Wednesday, September 22, 2010

காமன்வெல்த் சித்து விளையாட்டுக்கள்

ஆரம்பத்தில் இருந்தே டெல்லியில் நடக்க இருக்கும் (நடக்குமா என்பது சந்தேகம் தான்!) காமன்வெல்த் விளையாட்டைப் பற்றி நெகட்டிவ் செய்திகள் தான் வந்துக்கொண்டிருந்தது. நாங்களும் பெரிய ஆட்கள் என்பதை காட்டிக்கொள்ள, இந்த வாய்ப்பை கேட்டு வாங்கி விட்டார்கள். தற்போது உண்மை நிலவரம் புரிந்திருக்கும். காசை அள்ளிக்கொட்டினால், நடத்தி காட்டி விடலாம் என்று நினைத்திருப்பார்கள். 70,000 கோடி ஸ்வாஹா.



இதுவரை நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுகளிலே, இதற்கு தான் செலவு அதிகம். மட்டமான ஏற்பாடும் நடந்தது இதற்கு தான்.

செம்மொழி மாநாடு பாடல், எந்திரன் பாடல் என்று ஹிட் ரூட்டில் சென்றுக்கொண்டிருந்த ரஹ்மானையும் பிடித்து காய்ச்சியது இதில் தான். சம்பந்தபடும் அனைவரும் அடிவாங்குகிறார்கள்.

கொஞ்ச நாள் முன்னாடி ஊழல் செய்திகளாக வந்துக்கொண்டு இருந்தது. இந்தியாவுல ஊழல் இல்லாம எப்படி? நடுவில் கொஞ்சம் நல்ல செய்திகள் அரசு தரப்பில் இருந்து வந்தது. இப்ப, பழையபடி பேக் டூ ட்ராக்.

கமிஷன் அடிச்சாவது வேலையை முடிச்சிடுவாங்க என்றொரு சராசரி இந்திய நம்பிக்கையில் இருந்தேன். ஒழுக்கமில்லாத, தரமில்லாத வேலைக்கு பலனாக தற்போது அடிமேல் அடி வாங்குகிறார்கள்.

விளையாட்டு வீரர்கள் தங்க, புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் நாறுகிறதாம். தண்ணீர் ஒழுகுகிறதாம். நியூசிலாந்து குற்றம் சாட்டியுள்ளது. ஒரு ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒரு பெரிய பெட்டியை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைய, டஜன் கணக்கில் வாசலில் போலீஸ்காரர்கள் இருந்தாலும், யாரும் பெட்டியை பரிசோதிக்கவில்லையாம். துரை மேல நம்பிக்கையாக இருந்திருப்பார்கள். புதிதாக கட்டப்பட்ட நடைபாதை பாலம் இடிந்துவிட்டது.

இதற்கெல்லாம் ஏற்பாடுகளை நடத்தும் பொறுப்பாளர்கள் சொல்லும் பதில்கள், ரொம்ப பொறுப்பானவை.

“வீரர்கள் தங்க இருக்கும் இடங்கள் நாறுகிறதாமே?”

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டாண்டர்ட் இருக்கும். இது இந்திய ஸ்டாண்டர்ட். வேலை செய்பவர்கள், அதே கழிவறையை பயன்படுத்துவதால் இந்த பிரச்சினை. சீக்கிரம் கழுவிடலாம்.”

“பாலம் இடிந்து விழுந்துவிட்டதே?”

”நல்லவேளை, இப்பவே விழுந்துவிட்டதே. விளையாட்டின் போது விழாமல்.”

“விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தபோகும் பாலம் இடிந்ததால் ஏற்படும் பாதிப்பு என்ன?”

“சே, சே... இது விளையாட்டு வீரர்களுக்கான பாலம் இல்லை. சாதாரண பொது ஜனங்களுக்கானது.”

எனக்கு இந்த விஷயங்கள் எதுவும் வருத்ததையோ, கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்திய அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் சந்திக்க போது சங்கடங்களை நினைத்து குஜாலாக இருக்கிறது. கிளாஸ் லீடர் டீச்சரிடம் திட்டு வாங்கும்போது கிளாஸுக்கு இருப்பது போலவும், ப்ராஜக்ட் மேனேஜர் கிளையண்டிடம் டோஸ் வாங்கும்போது டீமுக்கு இருப்பது போலவும்.

பார்க்கலாம், இன்னும் என்னென்ன சித்து விளையாட்டுக்கள் நடத்தி இருக்கிறார்கள் என்று.

.

12 comments:

எஸ்.கே said...

சிரிக்கிறதா அழுவறதான்னே தெரியலை! மொத்தத்தில் நம் நாட்டின் மானம் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது!

வினோத் கெளதம் said...

//எனக்கு இந்த விஷயங்கள் எதுவும் வருத்ததையோ, கோபத்தையோ ஏற்படுத்தவில்லை. மாறாக, இந்திய அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் சந்திக்க போது சங்கடங்களை நினைத்து குஜாலாக இருக்கிறது.//

same pinch..

அருண் இராமசாமி said...

Part of the ceiling of the newly-built weightlifting venue, also at the Nehru stadium, has reportedly collapsed.

Krubhakaran said...

"Common Wealth" Games ஆதாலால் அதன் மூலாம் எல்லோருடைய wealthம் பெருக்கி கொள்ள படுகிறதோ

சரவணகுமரன் said...

எஸ்.கே.,

நாம எதுக்கு அழணும்? சிரிப்போம் :-)

சரவணகுமரன் said...

நன்றி வினோத் கௌதம்

சரவணகுமரன் said...

ஆமாங்க covaiguys... ஒயர் வெயிட் தாங்காம விழுந்ததாம். :-)

சரவணகுமரன் said...

கிருபா, அமைப்பாளர்கள் எல்லாரோட...

அலைகள் பாலா said...

இவங்கள நினைச்சாலே கேவலமா இருக்கு

அருண் இராமசாமி said...

இதற்குக் எல்லாம் அந்த கல்மாடி நாய் தான் காரணம்

KrishnaDeverayar said...

China, though, being corrupted and having a lower standard of living, still managed to do Summer Olympics sucessfully, south africa despite having lower conditions then india somehow to manage to host World Cup and that too, sucessfully, finally Singapore, my own country, just being a Small island also manage to host Youth Olmpics Games on August Successfully.

Why India, so much failure in everything? Can't win medals in Olympics is already one thing, unable to event host games properly is sickening. India won the bi in 2003. So they had 7 long years for preparations, what were the government doing?

In Singapore English Newspaper (The Strait Times), this CWG news is in the front page everyday.

Being an Indian is seriously embarrassing now especially in Foreign lands.

Arun said...

Yenakoru Doubt, Sidhu Cricket thana viladuvaaru :)