Wednesday, July 30, 2008

இன்றைய பகுத்தறிவு பகலவர்கள்

குமுதம்.com இல் இயக்குனர் வேலு பிரபாகரனின் பேட்டியை “ஞாநி பேசுகிறேன்” பகுதியில் காண நேரிட்டது. அவரது பேச்சைக் கேட்க ரொம்ப பரிதாபமாக இருந்தது. அவர் பேச்சின் சில துளிகள்.

o படப்பிடிப்பில் முப்பது நிமிடம் காத்திருந்து தேங்காய் உடைத்தவுடன் தான் கேமராவை ஆன் செய்ய வேண்டும் என்றவரிடம் சண்டை.
o படப்பிடிப்பு சாதனம் மேல் கால் வைத்திருந்த போது, காலை எடுக்க சொன்னவரிடம் வாக்குவாதம்.
o பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொள்ளும் கமல், கடவுளை நம்பும்விதமாக தசாவதாரம் படம் எடுக்கிறார். சாதி பெருமைக் கொள்ளும் விதமாக தேவர் மகன் படம் எடுக்கிறார்.
o திராவிடர் கழகம் ஒரு வட்டி கடை.
o இரவு பகலாக ஊர் ஊராக பிரச்சாரம் செய்த தன்னிடம் வீட்டை வட்டிக்காக பிடுங்கி கொண்டது.
o காதல் அரங்கம் என்று ஒரு படம் எடுத்து சென்சார் போர்டு, டெல்லி ட்ரிபனல் தணிக்கை போன்றவற்றால் படம் வெளியிட முடியாமல் போனது. (படத்தில் கதாநாயகி மேலாடை அணியாமல் வரும் காட்சி ஒன்று உள்ளதாம்.) அடுத்தது சுப்ரிம் கோர்ட் போக போகிறாராம்.

இப்படியும் சிலர் இருக்கிறார்கள்.

பகுத்தறிவு கூறி பிழைப்பவர்கள் இருக்கிறார்கள். பகுத்தறிவு பேசி ஒரு பைசா பிரயோஜனம் இல்லா விதண்டாவாதம் செய்பவர்கள் இருக்கிறார்கள். உண்மையில் பகுத்தறிவால் அறியாமையில் கஷ்டப்படும் மக்களைக் காப்பாற்றுபவர்கள் இருக்கிறார்களா?

பகுத்தறிவு என்பது எதையும் அலசி ஆராய்வது. சமூகத்தில் மூடநம்பிக்கையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைய உதவுவது. ஆனால் இன்று பகுத்தறிவாளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் என்ன செய்கிறார்கள்?

இன்று பகுத்தறிவாளர்கள் என்று சொல்லி கொள்ளும் பெரும்பாலோனர் பகுத்தறிவு பேசுவது கண்டிப்பாக சமூகத்தின் மேல் உள்ள அக்கறையினால் இல்லை. இவர்கள் இவர்களது செயல்களில், எதையும் பகுத்தறிய வேண்டும். ஆனால் இவர்கள் இப்படி இருப்பதில்லை. இவர்களது ஒரே பலம், வாதம் செய்வது சுலபம். இவர்கள் நியாயம் பேசி என்ன சாதித்திருக்கிறார்கள்?

அரசியலில் உள்ள பகுத்தறிவாளர்களுக்கு ஓட்டு தான் முக்கியம். ஓட்டு தேவைப்படும் போது இவர்களுக்கு பகுத்தறியும் திறன் வேலை செய்வதில்லை. இவர்களது அடிப்படை கொள்கை இதுவென்பதால் மட்டுமே இதை இன்னமும் பேசி கொண்டிருக்கிறார்கள். பகுத்தறிவு, பேச்சில் மட்டும் இருக்க கூடாது. செயலிலும் இருக்க வேண்டும். சாதியை ஒழிக்க வேண்டியவர்கள், சாதியை அடிப்படையாக கொண்டு கூட்டணி அமைக்கிறார்கள். சீட் கொடுக்கிறார்கள். பதவி கொடுக்கிறார்கள். மத வேறுபாடுகளைக் களைய வேண்டியவர்கள், மத ரீதியான ஓட்டு சதவிதத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.

திரைப்படங்களில் பகுத்தறிவு பேசுபவர்கள், தங்கள் சொந்த வாழ்க்கை என்று வரும்போது சமரசம் செய்து கொள்கிறார்கள். சின்ன கலைவாணர், வீடு கட்டும் போது வாஸ்து பார்த்து கட்டுக்கிறார். புரட்சி தமிழன், மகன் திருமணத்தை சம்பிரதாயப்படி பண்ண போகிறாராம். குடும்பத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமல்லவா?

இப்படி சமரசம் செய்து கொண்டு, பகுத்தறிவை பேச்சில் மட்டும் கொண்டு வாழ்பவர்கள் தான், சந்தொஷமாக இருக்கிறார்கள். வேலு பிரபாகரன் போன்றவர்கள் கஷ்டப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். உபயோகம் இருக்குமா? தெரியவில்லை.

நம்மவர்களின் பகுத்தறிவு நகைச்சுவைக்குரியது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும், பாவம், புண்ணியம் என்று சொன்னால் சிரிப்பார்கள். அதுவே, ஏதாவது ஒரு வெள்ளைக்கார துரை சொன்னதாக கூறி “Chaos theory”, “Butterfly Effect” என்று சொன்னால், எதை வேண்டுமானாலும் நம்பி “ஆ” என்று வாயைப் பிளப்பார்கள்.

உலக புகழ் பெற்ற அறிஞர் டேல் கார்னெகி தன்னுடைய “How to Stop Worrying and Start Living” புத்தகத்தில் கவலையைக் களைய உற்ற வழியாக இறை வழிப்பாடை கூறிப்பிட்டுள்ளார். யாருக்கும் இடையுறு தராத இறை வழிப்பாடானாலும் அதை விமர்சிக்கும் பகுத்தறிவாளர்கள் கண்களுக்கு, தங்கள் தலைவர்களின் சுயநல, லஞ்ச, அதிகார துஷ்பிரயோக செயல்கள் தெரிவதில்லை. உண்மையிலேயே இவர்களுக்கு பகுத்தறிவு இருந்தால், வேண்டாம், அறிவு இருந்தால், தங்கள் தலைவர் நல்லது செய்யும்போது எப்படி புகழ்கிறார்களோ, அதேப்போல் தவறு செய்யும் போது அதையும் விமர்சிக்க வேண்டும். சும்மா சப்பைக்கட்டு கட்டினால், அப்புறம் இவர்களுக்கும் போலி சாமியார்களுக்கும் என்ன வித்தியாசம்?இன்றைய சூழலில் மத நம்பிக்கையுடன் வாழ்ந்து வரும் மேல்தட்டு மக்களிடமும், வசதியானவர்களிடமும் பகுத்தறிவு பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. இவர்கள் இந்த நிலையை அடைத்திருக்கிறார்கள் என்றால், அதற்கேற்ற திறமையும், உழைப்பும் இவர்களிடம் இருந்திருக்கும். அது குறித்த நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் வேறு வேறு அளவில் இருக்கும்.

வலையில் பகுத்தறிவு பேசுபவர்களின் எழுத்து இவர்களை மட்டுமே அடையும். அடைந்து என்ன பயம்? உண்மையில் இதுக்குறித்த புரிதல் தேவைப்படுவது, கிராமங்களில் அறியாமையில் வாழும் மக்களுக்கு. அவர்கள் தாம், தீண்டாமை, சாதி கலவரம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள். பகுத்தறிவு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டியது அங்குதான்.

நாம் வலையில் வெட்டியாக, பொழுதுபோக்கிற்காக பகுத்தறிவு குறித்து செலவிடும் சக்தியை ஆக்கபூர்வமாக்க வேண்டும் என்பதே என் விருப்பமாகும். இது சாத்தியமா?

23 comments:

உண்மைத்தமிழன் said...

//வலையில் பகுத்தறிவு பேசுபவர்களின் எழுத்து இவர்களை மட்டுமே அடையும்.//

தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளும் சிறுவர்கள்.. வேறென்ன..?

கிரி said...

ஆஹா!! சரவணகுமரன் என்ன பொங்கி எழுதுட்டீங்க :-)))

ambi said...

மிக நேர்த்தியான பதிவு.

ரொம்ப நாளா மனசுல இருந்தத "பெரியப்பா மனசுகுள்ள ஆயிரம் இருக்கு!னு கொட்டிடீங்க போல. :)

சரவணகுமரன் said...

வருகைக்கு நன்றி, உண்மைத்தமிழன்.

சரவணகுமரன் said...

//ஆஹா!! சரவணகுமரன் என்ன பொங்கி எழுதுட்டீங்க :-)))

பொங்க எல்லாம் இல்ல. சும்மா தோணுனத சொல்லியிருக்கேன்... அவ்ளோ தான்...

நன்றி கிரி...

சரவணகுமரன் said...

//மிக நேர்த்தியான பதிவு.

நன்றி...

சரவணகுமரன் said...

//ரொம்ப நாளா மனசுல இருந்தத "பெரியப்பா மனசுகுள்ள ஆயிரம் இருக்கு!னு கொட்டிடீங்க போல. :)

:). ஏன் உங்களுக்கும் இந்த மாதிரி ஏதும் இருந்ததா?

கருப்பன் (A) Sundar said...

நல்ல கருத்து சூப்பரா சொல்லியிருக்கீங்க!

சரவணகுமரன் said...

மிக்க நன்றி கருப்பன் அவர்களே...

சரவணகுமார் said...

///பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொள்ளும் கமல், கடவுளை நம்பும்விதமாக தசாவதாரம் படம் எடுக்கிறார். சாதி பெருமைக் கொள்ளும் விதமாக தேவர் மகன் படம் எடுக்கிறார்./////
படித்ததும் ஒரு சம்பவம் ஞாபத்துக்கு வந்தது.தேவர் மகன் படம் வந்ததும் இப்படித்தான் நண்பர்கள் குழாமில் தேவர் பெருமையை உயர்த்திக்காட்டி படம் எடுத்திருக்கிறார் என பேசிக்கொண்டிருந்தார்கள்.அப்போது அதில் ஒரு நண்பர் ( தேவர் வகுப்பை சேர்ந்தவர்) கமலை கன்னா பின்னாவென்று திட்டிவிட்டு சொன்னார்" அந்தப் பாப்பான் தேவனை எங்கையா பெருமைப் படுற மாதிரி எடுத்துருக்கான்..லண்டனே போய் படிச்சாலும் தேவன் கடைசில அருவாளைத்தான் தூக்குவான் 'அப்படீன்னு இல்ல காட்டியிருக்கான் அப்புடீன்னாரு..ஒரே விஷயத்தை எப்படியேல்லாம் யோசிக்கிறாங்கப்பா அப்படீன்னு சிரித்தோம் அன்று :)

சரவணகுமரன் said...

//ஒரே விஷயத்தை எப்படியேல்லாம் யோசிக்கிறாங்கப்பா

உண்மைதான்...

ஒரு விஷயம். என்னதான் உங்கள் நண்பர் கமலை மரியாதை குறைவாக கூறியிருந்தாலும், நீங்கள் உங்கள் நண்பருக்கு கொடுத்திருக்கும் மரியாதையை, இங்கே பின்னுட்டத்தில் அவருக்கும் கொடுத்திருக்கலாம்.

சரவணகுமார் said...

///என்னதான் உங்கள் நண்பர் கமலை மரியாதை குறைவாக கூறியிருந்தாலும், நீங்கள் உங்கள் நண்பருக்கு கொடுத்திருக்கும் மரியாதையை, இங்கே பின்னுட்டத்தில் அவருக்கும் கொடுத்திருக்கலாம்.///

என் நண்பர் எப்படி சொன்னாரோ அப்படியே சொன்னேன். இதில் என் கருத்தோ அல்லது மரியாதை கொடுக்கல் வாங்கலோ எதுவும் பிரதிபலிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் :)

Nair said...

//படப்பிடிப்பில் முப்பது நிமிடம் காத்திருந்து தேங்காய் உடைத்தவுடன் தான் கேமராவை ஆன் செய்ய வேண்டும் என்றவரிடம் சண்டை.//

ரொம்ப சரி. தேங்காய் உடைத்தால்தான் படம் நன்றாக வரும்; ஓடும்; என்பதெல்லாம் மூடநம்பிக்கை மட்டுமல்ல; அப்படத்தில் தம்
உயிரைக்கொடுத்து உழைத்தொரை அவமானப்படுத்துவதாகும்.

இதில் என்ன குற்றம் ?

//படப்பிடிப்பு சாதனம் மேல் கால் வைத்திருந்த போது, காலை எடுக்க சொன்னவரிடம் வாக்குவாதம்//

இதுவும் சரிதான். பொருட்கள் உயிரற்றவை. அவைகளுக்கு உணர்ச்சியும் உயிரும் இருப்பதாக கற்பனை பண்ணி தொழுவது, ஆன்மிகவாதிகள் கண்ட ஒன்று. அதை een இவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்?

//பகுத்தறிவாளர் என்று சொல்லிக்கொள்ளும் கமல், கடவுளை நம்பும் விதமாக தசாவதாரம் படம் எடுக்கிறார். சாதி பெருமைக் கொள்ளும் விதமாக தேவர் மகன் படம் எடுக்கிறார்.//

கமல் ஒரு பகுத்தறிவாளர் என்பதே ஒரு சர்ச்சைக்குரிய விஷயம். அவர் தன் படத்தில் என்னென்ன செய்து வருகிறார் என்பதும் சர்ச்சைக்குரிய விஷயம். அவர் பணத்திற்காக எதுவும் செய்வார் என்பதே உண்மை. அவர் படங்கள் உங்களுக்கு சரியாதத் தெரியலாம். எல்லோருக்குமா ? வலைபதிவகளிலேயே ஒருவர் விரும்ப, ஒருவர் விரும்பவில்லையே? இங்கு சரவணக்குமார் எழுதியதைப் போல சாதியை ஒழிக்க போறேன் என்று சொல்லி சாதியைத் துக்குகிர்ரரா இல்லை, கிண்டல் பண்ணுகிறாரா?

உங்களுக்கு எது சரியோ அது எல்லாருக்குமா? மற்றவருக்கு எது சரியோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்விர்களா?


//திராவிடர் கழகம் ஒரு வட்டி கடை. o இரவு பகலாக ஊர் ஊராக பிரச்சாரம் செய்த தன்னிடம் வீட்டை வட்டிக்காக பிடுங்கி கொண்டது//

இது அவர் சொந்தக் கருத்து. இதற்கும் உங்கள் தலைப்புக்கும் என்ன தொடர்பு?

//காதல் அரங்கம் என்று ஒரு படம் எடுத்து சென்சார் போர்டு, டெல்லி ட்ரிபனல் தணிக்கை போன்றவற்றால் படம் வெளியிட முடியாமல் போனது. (படத்தில் கதாநாயகி மேலாடை அணியாமல் வரும் காட்சி ஒன்று உள்ளதாம்.) அடுத்தது சுப்ரிம் கோர்ட் போக போகிறாராம்.//

ஐயோ...இங்கும் பழைமை வாதமா சாமி? கவர்ச்சி என்பது இடத்துக்கு இடம், ஆளுக்கு ஆள் வேறுபடும். கதாநாயகி மேலாடை இல்லாமல்தான் இராஜ்கபூர் படத்தில் குளித்தார். இல்லையா?

In 40s to 60s, anything that revealed stomach or a bosom, or a plunging neckline, was censored. A kiss on the cheek took TN by storm.

Not so now. What was sexy will be decied by time and circumstances.

‘’காட்சி ஒன்று உள்ளதாம்!” என்று எழுதுகிறீர்கள். இல்லையா?
ஆக. படத்தை நீங்களே பார்க்கவில்லை. எல்லாம் கற்பனை. அதற்குள் தூக்கு thandaniya?

Please see the film first - any film, for that matter. Only then, you may pass judgement on it.

Nair said...

Dear blogger!

I agree with you that there is a general hypocrisy among those who tout the so-called pakuththarivu for their own benefit.

But I dont agree with you at all that the rationalists of TN have not penetrated into Tamil society positively.

It is due to their efforts that the malefactors, who exploit the religions, for their own benefit, by spreading superstitions and women enslavement etc. are now underground.

Criticism, harsh ones, have gone a long way in making TN a better place insofar as the depradations of such men who abuse religion is concerned.

TN need rationlists always. If not, you will burn your own women on funeral pyre and then, build a temple for her! You did many such things before rationalists started talking loudly!! Remember that!!

You should be able to differentiate the hypocrisy of a few politicians or others from the positive effects of rationists.

But I dont find any evidence in your posting here that you do differentiate. There is a general tendency in you to tar all with the same brush; and, to go all along with the socalled anmikavaathis blindfold.

To me, both are vermins of society - the ones who abuse rationalism and the ones who abuse religion.

What about you?

சரவணகுமரன் said...

நாயர் அவர்களே, நீண்ட பின்னுட்டத்திற்கு நன்றி...

இப்பதிவு, 'இன்று' பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிகொள்பவர்களின் நிலையை பற்றி மட்டுமே அன்றி வேறொன்றும் இல்லை...

பகுத்தறிவால் நாட்டிற்க்கு விளைந்த நன்மைகளை குறித்த உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். அதற்காக, தமிழகத்தில் மூடநம்பிக்கை, தீண்டாமை போன்றவை அறவே அழிந்தது என்று கூறிவிட முடியாது. இப்பொழுது பகுத்தறிவாளர்கள் என்று கூறிகொள்பவர்களால், இதில் ஏதேனும் முன்னேற்றம் காண முடிந்ததா?

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Well said..Very well said.

சரவணகுமரன் said...

நன்றி அறிவன்...

குரங்கு said...

நல்ல வாதம்... :)

சரவணகுமரன் said...

நன்றி குரங்கு...

நல்லா இருக்குங்க உங்க பேரு... :-)

Nair said...

//பகுத்தறிவால் நாட்டிற்க்கு விளைந்த நன்மைகளை குறித்த உங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். அதற்காக, தமிழகத்தில் மூடநம்பிக்கை, தீண்டாமை போன்றவை அறவே அழிந்தது என்று கூறிவிட முடியாது. இப்பொழுது பகுத்தறிவாளர்கள் என்று கூறிகொள்பவர்களால், இதில் ஏதேனும் முன்னேற்றம் காண முடிந்ததா?//

Superstitions cannot be abolished overnight by rationalists. It is the same story everywhere, not only in TN, including the West. The function of rationalists is to remind people of the uselessness and waste of life in such superstitions; and how such things spoil our life, denting our scientific temper. Beyond that, it is for people to decide.

Mr Saravanan, if you tell a group of amman devotees that eating man soru is unhygienic and will spoil their health and so, they should give up their superstitious belief, and if they don’t listen to you, can I say, your effort is futile and you should shut up your mouth? I cant. You have done your conscious and moral duty of reminding people of their folly. If people continue to carry on with such things, the rationalists are not to blame; and, the rationlaists need not be told that their efforts are futile and so, they should shut up. Rather, they should go on and on. People with social conscience should stand up and speak up! Always.

Untouchability is a different matter. It is not to be treated as a superstition. It is a social evil. To treat a fellow human being as lower to you by birth is a social evil. Its survival or removal has nothing to do with rationalists. Rationalists of TN variety did raise their voice, but they were not alone in such protest. Vaithyanathar was not a rationalist. But he led alayapravesham. Didn’t he?

You are not very correct, dear friend. Today, untouchability exists only in a few packets of Tamilnadu, not in the whole state.

Decades ago, dalits were disallowed to enter temples. Today they walk in free. Decades ago, in Travancore state that included upto Tirunelveli district, dalits women should not cover their bosom (maarbu). Today, the story is different. Reservations have brought a new life of dignity and honour to dalits. Dalits once bowed their heads to all and sundry without anybody asking them to do so. Today, can you ask them to salute you and say, ‘ayaa saami’? No. Such change was caused by the reformist leaders.

All such improvements resulted in dilution of the social evil, untouchablity. The thinkers and social reformers, who, incidentally included the rationalists (I mean, their role is one among the many), were the reasons for such social improvement. If not, who were responsible, according to you? The believers in varnashradharma? The religious men, to whom your support apparently goes profusely, stood in the way of removal of untouchability. Please remember that. It is for social reformers (who included the rationalists also) and not to your religious orthodoxy, the dalits should be beholden for ever!

சரவணகுமரன் said...

உண்மைதான்... ஒரு நாளில் எதுவும் நடந்துவிட போவதில்லை... கடந்த காலங்களில் இருந்து நிறைய உதாரணம் கூறி இருக்கிறீர்கள். நிகழ்காலத்தில், சுயநலம் பார்க்காமல், லாபக்கணக்கு பார்க்காமல், பகுத்தறிவோடு வாழ்ந்து கொண்டு, பகுத்தறிவு பிரச்சாரம் செய்பவரை பற்றி சொல்லுங்கள். அப்படி இல்லாதவர்களை பற்றியது தான் இப்பதிவு.

நீங்கள் திரும்ப திரும்ப பகுத்தறிவால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை எடுத்துரைத்துள்ளீர்கள். அதற்க்கு காரணமானவர்களை போல் இன்றுள்ளவர்கள் இருக்கிறார்களா? என்பதே என் கேள்வி. நான் பதிவில் குறிப்பிட்டதுபோல், இன்று பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிகொள்பவர்கள் ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பம். நீங்கள் அவ்வாறு இருப்பதாக உங்களை கருதினால், உங்களுக்கு என் வாழ்த்துக்கள். உங்களை பற்றியதல்ல இப்பதிவு.

Nair said...

Thanks for your quick response. If such hypocrits are your target, let me not interefere.

By the way, my dear friend, I am not a rationalist as the word has come to mean in Tamilnadu.

I am a believer in God; and many other things concerning the worship of God, taught by the spiritual achaaryaas.

Thanks and more power to your pen or keyboard!

சரவணகுமரன் said...

//Thanks and more power to your pen or keyboard!

நன்றி நண்பரே!!! :-)