Tuesday, June 23, 2009

மழை பொழிய வைத்த இளையராஜா - மகேந்திரன்

அக்னி நட்சத்திரத்தில் மழை கொண்டு வந்த இளையராஜா
-மகேந்திரன்



1988 ல் வெளியாகி சிறந்த திரைப்படத்திற்கான மாநில விருது பெற்ற "அக்னி நட்சத்திரம்", ராஜாவின் இசையில் இன்னுமொரு மைல்கல். மிகச்சிறந்த குறிப்பிடும்படியான இசையும் பாடல்களும்.

பெண்குரலில் தனிப்பாடல்கள் அருகிவிட்ட பொழுதுகளில், தைரியமாக ஆறு பாடல்களில், மூன்று பெண்குரல் தனிப்பாடல்களை (Female Solos) வைத்தார். ஒரு பூங்காவனம் புதுமணம், நின்னுக்கோரி வரணும், ரோஜாப்பூ ஆடிவந்தது - இவை மூன்றும். ஜேசுதாஸ், சித்ராவின் வா வா அன்பே அன்பே, எப்போதுமே என் விருப்ப எண்களில் ஒன்று. மற்றொன்று.. ஆமாம்.. அதேதான்..

தூங்காத விழிகள் ரெண்டு.. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று..
செம்பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்,
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது..


படிக்கும் போதே தெரிந்திருக்கும், வாலி எழுதியதென்று... ஆறு பாடல்களுமே வாலியின்
கைவண்ணம்..

பாடல் பதிவு ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் நிகழ்ந்தது. பாடல் அமிர்தவர்ஷினி என்ற ராகத்தை அடிப்படையாக கொண்டது. மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகமது. முறையாக பாடினால் மட்டுமே!

மாதிரிப்பதிவை (Track) கேட்டவுடனேயே, ஜேசுதாசும் ஜானகியும் அமிர்தவர்ஷினியை கண்டு சிரித்துக்கொண்டு ராஜாவை கேலிசெய்தனராம். சுட்டெரிக்கும் வெயிலில் இதைப்பாட வைக்கிறாரே என்று.

"மழை வரலன்னா, எங்களைத் திட்டாதீங்க" என்று கூட சொன்னனராம். பாடல் பதிவும் முடிந்தது. பதிவரங்கை விட்டு வெளியே வருகையில் எல்லோருக்குமே இன்ப அதிர்ச்சி. யாரும் வீட்டுக்கு கிளம்ப முடியாத வகையில் கனத்த மழை, யாருமே எதிர்பார்த்திருக்காத மே மாதத்தின் ஒரு நாளில். நம்பமுடியவில்லை அல்லவா?

இது, எஸ்.ஜானகி ஒரு நேர்காணலில் சொன்னது. தற்செயலான நிகழ்வு தான் எனினும், கேட்கும் போது மிகுந்த ருசியாயிருக்கிறது அல்லவா?...

அடுத்தமுறை கேட்க நேர்கையில் இதை நினைத்துக்கொள்ளுங்கள்...

"ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ?.."

நானில்லைங்க.. வாலி..வாலி..!!!

-மகேந்திரன்




இப்பக்கூட கேளுங்க... மழை பெஞ்சா கம்பெனி பொறுப்பல்ல... :-)

17 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாட்டாலே புத்தி சொன்னார்

பாட்டாலே பக்தி சொன்னார்

பாட்டுக்கு நான் பாடுபட்டேன் ‍_அந்த

பாட்டுக்கள் பல விதம் தான்

‍_ இளையராஜா

கமெண்டுக்கு நான் பாடுபட்டேன்

_ ஸ்டார்ஜன்

குடுகுடுப்பை said...

மறக்க முடியாத இசை பாடல்கள். வைரமுத்துவும் இளையராஜாவும் பிரிந்த முதல் படம் என நினைக்கிறேன்.

SurveySan said...

nice :)

நரேஷ் said...

நேத்து இரவு 11 மணிக்குதான் K டிவியில இந்தப் படம் போட்டான்...முழுக்க ஒரு முறை திரும்பி பார்த்தேன்...

கலையில இப்படி ஒரு பதிவு, சொல்லியிருக்கற விஷயங்கள் நல்லா சுவையா இருக்கு...

நாடோடி இலக்கியன் said...

அக்னி நட்சத்திரத்தில் அத்தனையும் அற்புதமான பாடல்கள்.படமாக்கிய விதமும் அருமையாக இருக்கும்.
"தூங்காத விழிகள் ரெண்டு" பாட்டில் காதல் ரசம் சொட்டும் அற்புதமான வரிகளை குறிப்பிட்டதற்கு ஒரு சபாஷ்.
நானும் நேற்று கே டீவியில் இந்த படத்தை முழுதாகப் பார்த்தேன்.

சரவணகுமரன் said...

//கமெண்டுக்கு நான் பாடுபட்டேன்//

:-)

வாங்க ஸ்டார்ஜன்

சரவணகுமரன் said...

நன்றி குடுகுடுப்பை

சரவணகுமரன் said...

நன்றி சர்வேசன்

சரவணகுமரன் said...

ஓ! நேத்து நைட் போட்டாங்களா? தெரியாம போச்சே, நரேஷ்!

சரவணகுமரன் said...

நன்றி நாடோடி இலக்கியன்

வினோத் கெளதம் said...

அருமையான பதிவு நண்பா..

Anonymous said...

நல்ல பதிவு நட்பு..

Anonymous said...

http://englishkaran.blogspot.com/2009_02_01_archive.html

Read this post when u have time.

சரவணகுமரன் said...

நன்றி வினோத் கௌதம்

சரவணகுமரன் said...

நன்றி இங்கிலீஷ்காரன்...

உங்க பதிவு அருமை...

Hindu Marriages In India said...

நல்ல அருமையான பதிவு

Chitra said...

அறுவடைநாள் பாட்டு (ஒலைக்குறுத்துஒலை)beemp3-ல் கிடைக்கிறது. டவுன்லோடு செய்யலாம்.