Friday, June 26, 2009

நாட்டு சரக்கு - உலக கண்டுப்பிடிப்பும் உள்ளூர் கண்டுப்பிடிப்பும்

லண்டனில் இருக்கும் ஹென்றி, இன்றைய தேதிக்கு உலகின் வயதான மனிதர். வயசு அதிகமில்லை. 113 ஆண்டுகள். 16 நாட்கள். இவர் இதுவரை 3 நூற்றாண்டுகள், 6 அரசாட்சிகள், 2 உலக போர்களை பார்த்திருக்கிறார்.

“நீண்ட ஆயுளுக்கு என்ன காரணம்?”

“சிகரெட், விஸ்கி... அப்புறம் பொண்ணுங்க, அடங்காத பொண்ணுங்க”

அட, உண்மையாங்க.

-----

வாஷிங்மெஷின்ல துணியை துவைக்க போட்டா, ஒரு பிரச்சினை. தண்ணி எக்கச்சக்கமா எடுக்கும். அதுக்கு முடிவு கட்ட, புது மாதிரியா ஒரு வாஷிங்மெஷின் கண்டுப்பிடிச்சிருக்காங்க. ஒரு கப் தண்ணி போதுமாம். 90% சதவிகித தண்ணீரை மிச்சம் பிடிக்கலாமாம்.

படிச்சிட்டு நண்பன் கேட்டான்.

“இதே மாதிரி ஒரே கப்புல மப்பு வர ஏதாச்சும் கண்டுபிடிப்பாங்களா?”

-----

ரயில் தண்டவாளத்தை தாண்டலாமா? தாண்டலாமே, இதுல என்ன இருக்குன்னு கேக்குறீங்களா? ஜாக்கிரதை.

அதுக்கு தண்டனை, ஆறு மாதம் வரைக்குமான ஜெயில். இந்திய தண்டவாள வரலாற்றில் முதல் முறையாக இந்த தண்டனையை பெற்றிருப்பவர், மும்பையை சேர்ந்த பிரகாஷ். மேலே கடந்து செல்ல பாலம் இருக்க, குறுக்கு வழியா குறுக்க போயிருக்கார். பிடிச்சு, ஒரு வாரம் ஜெயில வச்சிட்டாங்க.

ரயில் டிக்கெட் எடுக்காம வந்தவுங்க, தண்டவாளத்துல தலை வச்சவுங்க, மறியல் பண்றவுங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வருவீங்க.

----

உத்தரபிரதேச அரசாங்கம், கட்டுமான வேலைகளுக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எல்லாம் ரொம்ப முக்கியமான வேலைகள்.

இதுவரை கன்ஷிராம், மாயாவதி சிலைகளை ஊரு பூரா வைக்க, 7 கோடி செலவு பண்ணியிருக்காங்க. 52 கோடிக்கு மார்பிள்ல யானை சிலை செஞ்சிருக்காங்க. 2008-09 ஆண்டு மட்டும் பெரிய தலைவர்களுக்கு சிலை வைக்க, 194 கோடி. அம்பேத்கர் நினைவு மண்டபத்துக்கு 231 கோடி. அடுத்ததா, 40 சிலைகளை மாயாவதி திறந்து வைக்க போறாங்களாம். அதுல, ஆறு அவுங்க சிலை.

ரொம்ப முக்கியம்...

-----

போன வாரம், கர்நாடக மின் துறை அமைச்சரை சந்திக்க வந்த ஒரு முதலீட்டாளரை, சென்னை ஏர்போர்ட்ல கைது பண்ணிட்டாங்க. ஏன்னா, அவரு தீவிரவாதியாம். பேரு, அப்பாஸி. அல்ஜீராவை சேர்ந்தவர். அந்த நாட்டு ஏர்போர்ட் குண்டு வெடிப்பில் அவரும் குற்றம் சாட்டப்பட்டவராம். சென்னையில ஜெயிலுல வச்சிட்டாங்க. அப்புறம், இண்டர்போல் எச்சரிக்கையை விலக்கிக்கொள்ள, ரிலீஸ் பண்ணிட்டாங்க.

அமைச்சர்கிட்ட ஏன் இப்படின்னு கேட்டா, மின் ஆலை நிறுவ அவரோட டீலிங் நல்லாயிருந்தது. அதான் வர சொன்னோம்ங்கறாரு. கடைசில, சர்ச்சையில இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட அதிகாரியை வேலையை விட்டு தூக்கிட்டாங்க. அவரும், ஒண்ணும் பிரச்சினை இல்லை, நல்லதுன்னு அப்பாஸியோட கம்பெனியில சி.இ.ஓ.வா சேர்ந்துட்டாரு.

இப்ப, தமிழ்நாட்டு கவர்மெண்டோட பேச்சுவார்த்தை நடந்திட்டு இருக்காம் !

-----

ஒரு கோவிலுக்கு வெளியே காத்திருந்தேன். உள்ளே சென்றவர்கள் வெளியே வருவதற்காக. கோவிலுக்கு உள்ளே போகிறவர்கள் எல்லோரும், கதவில் இருந்த ஒரு உலோக வளையத்தை தட்டி கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். ஒருவர் விடாமல் எல்லோரும். பக்கத்தில் வந்த கோவில் ஊழியரிடம் கேட்டேன்.

“ஏங்க, அது என்னதுங்க? ஏன் அதை தட்டணும்?”

“அது கதவு தாழ்பாளுங்க. எவனோ ஒருத்தன் தட்டிட்டு போயிருப்பான். அதை பார்த்துட்டு எல்லோரும் ஆரம்பிச்சுருப்பாங்க.”

4 comments:

வால்பையன் said...

நல்ல செய்தி தொகுப்பு!

ஒரு கப்பில் மப்பு ஏறும் சரக்கு கிடைத்தால் சொல்லவும்!

கோவில் கதவு மேட்டர் எனக்கு பயன்படும்!

சரவணகுமரன் said...

நன்றி வால்பையன் :-)

//கோவில் கதவு மேட்டர் எனக்கு பயன்படும்!//

எதுக்கு?!

தினேஷ் said...

//ஒரு கப்பில் மப்பு ஏறும் சரக்கு கிடைத்தால் சொல்லவும்!//
ஆமா சாமி ஒரு ஆஃப் போட்டாலும் ஏற மாட்டேங்குது ..
போன வாரம் கூட ஒரு லிட்டர் ரெட் லேபிள் ஜானிவாக்கர்3 பேர் சேர்ந்து அடிச்சும் கூட் ஏறாம ஒரு ஆஃப் MC போட்டதுதான் லைட்டா ஒரு எறும்பு கடிச்ச மாதிரி இருந்துச்சு ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

\\\\ ரயில் டிக்கெட் எடுக்காம வந்தவுங்க, தண்டவாளத்துல தலை வச்சவுங்க, மறியல் பண்றவுங்களுக்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில பெரிய இடத்துக்கு வருவீங்க. ////

:-)))

நல்லா இருக்கு

வாங்க இங்கே