Wednesday, June 24, 2009

இந்திய ரயில்வேக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்!

நான் முன்பொருமுறை இப்படி புலம்பி இருந்தேன்...

---

ரயிலில் சைடில் மூன்று பெர்த் வைத்துள்ளார்கள். எந்த கிறுக்கன் ஐடியா கொடுத்தானோ? இப்போது, அந்த திட்டம் வாபஸ் என்றார்கள். ஆனால், இன்னமும் இருக்க தான் செய்கிறது.

மேலே உள்ள இரண்டு பெர்த்களிலும், ஏறி உட்கார்ந்து படுக்க முடியாது. படுத்தவாறே ஏற வேண்டும். படுத்தவாறே இறங்க வேண்டும். இதற்கென்றே தனியாக பிராக்டிஸ் செய்து விட்டு பயணம் செய்ய வேண்டும்.

சின்ன குழந்தைகள், இளைத்த வாலிபர்கள் - இவர்களை தவிர வேறு யாராலும் சுலபமாக இதில் ஏறி படுக்க முடியாது. நான் பார்த்த வயதானவர்கள், பெண்கள் ரொம்ப சிரமப்பட்டு கொண்டிருந்தார்கள். ரயிலில் அதிகம் பயணம் செய்பவர்கள், இவர்கள் தான்.

இதிலும் மேல் பெர்த்தில் படுக்கிறவர்கள், பேனுக்கு இணையாக படுக்க வேண்டும். கொஞ்சம் கூட காத்து வராது. அடிக்குற வெக்கையில் தூங்கவும் முடியாது. இறங்கவும் முடியாது. சாவுங்கடா! என்பது போல் ஒரு சித்திரவதை வடிவமைப்பு.

---

நேற்றைய தினமலரில் வந்த செய்தி...


எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜன்னலோரம் கூடுதலாக பொருத்தப்பட்ட மூன்றாவது படுக்கையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வந்ததால், வரும் ஜூலை 13ம் தேதியுடன் இப்படுக்கை அப்புறப்படுத்தப்படுகிறது. இப்படுக்கைக்கான முன்பதிவும் ரத்து செய்யப்படுகிறது.

ரயில் போக்குவரத்தில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 2007ம் ஆண்டிலிருந்து குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இரண்டாம் வகுப்பு (தூங்கும் வசதி) மற்றும் ஏ.சி., மூன்றாம் வகுப்பு பெட்டிகளில் ஜன்னலோரம் மேல் படுக்கைக்கும், கீழ் படுக்கைக்கும் இடையே கூடுதலாக மூன்றாவது படுக்கை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியால் ஒரு பெட்டியில் 9 படுக்கைகள் அதிகமானது. ரயில்வே நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைத்தது. ஜன்னலோரம் மையப் பகுதியில் பொருத்தப்பட்ட இந்த படுக்கைக்கும் மேல் படுக்கைக்கும், இடையே இடைவெளி 1.5 அடி உயரம் மட்டுமே இருந்ததால் பயணிகள் இந்த படுக்கையிலும், இதற்கு கீழ் உள்ள படுக்கையிலும் அமர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாயினர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாவது கூடுதல் படுக்கையை அப்புறப்படுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

லாலு எவ்ளோ நல்லது பண்ணி இருந்தாலும், இந்த விஷயத்துல மக்கள் கொடுத்த சாபத்துனால தான், திரும்ப ரயில்வே அமைச்சர் ஆகவில்லையோ?

எது எப்படியோ, ரயில்வேக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்...

நன்றி : தினமலர்

8 comments:

கிரி said...

//லாலு எவ்ளோ நல்லது பண்ணி இருந்தாலும், இந்த விஷயத்துல மக்கள் கொடுத்த சாபத்துனால தான், திரும்ப ரயில்வே அமைச்சர் ஆகவில்லையோ?//

:-))

அன்புடன் அருணா said...

எடுததிட்டாங்களா???
ரயில்வேக்கு ஒரு பெரிய தேங்க்ஸ்...
இதுவும்.....படியுங்க....பெர்த் பற்றிதான்!
http://naanirakkappokiraen-aruna.blogspot.com/2009/06/3tte.html

சரவணகுமரன் said...

வாங்க கிரி...

சரவணகுமரன் said...

அருணா, ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கீங்க...

இளைய கவி said...

உங்க மூலமா நானும் தேங்க்ஸ் பா

pudugaithendral said...

நன்றி சொல்ல மனசு வல்லீங்க.

சைட் மிடில் பர்த்தை எடுத்தவங்க சை அப்பர் பர்த்தின் உயரத்தை கொஞ்சம் குறைக்க மறந்துட்டாங்க.

இன்னமும் சைட் அப்பர் பர்த்தில் ஏறி படுப்பது தண்டனையாத்தான் இருக்கு.

அதையும் சரி செய்யட்டும் அப்புறம் சொல்றேன் தாங்கஸ்

சரவணகுமரன் said...

நன்றி இளையகவி

சரவணகுமரன் said...

//அதையும் சரி செய்யட்டும் அப்புறம் சொல்றேன் தாங்கஸ்//

ஒகே ஒகே :-)