Thursday, September 30, 2010

ஜட்ஜ்மெண்ட் டே

கல்லூரி காலத்திற்கு பிறகு, அரை நாள் விடுமுறை இன்று அதிகாரப்பூர்வமாக எனக்கு அறிவிக்கப்பட்டது. நான் எப்போதுமே அரை நாளுக்கு பிறகுதான், வேலையைத் தொடங்குவேன். நான் வேலையை தொடங்கும் சமயம், எல்லோரும் கிளம்ப தொடங்கிவிட்டார்கள். இரண்டரை மணிக்கு முக்கால்வாசி பேருக்கு மேல் அலுவலகத்தில் வெளியே சென்று விட்டார்கள்.ஒரு நீதிமன்ற தீர்ப்பு, தேசத்தையே முழு எச்சரிக்கை நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது. முன்பு ஒருமுறை காவிரி தீர்ப்பு வந்த சமயம், இப்படித்தான் பெங்களூரில் 3-4 மணிக்கே அனுப்பிவிட்டார்கள்.

வழியில் ஒருவர், ‘வெற்றி நமக்குதான்’ என்று ஏதோ கிரிக்கெட் போட்டி ரிசல்ட் மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.

உண்மையிலேயே அக்கறையுடன் சொன்னார்களோ இல்லையோ, எல்லா அரசியல்வாதிகளுமே ‘அமைதி அமைதி’ என பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். நியாயப்படி, இது அரசியல்வாதிகளை நோக்கி நாம் கூற வேண்டிய வார்த்தை. அவனவனுக்கு அவன் பிரச்சினை. லீவ் விட்டுவிட்டார்கள்.

அனைத்து டிவி ரிப்போர்ட்டர்களும், நீதிமன்றத்தை சுற்றி சுற்றி வந்தார்கள். நீதிமன்ற கேட், காவலுக்கு நின்ற போலீஸ் ஒருவரையும் விடவில்லை. பார்க்க காமெடியாக இருந்தது.

டைம்ஸ் நவ்வில் தீர்ப்பு வந்தப்பிறகு, அதை ஆராய்ந்து உண்மை நிலையை கூறுவோம். அதுவரை குத்துமதிப்பாக எதுவும் சொல்ல மாட்டோம் என்று நல்ல பிள்ளையாக சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதற்குள், மற்ற சானல்கள் டிக்கர் போட தொடங்கிவிட்டார்கள். டிஆர்பி போச்சே!

தீர்ப்பை நேரடியாக காண வேண்டும் என்று டிவி முன்பு உட்கார்ந்தவர்கள் எல்லாம், குழம்பிய நிலைக்கு சென்றிருப்பார்கள். கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணும் புரியவில்லை. ஆளாளுக்கு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். எது தீர்ப்பு, எது கருத்து என்றே தெரியவில்லை. பத்திரிக்கையாளர்களுக்குள் ஒரு அடிதடி வேறு நடந்தது. இவுங்க நம்மள அமைதியாக இருக்க சொல்கிறார்கள்!

தீர்ப்பு ஆன்லைனிலும் கிடைக்கும் என்றார்கள். கண்டிப்பாக சர்வர் தீய்ந்துபோய்விடும் என்று நினைத்திருந்தேன். அப்படியே ஆனது. ஊப்ஸ்! பேஜ் கேனாட்பி டிஸ்ப்ளேயிட்! இங்கு முழு தீர்ப்பும் கிடைக்கிறது.

மசூதியின் மையப் பகுதிக்கு, கீழே உள்ள இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்ற வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு ஆதாரமாக எதை எடுத்துக்கொண்டார்கள் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

---

சன் டிவியில் ‘படிக்காதவன்’ ஒளிப்பரப்பினார்கள். ஷங்கர் தான், ரஜினியை வைத்து சயின்ஸ் பிக்‌ஷன் எடுப்பாரா? அப்பவே, இயக்குனர் ராஜசேகர் இந்த படத்தில் ரஜினியின் ‘லக்‌ஷ்மி’ டாக்ஸிக்கு ஆர்ட்டிபிஸியல் இண்டலிஜென்ஸ் திறமையை கொடுத்திருந்தார். வண்டியில் கஞ்சா, சாராயம் வைத்துக்கொண்டு யார் ஏறினாலும், சத்தம் கொடுத்தப்படியே கிளம்ப மறுக்கிறது.

இரண்டாம் பகுதியில் வரும் கோர்ட் காட்சி நன்றாக இருக்கும். ‘அண்ணன் நீதிபதி, ஒரு தம்பி குற்றவாளி, இன்னொரு தம்பி சாட்சி’ என்று சிவாஜி சொல்லும் காட்சி அருமை. சிவாஜியிடம் காட்டும் மரியாதை, தம்பியிடம் கொட்டும் பாசம் எதுவும் ரஜினியிடம் வெறும் நடிப்பாக தெரியாது.

---

ஆண்டுக்கணக்கில் காத்திருந்து, முடிவில் இன்று தீர்ப்பு வெளிவந்துவிட்டது.

ஆமாம். எந்திரன் நன்றாக இருக்கிறதாம். ரஜினிக்கு ஆஸ்கரோ, தேசிய விருதோ கிடைக்க வாய்ப்புள்ளதாம்! :-)

.

7 comments:

எஸ்.கே said...

என்ன சார்!:-) தீர்ப்பையும் ரஜினியையும் ஒன்றா எழுதியிருக்கீங்க! :-)
டிவியில் தீர்ப்பை பார்த்தேன். வரதுக்கு முன்னாடி ஒரே அமைதிதான். அலுவலகம் எல்லாம் சீக்கிரம் விட்டுடாங்க! இனிதான் தெரியும் என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம்!

SAI GOKULAKRISHNA said...

தோணுறத சொல்ல..., எந்திரன் பார்க்க விருப்பம்..,

smart said...

Thanks for the judgement copy.
Here, We can't able to view the Court site as it server gone down. There are some mirror servers but poor performance.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆமாம். எந்திரன் நன்றாக இருக்கிறதாம். ரஜினிக்கு ஆஸ்கரோ, தேசிய விருதோ கிடைக்க வாய்ப்புள்ளதாம்! :-)//

really?

ம.தி.சுதா said...

சகோதரா உங்களுக்க உங்க கிடைத்த தீர்ப்பால் சந்தோசம் கிடைத்ததோ இல்லையோ எமக்கு (இலங்கை) இன்று கிடைத்துள்ளது. (பொன்சேகா பற்றி)

SP said...

எப்போதுமே அரை நாளுக்கு பிறகுதான், வேலையைத் தொடங்குவேன். நான் வேலையை தொடங்கும் சமயம், எல்லோரும் கிளம்ப தொடங்கிவிட்டார்கள்.

Super.

then
ungala mathirye than unga blog-kum
Click seytha vudane open agathu konja neram kalithu than open agum.
Nijama sollunga enthiran nalla eruka yenna enga anga enge thirumbinalum cut-out than oru street kuda vidala
athan keten

Unknown said...

மிக நல்ல பதிவு


http://denimmohan.blogspot.com/