Friday, October 16, 2009

பேராண்மை

இயக்குனர் ஜனநாதன் விவரம் தெரிஞ்சவர். காடுகளை பற்றி, ஜாதிகளை பற்றி, பொருளாதார அரசியல் பற்றி பல விஷயங்களை வசனங்களில் சொல்கிறார். தமிழில் ஒரு பாரஸ்ட் அட்வெஞ்சர் படம் எடுக்க ஆசைப்பட்டு இருக்கார். ஆனா, ப்ச்....

எனக்கு இந்த மாதிரி படம் பார்க்க பிடிக்கும். கடைசியா, கேப்டன் பிரபாகரன் இப்படி விரும்பி பார்த்தேன். இந்த படமும் சின்ன வயசில பார்த்த அதே தியேட்டர்ல தான் பார்த்தேன். சில காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தாலும், படத்தோடு ஒன்ற முடியவில்லை.



ஜெயம் ரவி தைரியமாக நடித்திருக்கிறார். ஆமாங்க, ஒரு காட்சியில் கோவணத்தோடு வருகிறார். இயக்குனருக்கு இதில் என்ன ஆசையோ? இப்படித்தான், ஈ படத்தில் ஒரு காட்சியில் ஜீவா வருவார். அதிலும், ஜட்டியோடு வர சொல்லியிருப்பார். ஜீவாதான் எஸ்கேப் ஆகி இருப்பார் என்று நினைக்கிறேன்.

ரவி ஸ்மார்டாக இருக்கிறார். ரொம்ப நம்பிக்கையா நடித்திருக்கிறார். வித விதமான பெரிய பெரிய கன்களை தூக்கி சுடுகிறார். கம்பீரமே இல்லாமல், கன்னா பின்னாவென்று சுடுவது போல் இருக்கிறது. எதிரிகளின் திட்டங்கள் அனைத்தையும் யூகத்திலேயே சரியாக சொல்கிறார்.

அஞ்சு பொண்ணுங்க ஓவர் லூட்டி பண்றாங்க. முகம் சுழிக்கும் அளவுக்கு. வடிவேலு வருகிறார். சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஊர்வசி - சொல்ல ஒண்ணுமில்லை.

படத்தில் ஜாதி பற்றி பொன்வண்ணன் பேசும் வசனங்களும், அந்த பெண்கள் பேசும் டபுள் மீனிங் வசனங்களும் ஏராளம். எல்லாம் சென்சாரால் கட் செய்யப்பட்டு, முதல் பாதி பெரும்பாலும் மவுனமாகவே ஓடுகிறது.

இது விஜயகாந்த் நடிக்கவேண்டிய படம். ரவி நடித்திருக்கிறார். வீரப்பனும் இல்லை. பாகிஸ்தான் தீவிரவாதிகளும் பாகிஸ்தானில் பிஸியாக இருப்பதால், அமெரிக்கர்கள் இந்திய காடுகளில் ஊடுருவுகிறார்கள். இந்தியா, ஒரு ராக்கெட் விடுவதை தடுக்க, அமெரிக்கர்கள் இவ்வளவு கஷ்டப்பட தேவையில்லை. சும்மா, சொன்னாலே போதாது? தவிர, நாமளும்தான் மாதத்திற்கு இரு படங்கள் வெளியிடும் சன் பிக்சர்ஸ் போல், அடிக்கடி ராக்கெட் விடுகிறோமே? அவ்ளோ, கஷ்டபட்டுயிருக்க வேண்டாம்.

வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமாக யோசித்திருக்கும் கதாசிரியருக்கு பாராட்டுக்கள். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை சொன்னதற்கு வசனகர்த்தாவிற்கு வாழ்த்துக்கள். (பாம்பு,கியர் வசனங்களுக்காக குட்டுகளும்). இயக்குனர் தமிழ்ப்பட இலக்கணத்தை மீறி எடுக்க, என்ன செய்ய? வேண்டி கொள்கிறேன்.

.

5 comments:

அக்னி பார்வை said...

படத்த இன்னும்பாக்கல ஆன உங்க விமர்சனம் அருமை

சரவணகுமரன் said...

நன்றி அக்னி பார்வை

Anonymous said...

நல்ல விமர்சனம்

பேராண்மை ஆதவனை விட பல மடங்கு பெட்டர்.

No Name said...

Sir, thanks very much for pointing out the double entendres the characters speak.Most of the reviews in the media has comfortably avoided it. In fact, you have underplayed it,too. A perverted bastard like Jananathan must be hanged for showing women in poor light.

ரவி said...

"At Dawn It's Quiet Here" என்ற திரைபடத்தின் அப்படமான காப்பி . லிங்க் (http://www.youtube.com/watch?v=uVsKl-m3uGw) .