Monday, April 6, 2009

அயன் - ஒ.கே. Fine

படம் ஆரம்பத்துலேயே இது யார் படம்ன்னு பிரச்சினை. மெய்யப்ப செட்டியாரை காட்டுறாங்க. சன் பிக்சர்ஸ்ன்னு போடுறாங்க. பிறகு ஏவிஎம். அப்பால, கலாநிதி மாறன். ஒரு வழியா முடிவுல ஏவிஎம் மின் அயன். இவ்ளோ நேரமா எழுத்து போடுறது?

கடத்தல் கதை. புத்திசாலித்தனமா பல காட்சிகள். எவ்ளோ செலவு பண்ணி எடுத்தாங்களோ தெரியலை. ஆனா, நல்லா செலவு பண்ணி எடுத்த மாதிரி இருக்கு. ஆரம்ப காட்சிகள் ஜேம்ஸ் பாண்ட், ஜாக்கிசான் படங்களுக்கு நிகரானவை. முதல் பாதியில் இருந்த ஃபேஸ், இரண்டாம் பாதியில் இருந்த மாதிரி இல்லை.

கே.வி. ஆனந்தின் ஷங்கர் சகவாசம் படமெங்கும் தெரிகிறது. கடைசி காட்சியில் ஷங்கரையே கிண்டல் செய்திருக்கிறார். ஒளிப்பதிவு அவர் இல்லையென்றாலும், அவர் ஸ்டைலிலே இருக்கிறது. அருமை. அவரும் சுபாவுக்கும் சின்ன மைக், கெமிஸ்டரி இதிலெல்லாம் ஆர்வம் அதிகம் போல. கனா கண்டேனிலும் இதை எல்லாம் பயன்படுத்தியிருந்தார்கள்.

சூர்யா படமெங்கும் துள்ளி திரிகிறார். பாடல் காட்சிகளில் கொடுக்கும் எக்ஸ்பிரெஷன் எல்லாம் சலித்துவிடும் போல் உள்ளது. டிவியில் அவர் பிரமொட் பண்ணும் ஏர்செல், டிவிஎஸ், பெப்ஸி எல்லாவற்றையும் இதில் விளம்பரப்படுத்துகிறார். நல்லவேளை, ஜோதிகாவின் இதயம் நல்லெண்ணையை விளம்பரப்படுத்தவில்லை. கொடுக்குற காசுக்கு மேல கூவுகிறார். படத்தில் அவர் பெரிய புத்திசாலி, படிப்பாளி, கில்லி மாதிரி பறக்கிறார். நல்லா ஸ்கேட்ச் போடுகிறார். ஆனால், ரொம்ப அல்பமாக லவ் பண்ண ஆரம்பித்து விடுகிறார். வில்லனை மாட்டி விடுறதுக்காக ஒரு அப்பாவி பொண்ணு நாசமா போறத, ஹீரோ ஒண்ணும் பண்ணாம பார்க்கிறார் என்பது சறுக்கல்.

தமன்னா வழக்கமான ஹீரோயின் வேடத்தில். கொஞ்சம் லூஸ் போல நடிக்கிறார். பக்கத்து சீட் குடிமகன் கமெண்ட், ‘என்னபா, பல்லி மாரி கீது இந்த பொண்ணு’. கிரி வீரபாகு போல அவருக்கு அண்ணன், நம்ம நண்டு. இவருக்கு நல்ல வெயிட்டான கேரக்டர்.

படத்தின் பிளஸ் ஆக்‌ஷன் காட்சிகள், லொக்கெஷன். காங்கோ தெருக்களில் நடக்கும் முதல் சண்டைக்காட்சியில் சூர்யா மற்றும் சண்டை குழுவினரின் உழைப்பு அபாரம். ஆக்‌ஷன் ரசிகர்கள் விரும்புவார்கள்.

எவ்வளவு கடத்தல்கள், அதில் எத்தனை நுணுக்கங்கள் என்று யோசிக்க வைக்கும் கதைக்களம்.

பாடல்கள் பற்றி ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கிறேன்.

பிரபு குணச்சித்திர வேடத்தில் நடிக்கும் படங்களின் வெற்றி பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன். சினிமாகாரர்களே, இந்த செண்டிமெண்டை கவனிங்க. தொடர்கிறது வெற்றி.

8 comments:

Senthil said...

good review

dharshini said...

நல்ல விளக்கம்.:)
ஜோ தான் பிடிக்கும்னு சூர்யாசொல்லும் போதுதான் ரொம்ப விசில் பறந்தது...

durai said...

surya pathi thappa sollathenga avrukku kodutha velaiyai correct ah panniyirukkar

சரவணகுமரன் said...

நன்றி தர்ஷிணி

சரவணகுமரன் said...

துரை, தப்பா ஒண்ணும் சொல்லலீங்க... பார்த்தத, தோணுனத சொன்னேன்...

கிரி said...

//டிவியில் அவர் பிரமொட் பண்ணும் ஏர்டெல்//

ஏர்செல் :-)

//ஹீரோயின் வேடத்தில். கொஞ்சம் லூஸ் போல நடிக்கிறார்//

அப்படி இருந்தால் தானே தமிழ் ஹீரோயின்

//என்னபா, பல்லி மாரி கீது இந்த பொண்ணு’//

குஷ்பூ ரசிகர் போல

சரவணகுமரன் said...

திருத்தி விட்டேன் கிரி...

நன்றி கிரி...

Unknown said...

Im still waiting to see this film.