Wednesday, September 16, 2009

நாட்டு சரக்கு - திருப்பதி லட்டு

அண்ணா நூற்றாண்டையொட்டி நடந்த கருத்தரங்க விழா இது. எத்தனை அண்ணா, எத்தனை கலைஞர் பாருங்க?

அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டதற்கு காரணம் எது?

கலைஞரின் பகுத்தறிவு கொள்கை!
ஏழைகளுக்காக கலைஞர் உழைப்பது!
கலைஞரின் பேச்சாற்றல்!
கலைஞரின் எழுத்தாற்றல்!
கட்சியை கலைஞர் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது!
கலைஞரின் அரசியல் நாகரீகம்!

கட்சியை இந்த அளவுக்கு செல்வாக்காக வளர்த்தது என்று ஒரு தலைப்பு வைத்திருக்கலாம். தனி திராவிட நாடு என்ற கோரிக்கையை ஆரம்பத்தில் வைத்த அண்ணாவுக்கு, இந்திய அரசின் சார்பில் நாணயம் வெளியிட வைத்ததற்கு, கட்சியின் இந்த வளர்ச்சிதானே காரணம்?

---

அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு, கே டிவியில் இரவு சிறப்பு திரைப்படம். குஷி. அண்ணாவுக்காகவோ இல்லையோ, கலைஞரில் அஞ்சாதே ஓடிக்கொண்டிருந்தது. டிஆர்பி விட்டுட கூடாதே?

அண்ணாவுக்கும் குஷிக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்க வேண்டாம். குஷி, தமிழ் வார்த்தைகளில் அர்த்த புரட்சி பண்ணியவரின் படமாச்சே!

---

நாங்கள் கல்லூரியில் படித்தப்போது, ஒரு மினி எலக்ட்ரானிக்ஸ் ப்ராஜக்ட் போட்டி நடந்தது. அதில் என் நண்பனின் டீம் செய்தது - ஆட்டோமேடிக் மோட்டார் கண்ட்ரோலர். இப்ப, கமர்ஷியலாகவே கிடைக்கிறது. இது கிணறு மற்றும் தொட்டியின் தண்ணீர் அளவை பொறுத்து, மோட்டரை தானாகவே ஆன்/ஆப் செய்யும். ஹாஸ்டலில் ரூமில் இருந்து செய்தது. டெஸ்ட் செய்தபோது ஒழுங்காக வேலை செய்தது.

கல்லூரியில் டெமொ காட்டும் அன்று, பிரச்சினை செய்து விட்டது. என்ன பிரச்சினை என்றே தெரியவில்லை. அப்ப, என் நண்பன் சீரியஸாக கேட்டான்.

“டேய்! ஹாஸ்டல் தண்ணி கொண்டு வந்து பாப்போமா?”

---

போன சனி முழுவதும், சன் டிவியில் கீழே ஓடிக்கொண்டிருந்தது - நாளை தினகரனில் எந்திரன் ஸ்டில்ஸ் உடன் கூடிய சிறப்பு பக்கங்கள். ஆஹா, ஆரம்பிச்சுட்டாய்ங்களா? ஸ்டில்ஸ்க்கே இப்படியா? என்று நினைத்துக்கொண்டேன்.

எதிர்பார்த்ததைப் போல ஞாயிறு அன்று தினகரன் விற்பனையும் அதிகமாம். பெட்டிக்கடையில் மக்கள் முண்டியடித்து பேப்பர் வாங்கியதை, சன் நியூஸில் காட்டினார்களா என்று தெரியவில்லை.

---

போஸ்டர் ஒட்டியதால் மாட்டிக்கொண்டார் நடிகர் அர்ஜீன்.

அர்ஜீன் கன்னடத்தில் அவர் சொந்தக்கார பையனை வைத்து ஒரு படம் தயாரித்திருந்தார். அந்த படத்தின் போஸ்டர் பெங்களூர் நகர சாலைகளில் உள்ள பொது சுவர்களில் ஒட்டப்பட்டதற்காக, அவர் மீது கார்ப்பரேஷன் கேஸ் போட்டுள்ளது.

ஏதாவது ஒரு இங்கிலிஷ் பட போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தால், அந்த படத்தை தயாரித்த வார்னர் ப்ரதர்ஸ் அல்லது செஞ்சுரி பாக்ஸ் மீது கேஸ் போட்டு இருப்பார்களோ?

---இனி திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு யாரும் லட்டு செய்ய முடியாது. இதற்கும் பேடண்ட் வாங்கிவிட்டார்கள். திருப்பதி லட்டு, திருப்பதிக்கே.

லட்டு - சில தகவல்கள்.

* 17ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த லட்டு இருக்கிறதாம்.
* ஒரு நாளைக்கு 1.5 லட்சம் லட்டுகள் செய்யப்படுகிறது.
* தினசரி 10000 கிலோ சர்க்கரை, 1000 கிலோ முந்திரி, 500 கிலோ நெய் போட்டு் செய்யப்படுகிறது.
* ஒரு லட்டின் தற்போதைய விலை - ரூ. 25.
* ஒரு வருட லட்டு வருவாய் - ரூ. 2 கோடி

லட்டு’னா, சும்மா இல்லை.

.

11 comments:

மகேந்திரன் said...

நாட்டு சரக்கு.. நச்சுன்னு தான் இருக்கு..

அதுவும் கலைஞரே, கலைஞருக்கு கொடுத்துக்கொண்ட அண்ணா விருது,
(நாமளே பாராட்டிகிட்டாதான் ஆச்சி..!!), வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி
குடும்பத்தையே கட்சிக்குள்ள கொண்டுவந்தது எவ்வளோ பெரிய சாதனை..!!

(கனிமொழி: கடைசியில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டிங்களே..,
மு.க.அல(!)கிரி: யே..பாத்துக்கோ..பாத்துக்கோ..நானும் அரசியல்வாதிதான்..
டெல்லிக்கு போறேன்..டெல்லிக்கு போறேன்..)

என்னது??!!!

"கலைஞரின் பகுத்தறிவு கொள்கை! (குடும்பத்து மகளிரணி நெத்தியில
தேனாம்பேட்டை சிக்னல் மாதிரி விபூதி குங்குமம்)
ஏழைகளுக்காக கலைஞர் உழைப்பது! (அரிசி ஒரு ரூபா, சினிமா டிக்கட் நூறு ரூபா)
கலைஞரின் பேச்சாற்றல்! (கண்கள் பனித்தன..நெஞ்சம் இனித்தது)
கலைஞரின் எழுத்தாற்றல்! (பெண் சிங்கம் தயாராகுது.. எஸ்கேப் சாமியோவ்..)
கட்சியை கலைஞர் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது! (என் பசங்க நான் சொன்னா
கேக்க மாட்டாங்களா?)
கலைஞரின் அரசியல் நாகரீகம்!" (செல்வியா.. திருமதியா.. ரொம்ப நாகரீகம் போங்க..)

இதையெல்லாம் சொல்றதுக்கு கழகமே கொஞ்சம் யோசிச்சிருக்கும்..

வீரமணிக்கு பெரியார் விருது, அதை விட்டுட்டிங்களே சரவணா..

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் பட்டன், உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடுவதை மிகவும் எளிமையாக்குகிறது.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

ஜெட்லி... said...

நாட்டு சரக்கு நச்சுன்னு இருக்கு மச்சி....

பித்தனின் வாக்கு said...

மொதல எல்லாம் திருப்பதி லட்டு நல்லா இருக்கும். ஒருவாரம் கூட கொடாது, ஆனா இப்ப சுவை மாறிவிட்டது மற்றும் மூன்று நாளில் புளிக்க ஆரம்பித்துவிடுகிறது.

அப்புறம் கட்டுரை நல்லா இருக்கு, அன்னாவை பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது.

Boston Bala said...

---“டேய்! ஹாஸ்டல் தண்ணி கொண்டு வந்து பாப்போமா?”---

:)

நரேஷ் said...

நாட்டு சரக்கு நச்....

இந்த ஜால்ரா அடிக்கிற பழக்கத்தை எப்ப உடப்போறாங்களோ தெரியலியே???

வேலை வெட்டி எல்லாத்தையும் உட்டுபுட்டு உக்காந்து மொக்கையா பேசுறதை கவிதைன்னு நினைச்சுக்க சொல்லி கேக்க வேண்டியது...

அதுக்கு இருக்குற அமைச்சருல இருந்து எம் எல் ஏ வரைக்கும் எல்லாம் உக்காந்து கைதட்டி பாக்குறதுன்னு(என்னிக்கு பொழைப்பை பாப்பீங்க சாமீயோவ்????)

ஹாஸ்டல் தண்ணி மேட்டரு தாறுமாறு....

சரவணகுமரன் said...

மகேந்திரன், பயங்கர சூடா இருக்கீங்க?

சரவணகுமரன் said...

நன்றி ஜெட்லி

சரவணகுமரன் said...

பித்தன், லட்டின் தற்போதைய நிலையை புட்டு வைத்ததற்கு நன்றி

சரவணகுமரன் said...

வாங்க பாஸ்டன் பாலா

சரவணகுமரன் said...

வாங்க நரேஷ்