Tuesday, September 29, 2009

கலை வாரிசுகள்

ரஜினியும் கமலும் இன்னும் யூத்துகளாவே நடிப்பதற்கு அவர்கள் தான் காரணம். அதாவது, கமலுக்கு காரணம் ரஜினி. ரஜினிக்கு காரணம் கமல். ஒருவர் இளமையாக நடித்துக்கொண்டிருக்க, மற்றொருவரால் வயதானராக நடிக்க முடியாதே! அவர்களின் வெற்றிக்கு எப்படி அவர்களுக்கிடையேயான ஒப்பீடும், போட்டியும் உதவியாக இருக்கிறதோ, மற்ற விஷயங்களுக்கும் இவை காரணமாக இருக்கிறது.

பிரமாண்டமாக படமெடுப்பதாகட்டும், வெற்றிகள் கொடுப்பதாகட்டும், ரசிகர்களை திருப்திப்படுத்துவதில் ஆகட்டும் - ஒருவரை மற்றொருவர் பெஞ்ச்மார்க்காக வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் பசங்க இருந்திருந்தால், இந்நேரம் அவர்கள் ஹீரோவாக, இவர்கள் கொஞ்சமாவது பிள்ளை பாசத்தால் இறங்கி வந்திருப்பார்கள். (எனக்கு இவர்கள் யூத்துகளாக நடிப்பதில், எந்த ஆட்சேபனையும் இல்லை. நிஜத்தில் இல்லாததை பார்க்கவும் தானே, சினிமாவுக்கு போகிறோம்?)



உன்னைப்போல் ஒருவன் தீம் பாடலுக்கான வீடியோ ப்ரமோவை டிவியில் பார்த்தவர்கள், தியேட்டரில் அதை கட் செய்து விட்டதாக புலம்ப, அது படத்தில் இடம்பெறுவதற்காக எடுக்கப்பட்டதில்லை என்றிருக்கிறார்கள். அப்புறம் எதுக்கு எடுத்தீங்க? என்று கேட்க, இப்ப அதை படம் ஆரம்பிக்கும் முன்பு போடுகிறார்கள். பிள்ளை பாசம் என்றாலும் சும்மா சொல்ல கூடாது. பொண்ணும் நல்லா மியூசிக் போட்டு இருக்குது. நல்லா பாடி இருக்காங்க. ஆடி இருக்காங்க. பாடலை நல்லா இயக்கி இருக்குறாங்க. இவ்வளவு திறமைகளுக்கு கமல் காரணம் என்பதுபோல், இவ்வளவு வாய்ப்புகளுக்கும் கமல் காரணம்.

ஆனா, கமல் தன் பிள்ளைக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து இருக்காரு’ன்னு சொல்லிட்டு போயிட கூடாது. இந்த படத்துல, பலருக்கு வாய்ப்பு கொடுத்துருக்காரு. சதி லீலாவதில கமல் பையனா வருகிறவர், இந்த படத்தில் ஹாக்கர நடிக்க மட்டுமில்லை. படத்தில் ஒலிப்பதிவும் அவர்தான்.

விஜய் பையன், வேட்டைக்காரனில் ஆட்டம் போட்டு இருக்கானாமே? இன்னும் சில வருடங்களில், ஹீரோவாக்கிவிட்டு விடுவார்கள். அப்புறம் யாத்ரா? இப்பொழுதே, சினிமாவில் பிரபு, கார்த்திக், விஜய், பிரசாந்த், சூர்யா, கார்த்தி, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி, யுவன் சங்கர்ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, விஜய் ஜேசுதாஸ், வெங்கட் பிரபு என்று லேயர்லிலும் வாரிசுகள் இருக்கிறார்கள். வருங்காலத்தில், வாரிசு கலைஞர்கள் என்பவர்கள் தான் மெஜாரிட்டியாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

அவரவர் சார்ந்திருக்கும் துறையின் நெளிவு சுளிவுகள் தெரிந்திருப்பதால், வாரிசுகளும் சுலபமாக தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பும் சுலபமாக கிடைக்கிறது.

வாரிசு அறிமுகம் என்பது இன்று எல்லாத்துறைகளிலும் வந்து விட்டது. டாக்டர்கள் வாரிசுகள், பெரும்பாலும் டாக்டர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் என்பது தொழிலில்லை என்பதால், அதில் மட்டும் அவ்வப்போது எதிர்ப்பு குரல் ஒலிக்கிறது. ஆனால், அதையும் தொழிலாய் நினைப்பவர்கள் வாரிசுகளை இறக்கிவிட்டு கொண்டிருக்கிறார்கள். வாரிசுகளால், வாய்ப்பை இழந்தவர்கள் தான் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். பிறகு, அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து ஒரு இடத்தை அடைந்து விட்டால், அவர்களது வாரிசுகளுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிப்பதில்லை.

நம்மை அறியாமலே, குலத்தொழில் காலத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோமோ?

கட்டாய குலத்தொழில் என்றபோது எதிர்ப்பு வந்தது. இப்பொழுது, அவர்கள் விருப்பத்தோடு குலத்தொழில் என்றாகிவிட்டது. பிடித்த தொழில், கவுரவமான தொழில் எனும்போது, யாருக்கு விருப்பமில்லாமல் போகும்?

.

9 comments:

ஆயில்யன் said...

//அவரவர் சார்ந்திருக்கும் துறையின் நெளிவு சுளிவுகள் தெரிந்திருப்பதால், வாரிசுகளும் சுலபமாக தெரிந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பும் சுலபமாக கிடைக்கிறது.//

அதே! :) ரெக்கமண்டேஷன் விசயமெல்லாம் சர்வசாதாரணமாகிடுச்சு போல அங்க! என்ன ஸ்டாண்ட் பண்றதுக்கு ஒரு தனித்திறமை அல்லது திறமை மேம்படுத்தல் கண்டிப்பாக வேணும் அது இருந்தா பொழச்சுக்கிடலாம் வாரிசுகளும்...! :)

பித்தனின் வாக்கு said...

சினிமா விமர்சனங்களுக்கு நான் பின்னூட்டம் இடுவதில்லை என்ற எனது கொள்கை பிடிப்பின் காரணமாக இந்த பதிவுகளுக்கு நான் விமர்சனம் பின்னூட்டம் இடவில்லை (அப்பாடா பின்னூட்டம் போட்டுட்டன்).
காசும், வசதியும் இருந்தால் எல்லாம் தானா தேடி வரும், இவர்கள் மத்தியிலும் தன் திறமையால் ஜயிக்கிறார்கள் புதுமுகங்கள் அவர்கள் தான் உன்மையான திறமையானவர்கள்.

ஆயில்யன் said...

//கட்டாய குலத்தொழில் என்றபோது எதிர்ப்பு வந்தது. இப்பொழுது, அவர்கள் விருப்பத்தோடு குலத்தொழில் என்றாகிவிட்டது. பிடித்த தொழில், கவுரவமான தொழில் எனும்போது, யாருக்கு விருப்பமில்லாமல் போகும்?//

ம்ம் வாய்ப்புக்கள் பிறருக்கு சென்றடைவது குறைந்தாலும் எந்த எதிர்ப்புக்குரலும் அதிகம் வருவதில்லை - அரசியல் தவிர்த்து :(

கிரி said...

//இன்னும் சில வருடங்களில், ஹீரோவாக்கிவிட்டு விடுவார்கள்//

பின்ன ..நல்லவேளை ரஜினி கமலுக்கு மகன்கள் இல்லை ;-)

//வாரிசு அறிமுகம் என்பது இன்று எல்லாத்துறைகளிலும் வந்து விட்டது. டாக்டர்கள் வாரிசுகள், பெரும்பாலும் டாக்டர்களாகத்தான் இருக்கிறார்கள்.//

இதற்கும் Dr விஜய்க்கும் சம்பந்தம் உண்டா! ;-)

இந்த இடுகைக்கு சம்பந்தம் இல்லா கேள்வி..

Feedburner RSS Feed ல் நம்முடைய சந்தாதாரர் கணக்கு காட்ட நமது RSS feed ஐ Feedburner க்கு ரூட் செய்தால் தமிழ் மணத்தில் இணைப்பதில் பிரச்சனை வருகிறது மற்றும் நமது பெயர் தமிழ்மணத்தில் தெரிவதில்லை..இதன் காரணமாக readers count தெரிந்து கொள்ள முடிவதில்லை..

ஆனால் நீங்கள் இதை செய்து உள்ளீர்கள்..எப்படி என்று கூற முடியுமா?

சரவணகுமரன் said...

//என்ன ஸ்டாண்ட் பண்றதுக்கு ஒரு தனித்திறமை அல்லது திறமை மேம்படுத்தல் கண்டிப்பாக வேணும் //

ஆமாங்க ஆயில்யன்

சரவணகுமரன் said...

பித்தன், பயங்கரமான கொள்கையா இருக்கே!

சரவணகுமரன் said...

வாங்க கிரி...

நீங்க சொல்லித்தான் இப்படி ஒரு பிரச்சினை இருக்குறது எனக்கு தெரியும்...

தவிர, நான் தமிழ்மணத்தில் இணைப்பேன். ஆனா, நீங்க சொல்றபோல், தமிழ்மணத்தில் நம்ம பெயர் தெரிகிறதா, இல்லையா என்று தெரியவில்லை. அதை நான் கவனித்தது இல்லை. அதனால், எனக்கும் இந்த பிரச்சினை இருக்கலாம்.

நரேஷ் said...

ஒரு டாக்டருடைய பையன் என்பதாலேயே அவர் டாக்டர் ஆகிவிட முடியாது!!! அதற்கென்ற படிப்பு முடிக்கக் கூடிய தகுதி இருந்தால்தான் ஆக முடிகிறது, அதாவது ஒரு தனித்தன்மை தேவைப்படுகிறது...

ஆனால் சினிமாவோ அல்லது அரசியலோ அப்படி இல்லை, ஒரு சிலரைத் தவிர்த்து....தன் தந்தையின் பெயரையோ அல்லது உறவினரின் பெயரையோ வைத்து எந்த தகுதியும் இல்லாமல் அழிச்சாட்டியம் பண்ணும் ஆட்கள் அதிகம் இங்கு, தவிர அவர்கள் உள்நுழைய என்று எந்த தகுதிகளும் தேவைப்படுவதில்லை....

ரெண்டுலியுமே பாதிக்கும் மேல கொடுமையாத்தான் இருக்கு, அதுனால இருக்குற கொடுமையில இந்தக் கொடுமையும் சேந்து தாங்கிக்கிறோம்னு மக்கள் பழகிடுறாங்க...அதான் நடக்குது....

ஏற்கனவே வேட்டைக்காரன் ஸ்டில் பாத்தே குலை நடுங்கிகிட்டு இருக்கறப்ப, அவரு பையன் வேற ஆட்டம் போடுறதா சொல்றீங்க....இனி தமிழ்நாட்டுல எத்தனை தலை உருளப்போவுதோ............

சரவணகுமரன் said...

நரேஷ், அவரு பையன் ஆட்டம் பாட்டம் எல்லாம் இருக்குதான்.

பின்ன, தலைவர் அரசியலுக்கு வர போகிறார் இல்லையா? யார் கலைத்துறையை கவனிக்க?