக்கிறது போலும். சந்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழர்களைச் சவட்டி எடுத்திருக்கிறார்.