Sunday, November 1, 2009

அஜித் நடிப்பும் நடனமும்

டிவில முழுசா ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சு என்று எண்ணிக்கொண்டே கடந்த சனி அன்று ஒரு படம் பார்த்துவிடலாம் என்று முடிவெடுத்தேன். கே டிவில தானே எப்பவும் படம் போடுவாங்க. இப்ப என்ன போடுறாங்க, பார்ப்போம் என்று வைத்தேன். காதல் கோட்டை ஓடிக்கொண்டிருந்தது.

பாதிக்கு மேல் ஓடிவிட்டது. சரி, இனி தான் நல்லா இருக்கும்’ன்னு என்று பார்க்க தொடங்கினேன். படத்துல எல்லா கேரக்டருமே கொஞ்சம் அறிவுஜீவித்தனமாக தத்துவமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்த படத்தை அந்த டைமில் எடுத்ததால் உண்டு. பிறகு, கொஞ்ச காலத்தில் செல்போன் வந்துவிட்டது. செல்போன் வந்த பிறகு, இப்படி ஒரு விஷயம் நடக்கவே வாய்ப்பில்லையே? (பார்க்காமல் காதல் என்பதை சொல்லவில்லை. பார்க்காமல் காதலித்தவரை சந்திக்க பெரும்பாடுபடுவதை.)

இந்த படத்திற்காக அகத்தியன் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றிருந்தார். சிறந்த இயக்குனர் தேசிய விருது வாங்கி கொடுத்த முதல் தமிழ் படம். ஆனால், இந்த படத்திலும் வழக்கமான தமிழ் சினிமாவிற்கான விஷயங்கள் எல்லாம் இருக்கும். தேவையில்லாத இடங்களில் பாடல், சண்டைகாட்சி என்றெல்லாம் இருந்தாலும், கிளைமாக்ஸ் வரை மெல்லிய சஸ்பென்ஸ் வைத்திருந்தது ப்ளஸ்.

அதிலும் முடிவில் அஜீத்தான், தான் தேடி வந்த தன் காதலன் என்று தெரிந்தவுடன், ரயிலில் இருந்து இறங்கி உணர்ச்சி பொங்க, தான் கமலி என்று வெளிப்படுத்தும் உச்சக்கட்டகாட்சியில் தேவயானி சிறப்பாக நடித்திருந்தார். அதற்கு பதிலுக்கு அஜீத் வெளிக்காட்டும் உணர்ச்சி, ஒண்ணுமில்லாததாக இருந்தது. ஆனால், பிறகு வந்த படங்களில் எல்லாம் இம்மாதிரி காட்சிகளில் அஜித் நன்றாக செய்திருப்பார். அவரை அடிக்கடி வாரிவிடும் ஒரு விஷயம் - அவரது குரல், உச்சரிப்பு.

---அஜீத்தின் மைனஸாக இருந்த, இருக்கும் இன்னொரு விஷயம் - நடனம். டான்ஸ்ல எங்க ஆளு பக்கம் வரவே முடியாதே என்று விஜய் ரசிகர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு இருப்பார்கள். இது கண்டிப்பாக அஜீத்துக்கும் தெரிந்திருக்கும். இதனாலேயே அஜீத்தின் ஒவ்வொரு படத்திலும் எப்படி ஆடியிருக்கிறார் என்று கவனிப்பேன். சில இயக்குனர்கள் மட்டும் தான், அஜீத்தின் நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள், எதுக்கு அவர கஷ்டப்படுத்திக்கிட்டு என்று விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அஜீத் நன்றாக ஆடியிருக்கிறார் என்று நான் நினைக்கும் மூன்று பாடல்கள்.

தீனா - நீயில்லை என்றால்

யுவன் போட்ட சூப்பர் ட்யூன் இது. இப்ப, ஆடியோவில் கேட்டாலும், ஆட்டம் போட வைக்கும் தாளம். அஜீத் ஒரு காலையும் கையையும் ஏற்றி இறக்கி ஆடும் ஆட்டம், எங்கள் கல்லூரி ஹாஸ்டலில் ரொம்ப பிரபலம்.வரலாறு - இளமை இளமை

இந்த படத்தில் தல பரதநாட்டியம் ஆடி, அது யாரும் சிரிக்கும்படி இல்லாததே பெரிய சாதனை. ஆனால், அதற்கு முன்னால், படத்தின் ஆரம்ப பாடலான ‘இளமை இளமை’ பாடலிலேயே என்னன்னமோ ஆடி என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தார் அஜீத். பட வைத்தவர் ராபர்ட்.ஏகன் - ஹேய் சாலா

இந்த படத்தில் அஜீத்தின் நடனத்திற்கு எல்லோரிடமுமே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் படத்தின் இயக்குனர் - டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம். விஜய் எப்போதும் நன்றாக ஆடுவார் என்றாலும், பிரபுதேவா இயக்கத்தில் இன்னமும் கலக்கியிருந்தார். அதுபோல் ஏதாவது நடந்துவிடாதா என்று ஒரு ஏக்கம் அஜீத் ரசிகர்களிடம் இருந்திருக்கும். அது இந்த பாடலில் மட்டும் ஒரளவுக்கு பூர்த்தியானது.---அஜீத் நல்லா டான்ஸ் ஆடுன பாடல்களை பார்த்தோம். இனி விஜய் நல்லா நடிச்ச படங்களை வேறொரு பதிவில் பார்ப்போம். கொஞ்சம் கஷ்டம்தான். ட்ரை பண்ணுவோம்.

.

25 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதற்கு பதிலுக்கு அஜீத் வெளிக்காட்டும் உணர்ச்சி, ஒண்ணுமில்லாததாக இருந்தது. //

கமலிக்கு தெரிந்த உண்மை சூர்யாவுக்கு தெரியாது என்பதால் அஜித் காட்டும் முகபாவனை சரியானது என்றுதான் தோன்றுகிறது..,

சரவணகுமரன் said...

சுரேஷ் சார், தேவயானி தான் தான் கமலி என்று சொன்னபிறகும் அஜித்திடம் பெரிய ரியாக்‌ஷன் இருக்காது. கட்டிபிடித்து படத்தை முடித்துவைத்து விடுவார்.

Anonymous said...

கிகிகிகிகி

நரேஷ் said...

கடைசில ஒண்ணு சொன்னீங்க பாருங்க....அது மேட்டரு!!!

அஜீத்தின் குரலை நன்றாக கையாண்டிருப்பது பில்லாவில்...ஓவரா கத்த விடாமல், சாதாரண சவுண்டிலேயே நன்றாக செய்திருப்பார்...இந்த பிரச்சனை இருக்கக் கூடிய இன்னொரு நடிகர், ஜெயம் ரவி...

நீங்க சொன்ன அறிவுஜீவித்தனம், அகத்தியனின் ஸ்பெஷாலிட்டி(?) இவருடைய இன்னொரு படமான ஏறக்குறைய இதே பார்க்காமலேயே காதல் விஷயத்தை சொல்லும் பிரசாந்த் படத்திலும் (படம் பெய்ர் மறந்துவிட்டது, என்னமோ காதல் வரும்) இதே போன்று அறிவுஜீத்தனம் படம் முழுக்க வரும்....

இளையராஜாவின் இசையில் பாடல்கள் மிக நன்றாக இருக்கும்...எல்லாம் இருந்தாலும், இஷாவுக்காகவே (இஷா கோபிகரை செல்லமா அப்படிதான் கூப்பிடுவது வழக்கம் :))))படத்தை தாராளமாக பார்க்கலாம்...

Admin said...

/* இனி விஜய் நல்லா நடிச்ச படங்களை வேறொரு பதிவில் பார்ப்போம். கொஞ்சம் கஷ்டம்தான். ட்ரை பண்ணுவோம்.*/

செம பஞ்ச்...

உங்களுக்கு ஒரு மேட்டர் தெரியுமா தல முறைப்படி பரதநாட்டியம் கற்றவர்

"ராஜா" said...

தல நல்ல ஆடுன இன்னொரு பாட்டு ஜி படத்துல வருமே வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா.... அப்புறம் பூவெல்லாம் உன் வாசம்ல வர யுக்தா முகி பாட்டு ....

வினோத் கெளதம் said...

அப்புறம் காதல் வெப்சைட் ஓன்று..

சரவணகுமரன் said...

வாங்க தூயா

சரவணகுமரன் said...

சரியா சொன்னீங்க நரேஷ்... அஜித்துக்கும் ரவிக்கும் ஒரே விஷயத்தில் பிரச்சினை.

அது காதல் கவிதை. டயானாவை வைத்து ஒரு ஹிட் பாடல் உண்டு.

சரவணகுமரன் said...

நன்றி சுரேஷ் பாபு...

தல எப்ப பரதநாட்டியம் கற்றார்? வரலாறு படத்திற்காகவா, இல்லை முன்னமேவா?

சரவணகுமரன் said...

ராஜா,

ஜீ பாட்டுக்கூட கொஞ்சம் வேகமா இருக்கும்...யூக்தா முகி பாட்டு எனக்கு பிடிக்கவே பிடிக்காது...

சரவணகுமரன் said...

வினோத் கௌதம்,

காதல் வெப்சைட் பாட்டும் நல்லா இருக்கும். முழு போகஸும் பாட்டில், அஜித் மேல்தான்...

Toto said...

எப்பொருள் எங்கெங் கில்லையோ அப்பொருள்
தேடுவ‌ துங்க‌ள் சிற‌ப்பு ..

செய்ங்க‌ கும‌ர‌ன் ஸார்.. :)

Toto
www.pixmonk.com

சரவணகுமரன் said...

Toto,

சூப்பர் குறள்

rajan said...

//சரியா சொன்னீங்க நரேஷ்... அஜித்துக்கும் ரவிக்கும் ஒரே விஷயத்தில் பிரச்சினை//

எனக்கு புரிஞ்சு போச்சு.

எனக்கு புரிஞ்சு போச்சு. .

எனக்கு புரிஞ்சு போச்சு. . .//தல எப்ப பரதநாட்டியம் கற்றார்? வரலாறு படத்திற்காகவா, இல்லை முன்னமேவா?//


ஹா ஹா ஹா. நான் கேட்கனும்னு நினைச்சேன்! நீங்க கேட்டுடிங்க!

சரவணகுமரன் said...

வாங்க ராஜன்

sampath said...

நரேஷ் , அந்த படம் பெயர் காதல் கவிதை. நானும் அந்த படத்தை பார்த்திருக்கிறேன். இஷாவுக்குகாக தான். அந்த படத்தில் மட்டும் நல்ல அழகாக காட்டி இருப்பார்கள்..

வெண்ணிற இரவுகள்....! said...

ரஜினிக்கு ஆட தெரியாது நடந்தாலே போதும் ........
அதே போல் தான் நம் தலயும்

சரவணகுமரன் said...

வாங்க சம்பத்

சரவணகுமரன் said...

வெண்ணிற இரவுகள்,

ஆட தெரியாது என்றாலும், அதற்கு இருவரும் எடுக்கும் முயற்சிகள் ரொம்ப அதிகம்.

பாபா “மாயா மாயா” பாட்டில் ரஜினி இந்த வயதில் போட்டிருக்கும் ஸ்டேப்ஸ் - ஆச்சரியமூட்டுபவை.

Prathap Kumar S. said...

//இனி விஜய் நல்லா நடிச்ச படங்களை வேறொரு பதிவில் பார்ப்போம். கொஞ்சம் கஷ்டம்தான். ட்ரை பண்ணுவோம்.//

இது ரொம்ப ரிஸ்க்கு தல வேண்டாம் விட்ருங்க...

கில்லிகள் said...

//வெண்ணிற இரவுகள்....! said...
ரஜினிக்கு ஆட தெரியாது நடந்தாலே போதும் ........
அதே போல் தான் நம் தலயு//

அது சரி.. ரஜினியின் நடை பற்றி தமிழகமே அறியும். தல நடை. ரைட்டு

கில்லிகள் said...

//தல நல்ல ஆடுன இன்னொரு பாட்டு ஜி படத்துல வருமே வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா.... அப்புறம் பூவெல்லாம் உன் வாசம்ல வர யுக்தா முகி பாட்//

உங்களுக்கு ஹ்யூமர் சென்ஸ் அதிகம் பாஸ்.

//அஜித்திடம் பெரிய ரியாக்‌ஷன் இருக்காது. கட்டிபிடித்து படத்தை முடித்துவைத்து விடுவார்//

அதேதான் நானும் சொல்ல வந்தேன்.

விஜய்க்கு சிறப்பாக நடிக்க தெரியாது என்பது உண்மைதான். இருந்தாலும் பெரும்பாலானோர் து.ம.து, கில்லி, போன்ற சில படங்களில் அவர் நன்றாகவே நடித்திருந்தார் என்பதை ஒப்புக் கொள்வார்கள். அஜித்தை விட சூர்யாவும், விக்ரமும், மாதவனும் நன்றாகவே நடிப்பர்கள்.அஜித்தின் வாய்ஸ் மாடுலேஷன் மட்டுமல்ல, பாடி லேங்குவஜும் சிற்ற்றப்பாக இருக்கும்

விஜய் நடனத்திலும் காமெடியிலும் கிங் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.கொஞ்சம் வயதான பிறகு நிச்சயம் நடிக்க ஸ்கோப் உள்ள படங்களில் அவர் நடிப்பார்

சரவணகுமரன் said...

வாங்க நாஞ்சில் பிரதாப்

சரவணகுமரன் said...

கில்லிகள்,

விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி...

//கொஞ்சம் வயதான பிறகு நிச்சயம் நடிக்க ஸ்கோப் உள்ள படங்களில் அவர் நடிப்பார்//

உங்க நம்பிக்கையை வரவேற்கிறேன். :-)