Saturday, January 9, 2010

ஜக்குபாய் - விமர்சனம்



“இந்தக் கதையப் பத்தி எனக்கு நல்லா தெரியும். இது நான் நடிக்கிறதா இருந்த படம். இந்தக் கதை வசாபின்னு ஒரு ஃப்ரெஞ்ச் படம்.”

-ரஜினிகாந்த்



என்ன தலைவா, நீங்க? நான் படம் பார்க்கிறதுக்கு முன்னாடி கதையே கேட்க மாட்டேன். நீங்க என்னடா’ன்னா...???



ஆனா எனக்கென்னமோ, இந்த படம் அப்படியே அந்த படம் மாதிரி இருக்கும்’ன்னு தோணலை.



பாருங்களேன்! அதுல கருப்பு கோட், உள்ள கருப்பு சட்டை. இதுல கருப்பு கோட், உள்ள வெள்ளை சட்டை. இப்படி கதையில பல மாற்றங்கள் இருக்கும்’ன்னு நினைக்கிறேன்.



நன்றி: சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த்.



சரியா தெரியாட்டி, க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.

.

10 comments:

திருவாரூர் சரவணா said...

இவரும்வரும் போற இடத்துல எல்லாம் உண்மை எதையாவது பேசி சம்மந்தப்பட்டவங்களுக்கு வெடி வெச்சிடுறாரு. நல்ல காமெடி.

பிரபாகர் said...

அடப்பாவி மக்கா!

இது அந்த கதையில்ல! கோட்டு வெள்ளயா மாத்தியிருக்கும்போதே தெரியல?

நெட்டுல ஃபிரியா வந்ததையே பாக்கலையே? தியேட்டர்ல பாப்பாங்கங்றீங்க?

சத்தியா எதுக்கு இனிமே ரஜினிய கூப்பிடறாங்க? நல்ல மாட்டுக்கு...

பிரபாகர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏன் நண்பா வெந்த புண்ணுல வேலப் பாய்சுறீங்க??????????????????

சரவணகுமரன் said...

சரண்,

நாட்டுல இப்ப உண்மை பேசினா பிரச்சினை ஆயிடுது...

சரவணகுமரன் said...

பிரபாகர்,

திருட்டு விசிடி வந்தாலும், நெட்ல வந்தாலும் படம் நல்லா இருந்தா கண்டிப்பா ஓடும். பல ஆங்கில படங்கள் ரிலீஸாகும் முன்பு இங்கு சிடி வந்து விடுகிறது. அதற்காக ஓடாமலா போகிறது?

தமிழன் ப்ரீயா கிடைச்சா, காசு கொடுத்து படம் பார்க்க மாட்டான்’ன்னு இவங்களே தமிழனை அசிங்கப்படுத்துறாங்க.

சரவணகுமரன் said...

ரமேஷ்,

ஒரு படத்தை பார்த்து இன்னொரு படத்தை எடுப்பதை நான் குறைக்கூற மாட்டேன். எதற்குமே இன்னொன்று தான் இன்ஸ்பிரஷனாக இருக்கும். இன்னொரு படம் அல்லது நிஜ வாழ்க்கை அனுபவம்.

ஒரு நல்ல விஷயத்தை, அதை காண கிடைக்காத மற்றவர்களுக்கு காட்டுவது நல்ல விஷயம் தான். கிரடிட் யாருக்கு போகிறது என்பது வேறு பிரச்சினை.

கிறிச்சான் said...

சரத் குமார சர்பத் குமார் ஆக்கீட்டாங்கய்யா!

ramalingam said...

ஒரு பக்கம் எல்லாவற்றையும் ஃப்ரீயாகக் கொடுத்து கெடுக்க வேண்டியது. இன்னொருபக்கம் உழைப்பை சுரண்டாதே என்பது. சாத்தானின் வேதங்கள்.

சரவணகுமரன் said...

GERSHOM,

ஹி ஹி...

சரவணகுமரன் said...

ramalingam,

அதானே?