Friday, August 7, 2009

நாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி

பெயரை மாற்றுகிறார் அழகிரி. பயப்பட வேண்டாம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும் அவர் பெயரை, டெல்லியில் அமைச்சர்கள் உள்ளிட்ட மற்றவர்கள் அஸகிரி என்று வாசிக்கிறார்களாம். பாருங்க கொடுமைய! தமிழின் பெருமையாம் ழகரம், அழகிரிக்கு கொடுக்கும் சிரமத்தை. அதனால், azhagiri, இனி ஆங்கிலத்தில் alagiri என்றழைக்கப்படுவாராம். இதே கொடுமையை, இவ்ளோ நாள் அனுபவிச்சிட்டு இருந்த மற்றொருவர் - கனிமொஸி... சே... கனிமொழி.

இதுக்கு, ’பதவிக்காக தமிழை சமரசம் செய்து கொண்ட அழகிரி’ன்னு யாராச்சும் கிளம்புவாங்களே?

ழி’க்கு ஆங்கிலத்தில் zhi என்பதற்கு ஏதேனும் காரணம் உண்டா? இப்படி உருவாக்கியவர் யார்?

---

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, ஊத்தங்கரை பக்கமுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன், சேலத்தில் இருந்து வந்த அரசாங்க பேருந்தினால் ஏற்பட்ட ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். ஒரே மகன். பல மாதமாகியும், வெங்கடேசனுக்கு எந்த நஷ்ட ஈடும் கிடைக்கவில்லை.

இதற்காக தொடர்ந்த வழக்கில், இரு ஆண்டுகளுக்கு முன்பு, நீதிமன்றம் வெங்கடேசனுக்கு பணம் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டது. கழகமோ, இன்னமும் வழங்கவில்லை. பார்த்தார் நீதிபதி. வெங்கடேசனிடம் பஸ் ஸ்டாண்ட் போயி, ஒரு பஸ்ஸை எடுத்து செல்லுமாறு கூறிவிட்டார்.

இப்ப, அந்த கவர்மெண்ட் பஸ் வெங்கடேசன் வீட்டு முன்னாடி நிக்குதாம். யாரும் தூக்கிட்டு போயிட கூடாதுன்னு, அது பக்கத்திலேயே சமைச்சு, சாப்பிட்டு அதுலேயே தூங்குறாராம்.

போக்குவரத்து கழகம் மேலயும், நம்மூர் மேலயும் தான் எவ்ளோ நம்பிக்கை?

---


இப்ப சாதாரணமாக காய்ச்சல் வந்தாலோ, இல்ல ஜலதோஷம் வந்தாலோ, பன்றி காய்ச்சலா இருக்குமோன்னு பயப்பட ஆரம்பிச்சிட்டுட்டாங்க. கொஞ்ச நாள் முன்னாடி வரை, 'இது வெளிநாட்டுல தான் இருக்குது' அப்படின்னு வெளிநாடு போறவங்களும், ஏர்போர்ட் போறவங்களும் தான் எச்சரிக்கையா இருந்தாங்க. வித்தியாசமான நோயா இருந்தது. சுகாதாரம் இல்லாத இடங்களுக்கு போனா, மத்த வியாதிகள் வரும். இது கார்ப்பரேட் ஆபிஸ் போனாத்தான் வரும்ங்கற நிலை. இப்ப, நிலை மாறிவிட்டது. நீக்கமற பரவிவிட்டது. யாரோட மெத்தனமோ?

ஆனா, இனியும் பல இடங்களில் மெத்தனமாத்தான் இருக்காங்க. ’ஸ்வென் ப்ளூவா இருக்குமோ? டெஸ்ட் பண்ணுங்க, டாக்டர்?’ன்னு கேட்டா, போயிட்டு நாளைக்கு வாங்கன்னு சொல்றாங்களாம். இந்த நோயினால் இறந்த குழந்தை ரிதாவின் பெற்றோரும், குழந்தையை பரிசோதித்த டாக்டரின் மெத்தனத்தைத்தான் கைக்காட்டுகிறார்கள்.

அதனால, காய்ச்சல், தொண்டை வலி, இருமல், மூக்கு ஒழுகுறது, உடம்பு வலி, தலைவலி, சோர்வு - இதெல்லாம் இருந்தா உஷாரு.

----

பொழுது போகாமல் பாட்டு கேட்க கம்ப்யூட்டர் ஆன் செய்தேன். கேட்பதற்கு பாடல்களை தேர்ந்தெடுத்து கொண்டிருந்தபோது, ஆங்கில எழுத்து வரிசை ஒழுங்கில் தமிழ் படப்பெயர்களை கவனித்தேன். வேடிக்கையாக இருந்தது. பொழுதுபோக்கலாம்ன்னு பாட்டு கேட்க வந்தா, பாட்டு கேட்காமலே பொழுது போச்சு!

அச்சமில்லை அச்சமில்லை - அச்சமுண்டு அச்சமுண்டு
அழகன் - அழகி
சின்ன கவுண்டர் - சின்ன ஜமீன் (சின்ன நாட்டாமை?)
பெரியார் - பெருமாள் (ஆங்கில வரிசைப்படி ரெண்டும் பக்கத்துல)
மிஸ்டர் பாரத் - மிஸ்டர் ரோமியோ (இன்னொரு மிஸ்டர் இருக்கே? கார்த்திக் நடிச்சது...)
ராஜ பார்வை - ராஜாவின் பார்வையிலே
ரெண்டு - ரெண்டு பேர்
ரோஜா - ரோஜாக்கூட்டம்
எங்க ஊரு பாட்டுக்காரன் - எங்க ஊரு காவல்காரன் (இதுல ’எங்க ஊரு’ ’காரன்’, இதெல்லாம் ராமராஜனோட ட்ரெட்மார்க் டைட்டில் பாகங்கள்)
நான் அடிமை இல்லை - நான் அவன் இல்லை (ஹா ஹா ஹா)

இன்னும் சில பெயர்களை பார்த்தால் காமெடியா இருந்தது. சண்டைக்கோழி, குருவி, சேவல்... இனி காக்கா, வாத்து, காடை, கௌதாரி எல்லாம் வருமோ? அப்புறம் இதுல காடை, கௌதாரியை எல்லாம் சாப்பாட்டு டேபிள்ல மட்டும் தான் பார்த்திருக்கேன்.

---

ரொம்ப நாளா பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்குற நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது,

“ஒரு பொண்ணும் சரியா அமைய மாட்டேங்குது”

”நீ நிறைய கண்டிசன்ஸ் போட்டு இருப்ப?”

“நிறைய இல்லை. ஒண்ணே ஒண்ணுத்தான்.”

“என்ன?”

“பார்க்குறது பொண்ணா இருக்கணும். அவ்ளோத்தான்”

---

கோர்ட் கொடுக்கும் தீர்ப்புக்கள் வர வர சுவாரஸ்யமாகவும், ஓவராகவும் இருப்பதாக ’மக்கள்’ பேசிக்கிறாங்க (நீதிமன்ற தீர்ப்புக்கு கருத்து சொல்ல கூடாதாம்ல!).

ஆண் ஆணை திருமணம் செய்து கொள்ளலாம். பெண் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம். அப்புறம், திருமணமான பிறகு தாலி அவசியம் இல்லை. கழட்டி ஆணியில் மாட்டி கொள்ளலாம். சேர்ந்து பல ஆண்டுகள் வாழ்ந்தாலே, திருமணமானதாக கருதி கொள்ளலாம். மருமகளை மாமியார் எட்டி உதைப்பது கொடுமை இல்லை. இப்படி ஒரே பரபரப்பு தீர்ப்புகள்.

நீதிமன்றங்கள் ‘பார்ம்’ல இருப்பதாக தோன்றுகிறது.


.

9 comments:

Raju said...

\\இதுக்கு, ’பதவிக்காக தமிழை சமரசம் செய்து கொண்ட அழகிரி’ன்னு யாராச்சும் கிளம்புவாங்களே?\\

தப்பு ஒன்னுமில்லை. அப்புடிப்பார்த்தா, தமிழை ஆங்கிலத்தில் எழுதும்பாது "Tamizh" ன்னுதானே எழுதனும்..
ஆனா, நம்ம இப்பவும் "Tamil" ன்னுதானே எழுதறோம். இதுக்கு என்ன சொல்ரீங்க..?

\\பெரியார் - பெருமாள் (ஆங்கில வரிசைப்படி ரெண்டும் பக்கத்துல)\\

இது நகைமுரண்..!

\\“பார்க்குறது பொண்ணா இருக்கணும். அவ்ளோத்தான்”\\

யோவ்..அவனா நீயி..?
:)

Anonymous said...

Kalakkal Boss

Anonymous said...

Welcome back :)
-arthi

சரவணகுமரன் said...

வாங்க டக்ளஸ்...

//ஆனா, நம்ம இப்பவும் "Tamil" ன்னுதானே எழுதறோம். இதுக்கு என்ன சொல்ரீங்க..?//

நான் ஒண்ணும் சொல்லலீங்க.. :-)

புரிஞ்சா சரி. அவ்வளவுதான்.

சரவணகுமரன் said...

Done! Arthi...

Unknown said...

நான் அடிமை இல்லை - நான் அவன் இல்லை (ஹா ஹா ஹா)
ithu romba nalla irukku.......

சரவணகுமரன் said...

நன்றி sub

நரேஷ் said...

நல்லாயிருக்கு!!!

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்