Monday, February 9, 2009

நான் கடவுளும் வாழ்வதற்கான உரிமையும்

நான் கடவுள் ரிலீசான அதே சமயம் அந்த படத்தின் மூலக்கருத்தான "வாழ இயலாதவர்களுக்கு கொடுக்கப்படும் மரணம் வரம்" என்பதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை போப் சொல்லியிருக்கிறார். உலக உடல்நல குன்றியவர்களுக்கான தினத்தில் அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

"இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு நோய்வுற்றவருக்காகவும் வேண்டுவோம். குறிப்பாக முற்றிலும் மற்றவர் துணையுடன் வாழும் ஜீவன்களுக்கு கடவுளின் அன்பை உணர உதவுவோம்."

---

இத்தாலியில் 17 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் சிக்கியவர், என்க்லரோ. அப்போதிருந்து ஒரு உயிரற்ற உடலாகவே ஆஸ்பத்திரியில் வாழ்ந்து வருகிறார். இத்தனை வருடம் குழாய் மூலமாகவே உணவு உடலில் ஏற்றப்பட்டு வருகிறது.

அவருடைய தந்தைக்கு இது கொடுமையாக தெரிய, தன் மகளின் வாழ்வை முடித்து கொள்ள சம்மதித்து கோர்ட்டில் வேண்டுகோள் எழுப்பியிருந்தார். அவருடைய வாதத்தின் படி விபத்திற்கு முன்பு தன் மகள் இதுப்போல் வாழ விருப்பம் இல்லை என்று கூறி இருக்கிறாள் என்கிறார். ஒரு முறை, அவள் தோழியின் நிலை கண்டு இவ்வாறு கூறியதாக சொல்கிறார்.

இவருடைய வேண்டுகோள் நீதிமன்றத்தில் இருமுறை நிராகரிக்கப்பட்டு பின்பு ஏற்றுகொள்ளப்பட்டது. இது இத்தாலியில் பெரும் சர்ச்சையானது. இது கொலை என்றும் கருணை அடிப்படையானது என்றும் வாக்குவாதங்கள். தற்போது அரசாங்கம் இந்த பிரச்சனையில் தலையிட்டுள்ளது.

போப் இப்போது இப்பிரச்சனையைதான் மறைமுகமாக தன் அறிவிப்பில் கூறிப்பிட்டுள்ளார் என்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் டெர்ரி என்பவரது வாழ்வு இதுபோன்று முடித்து வைக்கப்பட்டது.

---

இனி வாழவே முடியாதவர்களுக்கு எதற்காக பணத்தையும் நேரத்தையும் செலவழித்து, அவர்களையும் கஷ்டபடுத்த வேண்டும்? என்பது சிலரின் வாதம். வாழ்வில் எது வேண்டுமென்றாலும் நடக்கும். கண்டிப்பாக இதுதான் நடக்கும், இது நடக்காது என்று யாராலும் கூற முடியாது. இன்று பிழைக்கவே மாட்டார் என கூறும் மருத்துவர்கள், நாளையே ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டு விட்டால், "இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்" என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள். அதனால், முடிந்த அளவுக்கு ஒரு உயிரை காக்கவும், பராமரிக்கவும் நம்மால் இயன்றவற்றை, இயன்றவரை செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம்.

---

சன் டிவியில் படிக்காதவன் படத்திற்காக தனுஷ், விவேக், தமன்னா ஆகியோரை உக்காரவைத்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

காம்பியர் : இந்த படத்துல என்ன மெசேஜ் சொல்றீங்க?
தனுஷ் (யோசித்துவிட்டு) : அப்படி ஒண்ணும் இல்ல.

எல்லோரும் சிரிக்கிறார்கள்.

காம்பியர் (சமாளிக்கும் விதமாக): இல்ல... இப்படி எடுத்துக்கலாம். படிக்காம இருந்தாலும் வாழ்க்கைல முன்னேறலாம்.
தனுஷ்: இந்த படத்துல நான் முன்னேறவே இல்லையே?

காம்பியர் அசடு வழிகிறார்.

விவேக் : படத்த படமா எடுத்துகோங்க. அது தான் மெசேஜ்.

சில நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படும் படங்கள் தவறான கருத்தினாலோ, தவறாக சித்தரிக்கபடுவதாலோ தோல்வியடைய கூடும். மாயக்கண்ணாடி ஒரு உதாரணம். தகுதியை மீறி பேராசைப்படக்கூடாது என்பது சொல்ல வந்த கருத்து. ஆனால், அது புரிந்து கொள்ளப்பட்ட விதம், யாரும் தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது போல். தகுதிக்கு மேல் உள்ளவற்றை தகுதியை வளர்த்துக்கொண்டு அடையலாமே? தகுதியை வளர்த்து கொண்டு சேரன் வளர்கிறார், ஆனால், மக்களுக்கு தவறான பாடத்தை அல்லவா எடுக்கிறார்? என்பது போல் நெகடிவ் ரிவ்யுஸ்.

சேரனுக்கு அது ஒரு பாடம்.

கருத்து சொல்ல வேண்டும். அதை விட முக்கியம். தவறான கருத்தை சொல்லக்கூடாது. அதற்கு கருத்தே இல்லாமல் இருப்பது மேல்.

8 comments:

Selva said...

very good.But neenga enna karuthu solla varreenga. I don't understand. The question on mercy killing is debatable. I think the solution varies from person to person and context to context. We cannot generalise and say mercy killing is right or wrong

சரவணகுமரன் said...

செல்வா, நான் சொல்ல வந்தது என்னவென்றால் ஒரு உயிரை எடுக்கும் முடிவை நாம் எடுக்க வேண்டாமே என்பதுதான். தவிர, அதை நியாயப்படுத்தும் நான் கடவுள் படத்தின் முடிவும் ஏற்புடையது இல்லை என்பதும்தான்.

வருகைக்கு நன்றி செல்வா...

Anonymous said...

"Naan kadavul" oru Art film. appadathil Kooriyadu muttrilum sariyanathe. Manitharkal silaper Ippadi Mattravar thunai nadi valumpodu, karunai adippadayil avarkal uyirai seyarkayaka pirithu udal uruppu danam seiyalam. athan mulam oru silarin vazhkai sirappadaiyum. athan mulam silar punsirippadavaralloo... (ippadi yosingappa)

சரவணகுமரன் said...

தினேஷ், நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு... ஆனா, படத்துல அப்படி சொல்லலீயே?

வஜ்ரா said...

//
"இவ்வுலகத்தில் வாழும் ஒவ்வொரு நோய்வுற்றவருக்காகவும் வேண்டுவோம். குறிப்பாக முற்றிலும் மற்றவர் துணையுடன் வாழும் ஜீவன்களுக்கு கடவுளின் அன்பை உணர உதவுவோம்."
//


இவர்கள் வேண்டுவதனால் அப்படிப்பட்டவர்களுக்கு என்ன கிடைக்கும் ?

எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு சொல்ற அல்லா சாமி கூட என்னை மாதிரி கண் தெரியாத பிச்சைக்காரிய கஷ்டப்படுத்ததான் விரும்புதா? எல்லா பாவத்தைக் கழுவுற ஏசு சாமி என்னைக் கைவிட்டுடுச்சு. தெருவுக்குத் தெரு இருக்கும் பிள்ளையார் சாமி கைவிட்டுருச்சு...

இதெல்லாம் அதே படத்தில் இருக்கும் வசனங்கள் தான். வாழ்வதற்கான உரிமை எல்லோருக்கும் இருப்பது போலவே சாவதற்கான உரிமையும் வேண்டும் என்று தான் இத்தாலியில் போராடினார் ஒருவர். சாவதற்கான உரிமை தேவையா என்ற கேள்வி தான் இப்போது கேட்கப்படவேண்டும்.

சரவணகுமரன் said...

Vajra, அதற்காக ஒருவரை சாகடிப்பதால் பிரச்சனை தீரும் என்பது சரி இல்லையே?

"உழவன்" "Uzhavan" said...

Very good post.

சரவணகுமரன் has left a new comment on your post "உப்பின் மகத்துவம் தெரியுமா உங்களுக்கு?":

//கொஞ்சம் சம்பந்தப்பட்ட பதிவு//


தங்கள் வருகைக்கும், தகவலுக்கும் மிக்க நன்றி சரவணகுமரன்.

திருச்செந்தூர் செல்லும் வழியில் நாங்களெல்லாம் உப்பளத்தை பார்த்ததோடு சரி :-)
தாங்கள் உப்பு உற்பத்தி பற்றி தெளிவாக விளக்கியுள்ளீர்கள். பாராட்டுக்கள் !

உழவன்

சரவணகுமரன் said...

நன்றி உழவன்...