Friday, September 18, 2009

உன்னைப்போல் ஒருவன்



கஜினி, போக்கிரி என்று ஆக்‌ஷன் மசாலாக்கள் இங்கே இருந்து ஹிந்திக்கு செல்ல, அங்கேயிருந்து ஒரு நல்லப்படத்தை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார் கமல். வெட்னஸ்டே வந்தப்போது, இம்மாதிரி படங்கள் தமிழில் வருவதில்லையே என்று கவலை தெரிவித்திருந்தார் ஞாநி. இதோ, கமல் தயவில் உன்னைப்போல் ஒருவன். ஐம்பது ஆண்டுகாலம் தமிழ் சினிமாவில் இருக்கும் கமல், பொறுப்புடன் செய்திருக்கும் ரீ-மேக்.

இந்த கதையில் உள்ள ஒரு சஸ்பென்ஸ், கமல் நடிக்கிறார் என்ற போதே உடைந்து விட்டது. இருந்தாலும் சுவாரஸ்யம் குறையாமல், வேக வேகமாக ஓடி இரண்டே மணி நேரத்தில் முடிகிறது படம்.

கமல், மோகன்லால் என்று இருபெரும் தலைகள் இருந்தாலும். அவர்கள் மட்டும் அதிகம் ஆடாமல், எல்லாரையும் அடித்து ஆடவிட்டு இருக்கிறார்கள். கதைக்கு தேவையான காட்சிகள் மட்டும், படத்தில். எப்படி இருக்கணுமோ, அப்படி இருக்கிறதே, வித்தியாசமாக இருக்கிறது.

விருமாண்டியில் மரண தண்டனையே கூடாது என்று சொன்ன கமல், இதில் தீவிரவாதத்திற்கு பதிலடி தீவிரவாதம் தான் என்கிறார். சரி, விடுங்க... இரா.முருகன் சொல்கிறார்.

இரண்டு போலீஸ் சூரப்புலிகள் வருகிறார்கள். அசத்தலாக இருக்கிறார்கள். முக்கியமாக, கணேஷ். அபியும் நானும்’இல் சிங்காக வருபவர்தானே? ஆளும், குரலும் சூப்பர் ஹீரோ போல் இருக்கிறார். இது போல் ஒரு கதை ஹிந்தியில் வராமல், கமலுக்கோ வேறு யாருக்கோ இங்கே தோன்றியிருந்தால், இந்த வேடத்திலும் கமலை நடிக்க சொல்லி, அவரும் நடித்திருப்பார்.

அய்யா சாமி! கமல் படம்’னா சந்தானபாரதி இருக்கணுமா? அதுவும் அவர் ஒரு தீவிரவாதியா? முடியல... அவருக்கு ஊரு பண்ணையார், கற்பழிப்பு சீன் இதுக்குத்தான் பொருத்தமா இருப்பாரு.

மத்தப்படி எல்லா நடிகர் தேர்வும் பொருத்தம். மோகன்லால்கிட்ட பாதுகாப்பு கேட்டு ஒரு நடிகர் வாராரு. அதுக்கு செம பொருத்தம் - ஸ்ரீமன். எனக்கு எப்பவும் அவர பார்த்தா, விஜய் ஞாபகம் தான் வரும். இந்த கேரக்டருக்கு, சொல்லவே வேண்டாம்.

ஏறத்தாழ எல்லா விஷயங்களையும் நேரடியாகவே சொல்கிறார்கள். முதல்வர் என்றால் கலைஞர் குரல், முதல்வர் வீட்டில் திமுக கொடி பறக்கிறது, பெஸ்ட் பேக்கிரி என்கிறார்கள். இன்னும் பல.

இயக்குனர் சக்ரி, இந்த களத்தில் பயங்கர அறிவாளியாக இருக்கிறார். தீவிரவாதி, பாம், போலீஸ், அதிகாரிகள், மீடியா என்று அவர் காட்டியிருக்கும் நுணுக்கங்கள் அபாரம். அவரவர் தரப்பின் யதார்த்த நியாயத்தையும் எடுத்து வைக்கிறார்.

ஸ்ருதி பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி நன்றாகவே இருந்தது. அவருடைய திறமை, கமல் அல்லாத மற்றவர்களின் படங்களில் தான் தெரியும். கமல் எப்போதும் முகத்தில் போடும் வேஷத்தை, இதில் ஒரு பாடலில் குரலுக்கும் போடுகிறார். நல்லவேளை, பாடல்களை தனியாக படத்தில் சேர்க்கவில்லை.

என்ன தான் பார்த்து, பார்த்து தமிழுக்கு ஏற்றாற்போல் படத்தை எடுத்து இருந்தாலும், என்.டி.டி.வி பொம்மலாட்டம், தம்மடிக்கும் காம்பியர், கோத்ரா வசனங்கள் போன்றவற்றால் ஒரு அந்நிய உணர்வை தவிர்க்கமுடியவில்லை.

காமன் மேன், காமன் மேன் என்று தன்னை கமல் சொன்னாலும், நம்மூர் காமன் மேன் சுப்பனும் குப்பனும் தானே? இவர் உயர் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த காமன் மேன் போலும்! விலைவாசி பற்றிய கவலை இருந்தாலும், கூடை நிறைய தளும்ப தளும்ப தக்காளி வாங்கி செல்கிறார். கவனிக்க, பசிக்கும்போது பிரெட் சாப்பிடுகிறார். இட்லி சாப்பிட வேண்டாம்? :-)

.

23 comments:

thamizhparavai said...

நறுக்குன்னு விமர்சனம்...
கடைசிப்பத்தி ரசித்தேன்...
இன்னும் பார்க்கவில்லை.பார்த்துவிட்டுச் சொல்கிறேன்...

ஜெட்லி... said...

//கமல் படம்’னா சந்தானபாரதி இருக்கணுமா? //

இருபது வருஷ நட்பு.... சும்மாவா

Anonymous said...

//முதல்வர் வீட்டில் திமுக கொடி பறக்கிறது//

That is Kalaignar's Gopalapuram House.

//கமல் படம்’னா சந்தானபாரதி இருக்கணுமா? //

This should be avoided... good comment!

Nice Review

சரவணகுமரன் said...

பாருங்க தமிழ்ப்பறவை

சரவணகுமரன் said...

வாங்க ஜெட்லி

SurveySan said...

//கவனிக்க, பசிக்கும்போது பிரெட் சாப்பிடுகிறார். இட்லி சாப்பிட வேண்டாம்?//

:) நல்ல கேள்வி.

நரேஷ் said...

நல்ல விமர்சனம்...

ஞாயிறுதான் பார்த்தேன்....சின்னச் சின்னக் குறைகள் இருந்தாலும், ஒரு நல்ல படத்தை தமிழில் கொடுத்ததற்காகவும், முக்கியமாக இந்த மாதிரி ஒரு படத்தை பேரரசு போன்ற புண்ணியவாண்கள் பரத், விஷாலை வைத்து ரீமேக் செய்யாமல் தானே எடுத்ததற்காகவும் தாராளமாகப் பாராட்டலாம்....

இரா முருகனின் வசனம் அருமை...

வாழ்த்துகள் கமல் & டீம் மற்றும் சரவணகுமரன்...

"நான் யாராக இருப்பினும் நீ எனக்கு சொந்தமே.." அந்த 'நான்' : கார்த்திக் சுப்பிரமணி said...

saravanan ! unga vimarsanam arumai enru naan sollum athe velaiyil oru padaippaliyaga Thiru.Kamalhasan
avargalin vasanangal ellame maraintha ezhuthalar Thiru.Sujatha avarakalathu inspiration-o enru thonrugirathu,enralum inge Ira.Murugan vazhthukkuriyavar..

"eppadi namma kamal paani comment?"

"ராஜா" said...

kamal's next attempt, so good compared to his other ventures like anbe sivam, hey ram(though they are verygood in content, tey missed something), really he (done, do ,will do) good job for tamilcinema.....

tanx for appreciate such a good movie

சரவணகுமரன் said...

நன்றி சர்வேசன்

சரவணகுமரன் said...

நன்றி நரேஷ்

சரவணகுமரன் said...

நல்லா குழப்புனீங்க, கார்த்திக்

சரவணகுமரன் said...

நன்றி ராஜா

Anonymous said...

Kumara.. Good one!!!! will follow ur posts regularly..

Need to read all the older posts

- Karthik

சரவணகுமரன் said...

Thanks Karthik

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நண்பா சூப்பர். எனக்கும் சந்தான பாரதியை பார்த்ததும் கந்தசாமி வடிவேலு காமடி ஞாபகம் வந்தது.

//நான் அந்த அளவுக்கு வொர்த் இல்ல. என் மூஞ்சிய 10 நிமிஷம் பார்த்தா வீட்டுல போய் கெக்க பிக்கனு சிரிப்பீங்க. //

எனக்கும் சந்தான பாரதியை பார்த்ததும் அப்படித்தான் இருந்தது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நண்பா சூப்பர். எனக்கும் சந்தான பாரதியை பார்த்ததும் கந்தசாமி வடிவேலு காமடி ஞாபகம் வந்தது.

//நான் அந்த அளவுக்கு வொர்த் இல்ல. என் மூஞ்சிய 10 நிமிஷம் பார்த்தா வீட்டுல போய் கெக்க பிக்கனு சிரிப்பீங்க. //

எனக்கும் சந்தான பாரதியை பார்த்ததும் அப்படித்தான் இருந்தது.

சரவணகுமரன் said...

நன்றி ரமேஷ்

Anonymous said...

rajan said
such a different fim in tamil.nice

சரவணகுமரன் said...

நன்றி ராஜன்

ஷாஜ் said...

எந்த common man இப்பல்லாம் இட்லி சாப்டுறான் படம் பாத்தா ஏதாவது ஒரு சொல்லி முடிச்சாதன் இந்த் blog எழுதுறவங்க நிம்மதியா இருப்பாங்க போல

சரவணகுமரன் said...

ஓ! ஷாஜ், காமன்மேன் பிரெட் தான் சாப்பிடுறான்...

Balaji said...

sorry for posting a very late comment. you had already stated that the film is remake of "A WEDNESDAY".
it is a basically a hindi film. So the North Indians breakfast is Bread, butter and jam, poha ( அவல் upma).
நம்ம தான் காப்பி அடிப்பதில் பெரிய ஆள் ஆச்சே. அப்டியே ஈ அடிச்சான் காப்பி. If you know watch it in Hindi, absolutely brilliant