Tuesday, September 21, 2010

பேசிய பேப்பர் விளம்பரம் - டைம்ஸ் அசத்தல்

டைம்ஸ் நாளிதழில் வித்தியாசமாக விளம்பரங்கள் வரும். செய்தியை விட விளம்பரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்களோ? என தோன்றும் வகையிலான விளம்பரங்கள்.

முதல் பக்கம் முழுக்க விளம்பரம்.

பேப்பரில் ஓட்டைப்போட்டு விளம்பரம்.

செய்திகளுக்குள் விளம்பரம்.

இப்படி பல வேலைகள் செய்திருக்கிறார்கள். இன்றைய நாளிதழில் இன்னொரு வித்தியாசமான முயற்சி. இதற்கு முன் யாரும் இப்படி செய்திருக்கிறார்களா? என்று தெரியவில்லை. நான் பார்த்தது, பெங்களூர் பதிப்பில்

மடித்த பேப்பரை திறந்தால், கடைசி பக்கத்தில் இருந்து சத்தம். என்னவென்று பார்த்தால் வோல்க்ஸ்வாகன் கார் விளம்பரம். காரின் அருமை பெருமைகளை, ஆண் குரலில் அந்த விளம்பரத்தில் ஒட்டியிருந்த கருவி பேசுகிறது.



முன்பு கிரிட்டிங் கார்ட்டில் பார்த்த விஷயம். இன்று மூன்று ரூபாய் செய்தித்தாளுடன். உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு பொருள் ரெடி.



பேப்பரை மடித்துவைத்துவிட்டால், சத்தம் நின்றுவிடுகிறது. திறந்து வைத்து படிக்க முடியவில்லை. கய்யாமுய்யாவென்று.

இதை வைத்து இன்னும் என்னவெல்லாம் செய்வார்களோ?

பிற்சேர்க்கை - ஹிந்துவிலும் வந்திருக்கிறது. ஐடியா வோல்க்ஸ்வாகனுடையது போலும். வெறும் குரல் என்றில்லாமல், கார் சத்தம், மியூசிக் என்று இன்னும் சேர்த்திருக்கலாம். நல்ல வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார்கள்.

.

8 comments:

cheena (சீனா) said...

அன்பின் சரவண குமரன்

விளம்பர உலகம் இன்று கொடி கட்டிப் பறக்கிறது. வித்தியாசமாக சிந்திப்பது - புதுமையாக சிந்திப்பது என இளைஞர்கள் கொடி கட்டிப் பறக்கின்றனர்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

அலைகள் பாலா said...

ஹா ஹா ஹா காமெடியா இருக்கு அண்ணா

ராமலக்ஷ்மி said...

// திறந்து வைத்து படிக்க முடியவில்லை. கய்யாமுய்யாவென்று.//

ஹஹ்ஹஹ்ஹா ஆமாம்:)))!

ஆனாலும் புதுமையான உத்தியைப் பாராட்டத்தான் வேண்டும்.

VISA said...

In THE HINDU also.

சரவணகுமரன் said...

நன்றி சீனா ஐயா

சரவணகுமரன் said...

வாங்க பாலா

சரவணகுமரன் said...

கண்டிப்பாக ராமலக்ஷ்மி... பல பேருக்கு தோன்றியிருக்கும். செயல்படுத்தியது பெரிய விஷயம்.

இப்ப, எனக்கு கூட டிஸ்ப்ளேவுடன் கூடிய செய்தித்தாள் என்று யோசனை வருகிறது. யார் செயல்படுத்த போகிறார்களோ?

சரவணகுமரன் said...

ஆமாங்க விசா. நானும் கேள்விப்பட்டேன்.