Friday, November 12, 2010

ஸ்பெக்ட்ரம் - அறிவியலும், அரசியலும்

ஸ்பெக்ட்ரமை தமிழில் அலைக்கற்றை என்று சொல்லுவார்கள். நாம் ஸ்பெக்ட்ரம் என்றே தொடரலாம். தகவல் பரிமாற்றத்திற்காக, வான் வழியே அனுப்பப்படும் அலைகள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் இது சம்பந்தமாக அரசாங்கங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொடர்புத்தொடர்பு நிறுவனங்கள் வாங்க வேண்டிய சமாச்சாரம் இது மட்டும் தான். மற்றபடி, டவர் அமைத்து பைசா பிடுங்கி காசு சம்பாதிக்க தொடங்கிவிடலாம். வியாபாரமே இதை நம்பி இருப்பதால், அலைவரிசைகள் விற்கப்படுகிறது. அலைவரிசை குறிப்பிட்ட அளவிலும், வாங்குவதற்கு போட்டி அதிக அளவில் இருப்பதாலும் இது ஏலம் விடப்படுகிறது.தொடர்த்தொடர்பு துறையில் ஏற்படும் முன்னேற்றத்தால், புது புது தலைமுறைகள் உருவாக்கப்படுகிறது. முதல் தலைமுறை (1G), இரண்டாம் தலைமுறை (2G), மூன்றாம் தலைமுறை (3G) என ஒவ்வொரு தலைமுறையிலும் அலைவரிசை அதிகரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கான வசதி அதிகரிக்கப்படுகிறது. வசதி அதிகரித்தால், அதிக காசு. அதிக போட்டி. ஏலம் ஜோரா போகும்.

இனி, புகழ்ப்பெற்ற இரண்டாம் தலைமுறைக்கான ஏலத்தில் நடந்த ஜோரை பார்க்கலாம்.

- 2008இல் விற்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான 2G லைசன்ஸ், 2001 ஆண்டிற்கான விலையில் ஒன்பது நிறுவனங்களுக்கு விற்கப்பட்டது. (விலையை உயர்த்தினால், விலைவாசி விலைவாசி’ன்னு புலம்புறது. இல்லாட்டி இப்படியா!)

- 7442 கோடியில் இருந்து 47912 கோடி வரை மதிப்புள்ள லைசன்ஸ், 1651 கோடி கொடுக்கப்பட்டது. (சலுகை விலை. அடுத்த தேர்தலில் ஜெயிக்க வைத்தால், இலவச ஸ்பெக்ட்ரம்!)

- ஏலம் வைத்து அதிக விலை கேட்பவருக்கு கொடுக்காமல், முதலில் கேட்பவருக்கே கொடுக்கப்பட்டது. (தீயா வேலைப்பார்க்க வேண்டாம்?!!!)

- எந்த சட்டத்திட்டமும் இல்லாமல், ஏலத்தில் விலை கேட்பது தான்தோன்றித்தனமாய் நிறுத்தப்பட்டது. (ஒரு மத்திய மந்திரிக்கு அதுக்குக்கூட உரிமை இல்லையா?! இது என்ன நியாயம்? இதுவே....)

- 122 லைசன்ஸ்களில் 85 லைசன்ஸ்கள், ஏலத்தில் பங்குப்பெற இருக்க வேண்டிய தகுதிகள் இல்லாத நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டது. (அப்புறம் அவுங்க எப்ப வளர்றது? இப்படித்தான் நாங்க...)

- சில நிறுவனங்களுக்கு அதிகப்படியான அலைவரிசை குறைந்த விலையில் வழங்கப்பட்டது. (ஒண்ணு வாங்குனா, ஒண்ணு ப்ரீ)

- நிதித்துறை அமைச்சகம், நீதித்துறை அமைச்சகம், தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பு போன்றவை கூறிய அறிவுரைகளை மீறி ஏலம் நடத்தப்பட்டது. (ம்ம்க்கும். நான் ஒன்றை இங்கு கேட்கிறேன். தொலைத்தொடர்புத்துறையில் மூக்கை நுழைக்க அவர்கள் யார்?!)

இந்த ஏல முறைக்கூட்டினால்(!), ஒரு தமிழன் இந்திய அளவில் பெருமையடைந்துள்ளான். 1.77 லட்சக்கோடி என்று சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள அவனை நினைத்து ஒவ்வொரு தமிழனும் பெருமையடைய வேண்டும்.

---

நான் என்ன நினைக்கிறேன் என்றால், 1.77 லட்சக்கோடிகள் அந்த ஏலத்தில் அரசு சம்பாதித்திருக்கலாம். ஆனால், குறைவாக சம்பாதித்துள்ளது. முறைக்கேடு சில ஆயிரக்கோடிகள் இருக்கலாம். யார் யாருக்கு எவ்வளவு போனதோ? இருந்தாலும், 1.77 லட்சக்கோடியும் ஒரு குரூப் சம்பாதித்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.

ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது. ஒரு வீட்டில் திருட்டு போகிறது. திருடன் வீட்டில் இருந்த நகைகளையும், பணத்தையும் கொள்ளை அடித்து சென்று விட்டான். போலீஸ் விசாரணை நடத்துக்கிறது. வீட்டுக்கார அம்மாவிடம் எவ்வளவு நகை, பணம் வீட்டில் வைத்திருந்தீர்கள் என்று கேட்கிறார்கள். அதான் திருட்டு போய்விட்டதே! எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம் என்று வீட்டுக்கார அம்மா பெருமைக்காக, ஒவ்வொன்றையும் கூட்டிக்கூட்டி சொல்கிறார். இது அடுத்தநாள் செய்தித்தாளில் வருகிறது. செய்தியை படித்த திருடன், கடுமையான கோபமும், வருத்தமும் கொள்கிறான். நாம் அவ்வளவு அடிக்கவில்லையே என்று.

நம் நாட்டிலும் சிலர், அந்த 1.77 லட்சக்கோடியை கேட்டு இவ்வுணர்வை அடைந்திருப்பார்கள்!

.

22 comments:

sathishsangkavi.blogspot.com said...

1.77 இலட்சக்கோடி இப்ப எங்க இருக்குது?

KrishnaDeverayar said...

Sara, please read this too.
The scandal is explained more in detail.


நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 01
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/


நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 02
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/

நம்மை உண்மையில் ஆள்வது யார்? - 03
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/

அமுதா கிருஷ்ணா said...

இந்த இலட்சத்துக்கு எத்தனை சைபர் போடணும் குமரன்...அதான் அம்மா லபோ லபோன்னு கத்திக்கிட்டே இருக்காங்களா...

puduvaisiva said...

அந்த ஸ்பெக்ட்ரம்மில் அடித்த பணத்தில் ஒரு ஓட்டுக்கு ரூ 42,000/ - தர முடியும் என இந்திய கணக்கியல்துறை கணக்கிட்டுள்ளது - இன்றைய தினமலர் செய்தி.

ஆகா 5 ஓட்டு உள்ள குடும்பத்துக்கு ரூ 2,00,000 கிடைக்க வாய்பு உள்ளது.

வாழ்க இந்திய ஜனநாயகம்.

ஆர்வா said...

கேள்விப்படும் போது ஆத்திரம் அணையை மீறி வருது. ஆனா என்ன செய்ய முடியும்??

சரவணகுமரன் said...

சங்கவி,

1.77 லட்சக்கோடியை கணக்குப்போட்டவர் தான், அதை சொல்லணும்.

சரவணகுமரன் said...

நன்றி கிருஷ்ணதேவராயர்

சரவணகுமரன் said...

ஆமாங்க அமுதா கிருஷ்ணா

சரவணகுமரன் said...

புதுவை சிவா,

இந்த விஷயம் தெரிஞ்சா, மக்களே கொள்ளை அடிக்க ஆதரவு கொடுப்பார்கள்.

சரவணகுமரன் said...

கவிதை காதலன்,

ஒண்ணும் பண்ண முடியாது.

ரோஸ்விக் said...

ரொம்பப்பெருமையா இருக்குண்ணே! வாழ்க இரட்சிக்கப்பட்டவர்கள்.

மாணவன் said...

அரசியல்
ஒன்றும் சொல்வதற்கில்லை...

Kumky said...

உங்கள் கடைசி பாரா உண்மைதான்..

இவ்வளவு ஒர்த் இருப்பது தெரியாமல் ஏமாந்து சில நூறு கோடிகளுக்காய் பழி சுமந்து வந்துவிட்டான் தமிழன்...

(இதிலுமா ஏமாளியா இருக்கறது...)

ஏல நிறுவனங்களில் மத்திய விவசாயத்தின் மகளுக்கும் பங்கிருக்கிறது என்பது வெளியவே வரவில்லை...

பிரதமருக்கு தெரிந்துதான் எல்லாம் நடந்தது என்று பலமுறை கரடியாய் கத்தியும் மிஸ்டர் க்ளீன் ஒன்னும் பதில் சொல்வதாக காணோம்...

அய்யோ பாவம் ராசா” என்பதுதான் வடநாட்டில் பேச்சாக இருக்கும்..

ஜோதிஜி said...

சரவண குமரன் தலைப்பே அற்புதம்.

உங்கள் பார்வை நக்கல் நையாண்டி என்றாலும் , பின்னோட்டத்தில் சுட்டி கொடுத்திருந்த கிருஷ்ண தேவராயருக்கு என் வணக்கம்,

மூன்று கட்டுரைகளையையும் படித்து முடித்த போது ஒரு மணி நேரம் கடந்து போனது.

BalHanuman said...

>>யார் யாருக்கு எவ்வளவு போனதோ? இருந்தாலும், 1.77 லட்சக்கோடியும் ஒரு குரூப் சம்பாதித்திருக்குமா? என்பது சந்தேகம் தான்.


நேற்று ஜெயா டிவி. நேர்முகம் நிகழ்ச்சியில் (டாக்டர் சுப்ரமணியன் சுவாமி -- ரபி பெர்னார்ட்) இருந்து:
ராசாவுக்கு 10 % மற்றும் கருணாநிதி குடும்பத்துக்கு 50 %

இந்த ஊழலை எதிர்த்து நீதி மன்றங்களில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி. எதிர்க்கட்சியான பாஜக செய்ய வேண்டிய வேலையை தனி நபராக ஒரு சுவாமி செய்திருக்கிறார். அவரது கடந்த கால தவறுகளினால் அவர் மீதும் பலருக்கும் இன்று நம்பிக்கை ஏற்படாவிட்டாலும் கூட, அவரது போராட்டங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் கடமைப் பட்டிருக்கிறார்கள்.

BalHanuman said...

No other Tamil magazine or Tamil article or Tamil author has covered this scandal to this finest detail level.

This is an exhaustive and complete report about all aspects of this scandal.

This is the only one Tamil article that discusses this issues in detail.

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/

சரவணகுமரன் said...

வாங்க ரோஸ்விக்

சரவணகுமரன் said...

ஆமாம் மாணவன்

சரவணகுமரன் said...

நன்றி கும்க்கி

சரவணகுமரன் said...

நன்றி ஜோதிஜி

சரவணகுமரன் said...

நானும் வாசித்தேன், பல்ஹனுமன். நல்ல விரிவான கட்டுரை.

Anonymous said...

//1.77 இலட்சக்கோடி இப்ப எங்க இருக்குது?//

a. கூப்பாடு போடுபவர்களின் மனங்களில்.

b. நம்ம கிட்டதானுங்க. பின்ன? அவ்வளவு கோடிகள் கொடுத்து அலைக்கற்றையை வாங்கும்போது நிறுவனங்கள் இப்போ இருக்கறத விட கூட விலை வைத்தே சேவைத்திட்டங்களை விற்றிருப்பார்கள்.

சரி சரி..., தேர்தல் வருது. எல்லோரும் சூதானமா இருந்து தேர்தல்ல வசூலிச்சுரணும்.

நா கொள்ளையே நடக்கலைன்னு சொல்லமாட்டேன். ஆனா நடக்கறதென்னவோ உங்க கடேசி பத்திதான்.